எடுத்த சபதம் முடித்தார் மோடி-
உலகில் உள்ள 7 கண்டங்களில் அண்டார்டிகா கண் டத்தை தவிர ஆசியா ஆப்ரிக்கா ஐரோப்பா தென்
அமெரிக்கா வட அமெரிக்கா
ஆஸ்திரேலியா என்று 6 கண்டங்களில் இருக்கும்
58 நாடுகளுக்கு மோடி அரசு முறை பயணமாக
சென்றுள்ளார்.
ஆனால் ஆசியா கண்டத்தில் உள்ள மாலைத்தீவு
க்கு மட்டும் மோடி இதுவரை சென்றதில்லை. 2015 ம் ஆண்டு மார்ச் மாதத்திலேயே மோடி மாலைத்தீவு
க்கு சென்று இருக்க வேண்டும். ஆனால் அப்போது
மோடி வைத்த ஒரு கோரிக்கையை அப்போதைய
மாலைத்தீவு அதிபர் அப்துல்லா யாமீன் கண்டு
கொள்ள வில்லை.
அந்த கோரிக்கை என்னவென்றால் காபூ அடாலில்
உள்ள மாபுஷி ஜெயிலில் அடைக்கப்பட்டு இருந்த
இந்தியா வின் நண்பரான முகமது நஷீத்தை விடு
தலை செய்ய வேண்டும் என்றார்.இதை ஏற்றுக்
கொள்ள முடியாத அப்துல்லா யாமீன் இந்தியா
மாலைத்தீவுகளின் உள் நாட்டு விவகாரங்களில்
இந்தியா தலையிட வேண்டாம் என்று இந்திய
அரசுக்கு கடுப்பேற்ற மோடி தன்னுடைய மாலை த்தீவு பயணத்தை ரத்து செய்தார்.
அந்த நேரத்தில் மோடி ஒரு சவால் செய்ததாக
மாலைத்தீவு மீடியாக்களில் ஒரு செய்தி வந்தது
மாலைத்தீவு அதிபர் அப்துல்லா யாமீனை பதவி
யில் இருந்து இறக்கிய பிறகே புதிய அதிபர்
பதவியேற்கும் அன்று மாலைத்தீவு மண்ணில்
காலடி வைப்பேன் என்று சபதம் செய்துள்ளார்
என்று செய்திகள் வெளிவந்தது.
இது நிகழ்ந்து மூன்றரை ஆண்டுகள் முடிந்து
விட்டது. அப்துல்லா யாமீனை வீட்டுக்கு அனுப்பி
விட்டு இதோ புதிய அதிபர் இப்ராஹிம் முகமது
ஷோலி பதவி ஏற்பு விழாவில் மோடி பங்கேற்று ள்ளார்..இதில் சந்தோசமானவிசயம் என்ன என்றால் யாரை விடுதலை செய்தால்தான் மாலைத்தீவு மண்ணில் காலடி வைப்பேன்என்று அப்துல்லா யாமீனுடம் சவால் விட்டாரோஅந்த கைதியான முன்னாள் மாலைத்தீவு அதிபர்முகமது நஷீத் இன்று மோடியோடு இருக்கிறார்.
சீனாவின் கைக்கூலியாக இருந்த அப்துல்லா
யாமீனை வீட்டுக்கு அனுப்பி விட்டு இ்ந்திய ஆதரவு
அரசினை நடத்தி வந்த முன்னாள் அதிபர் முகமது
நஷீத்தின் மாலைத்தீவு ஜனநாயக கட்சியில்
இருந்து இப்ராஹிம் முகமது ஷோலியை மாலைத்
தீவு அதிபராக கொண்டு வர மோடியும் இந்தியா வின் ரா நிறுவனமும் மேற்கொண்ட நடவடிக்கை
கள் மாலைத்தீவின் மண்ணில் மறைந்துள்ள
ரகசியங்களாகும்.
இதெல்லாம் பெரிய விசயமா? என்று நீங்கள் நினைக்கலாம்.இந்தியாவிலேயே மோடியை
எதிர்க்க இன்னமும் எதிர்க்கட்சி களிடையே ஒற்றுமை இல்லாத பொழுது ஒரு சர்வாதிகார ஆட்சி நடைபெற்று வந்த மாலைத்தீவில் எதிர்கட்சிகளி
டையே ஒற்றுமை ஏற்படுத்தி ஒரு பொது வேட்பா ளராக இப்ராஹிம் முகமது ஷோலியை முன்னிறு த்தி ஆட்சி மாற்றத்தை இந்தியா ஏற்படுத்தி யுள்ளதை நினைக்கும் பொழுது பெருமையாக
இருக்கிறது.
மாலைத்தீவில் உள்ள மாரோ அடோல் தீவில் இந்தியப் பெருங்கடலில் சீனா உருவாக்கி யுள்ள
கடற்படை தளம் இனி என்னவாகும்? சீனா உரு
வாக்கிய முத்து மாலையின் கடைசி முத்தையும்
மோடி அழித்து விட்டார்.
இனி இந்தியா மாலைத்தீவு இடையே உறவு மேம்படு வதோடு இந்தியா மாலைத்தீவு களில் துறைமுக
அபிவிருத்தி ஏர்போர்ட் நவீனமயமாக்கம் என்று
உள்ளே நுழைந்து மாலைத்தீவுகளை இந்தியாவின் கஸ்ட்டிக்கு கொண்டு வந்து விடும்.
இன்னொரு விசயம் தெரியுமா? மாலைத்தீவில்
நடைபெற்ற ஆட்சி மாற்றத்தை சீனா நிச்சயமாக
எதிர்பார்க்க வில்லை .இந்தியப் பெருங்கடலில்
உள்ள முக்கிய நாடுகளான ஸ்ரீலங்கா மற்றும்
மாலைத்தீவு தான் சீனாவின் முத்துமாலை த்
திட்டத்தில் இருந்த முக்கிய நாடுகள்.
இதில் ஸ்ரீலங்காவில் ஏற்கனவே 2015 ஜனவரி
யில் இந்தியா மாலைத்தீவு மாதிரியே எதிர் க்கட்சி
களை ஒன்றினைத்து சீனாவின் கைக்கூலி ராஜ
பக்சேவை ரா வின் துணையுடன் வீட்டுக்கு அனுப்பி
விட்டார். இந்த நிலையில் எஞ்சியிருந்த மாலைத்தீவு வும் சீனாவின் கையை விட்டு போனதால் குழப்ப த்தில் இருந்த சீனா பதிலுக்கு அவசரப்பட்டு
இலங்கையில் மீண்டும் ராஜபக்சேவை கொண்டு
வந்து தோல்வியை தழுவியது.
இப்படி இந்தியப் பெருங்கடலில் இந்தியாவுக்கும்
சீனாவுக்கும் நடைபெறும் பரமபத விளையாட்டில்
இந்தியா வின் சார்பில் விளையாடும் மோடி மிக
அழகாக சீனப் பாம்புகளை தாண்டி மாலைத்தீவு மாதிரியான ஏணியில் ஏறி உலகத்தலைவராக உயர்ந்து வருகிறார்..
.
No comments:
Post a Comment