R. Balu:
..் இந்தியாவிற்கு எதிரான இந்திய காங்கிரஸ் ்..
மணீஷ் திவாரி காங்கிரஸ் கட்சியின் ராகுல்போல டம்மி பீஸ் அல்ல..
அக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் மட்டுமல்ல. உச்ச நீதிமன்றத்தின் வக்கீலும் கூட..
அவர் சொல்வதை நாம் வேண்டுமானால் அசந்தர்ப்பமாக ஏதோ கனவு கண்டதுபோல அலட்சியப்படுத்தலாம்.
ஆனால் இந்த ‘ட்வீட்’டில் மனீஷ் என்ன கேள்விகள் எழுப்புகிறார் என்று பார்க்கலாமா?
1. டிமானிடைசேஷனுக்குப் பிறகு ”வெறும்: 99.30% 1000,500 ரூபாய் நோட்டுக்கள் தான் ரிசர்வ் வங்கிக்குத் திரும்பி வந்திருக்கின்றனவா? (இங்கே “வெறும்” என்பதைக் குறிப்பிட்டுக் காட்டியிருப்பதற்கு ஒரு காரணம் இருக்கிறது. எல்லாரும் 100-க்கு 99.30 திரும்பி வந்திருச்சு; மிச்சம் இருப்பது ‘வெறும்’ 0.70% தானே? இதற்கா இப்படி எங்களையெல்லாம் அவதிக்கு உள்ளாக்கினார் மோடி என்றெல்லாம் கேட்டார்கள். ஆனால், திவாரிஜி ’வெறும் 99.30% தான் திரும்பி வந்திருக்கிறதா?’ என்று கேட்பதை கவனியுங்கள். நம்பிக்கையில்லையா, அடுத்த வாக்கியத்தை வாசிப்போம்.
2. ‘அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட நோட்டுகள், கூட்டுறவு வங்கிகளில் முடங்கியுள்ள நோட்டுகள், நேபால், பூடான் நாடுகளின் கருவூலங்களில் உள்ள நோட்டுகள் மற்றும் இந்திய வம்சாவளியினர் (PIO = People of Indian Origin) கைவசம் இருக்கக்கூடிய நோட்டுக்கள் ஆகியவற்றையும் கணக்கிட்டால், இந்த 99.30% அதிகரித்து 100%-க்கும் மேலே போகுமே? - என்று அடுத்த கேள்வியை எழுப்பியிருக்கிறார் மணீஷ் திவாரி.
நம்மில் பலருக்குப் பொருளாதாரம் குறித்துத் தெரியாமல் இருக்கலாம். ஆனால், எளிமையான கணிதம் கூடவா தெரியாது. அரசாங்கம் அச்சடித்த ரூபாய் நோட்டுக்களை விட (100%) அதிகமான ரூபாய் நோட்டுக்கள் கணக்கில் கொண்டு வரப்படலாம் என்று முன்னாள் மத்திய அமைச்சரே சொல்கிறார் என்றால் என்ன பொருள்?
கணக்கிலேயே காட்டாமல், 1000,500 ரூபாய் நோட்டுக்களை முந்தைய அரசாங்கம் அச்சடித்து புழக்கத்தில் விட்டிருக்கிறார்கள் என்றுதானே பொருள்? அதாவது ரிசர்வ் வங்கியின் புத்தகங்களில் வெறும் 100 ரூபாயாக இருந்த நோட்டுக்கள் உண்மையிலேயே 100-க்கும் மேலாக (எவ்வளவு என்று அவர் கோடிட்டும் காட்டவில்லை) இருந்திருக்கிறது என்றால், பொருளாதார மேதை மண்ணாய்ப்போன மன்மோகன் சிங், பணப்’பசி’ ஒருபோதும் குறையாத ப.சிதம்பரம், அமெரிக்கன் டிட்டர்ன் ரகுராம் ராஜன் ஆகியோர் மூவரும் சேர்ந்து அளவுக்கு அதிகமான பணத்தைப் புழக்கத்தில் விட்டு நமது பொருளாதாரத்தைப் பாழடித்திருக்கிறார்கள் என்றுதானே பொருள்?
ரிசர்வ் வங்கியின் இருப்பில் உள்ள தங்கத்துக்கு ஏற்றாற்போல மட்டுமே ரூபாய் நோட்டை அச்சடித்துப் புழக்கத்தில் விடவேண்டும் என்பது விதி. ( சுருக்கமாகச் சொல்லியிருக்கிறேன்). ஆனால், இருப்புக்கு அதிகமாக ரூபாய் நோட்டை அச்சடித்தால் என்னாகும்? ஸிம்பிள், பணவீக்கம் அதிகமாகும். UPA-II ஆட்சிமீது மக்களுக்கு அதிருப்தி ஏற்பட பணவீக்கமும் ஒரு முக்கிய காரணமென்று ப.சிதம்பரமே சொல்லியிருக்கிறாரே!
எனவே, டிமானிடைசேஷன் சமயத்தில், பலர் கூறியதுபோல, முன்னாள் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் ‘நல்ல’ நோட்டுக்களையே கூட கணக்கில் காட்டாமல் அச்சடித்துப் புழங்கவிட்டு ‘கள்ள’ நோட்டுக்களாக்கி பொருளாதாரத்தை அதலபாதாளத்துக்குக் கொண்டு செல்லும் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
இது காங்கிரஸ் கட்சியின் ஒப்புதல் வாக்குமூலம் என்று குதூகலிப்பதற்கில்லை. சர்வதேச நிதி நிறுவனங்கள், பொருளாதார நிறுவனங்கள் மணீஷ் திவாரியின் ‘ட்வீட்’டில் உள்ள விபரீதத்தைப் புரிந்து கொண்டால், 2014-க்கு முன்னால் இந்தியாவில் இப்படித்தான் பொருளாதாரத்தை நிர்வகித்தார்களா என்ற சந்தேகம் கொள்ளலாம். அதனால், தற்போது உள்ள அரசுக்கே கூட சில நெருக்கடிகள் நேரிடவும் வாய்ப்பிருக்கிறது.
ஒருவேளை, கடைசி அஸ்திரமாக, காங்கிரஸ் தங்களது குற்றத்தையே ஒப்புக்கொண்டு நடப்பு ஆளும்அரசை சிக்கலில் சிக்கவைக்க முயல்கிறார்கள்.
ட்வீட் லின்க்:
https://twitter.com/ManishTewari/status/1038609022629437441?s=19
https://twitter.com/ManishTewari?s=09
பணமதிப்பிழப்பு பற்றி நம்ம வாத்தியார் போட்ட பதிவு:
.் பணமதிப்பிழப்பு ்.
டீமானிட் பண்ணினது சுமார் 16 லட்சம் கோடி...
பேங்குக்கு திரும்ப வந்தது சுமார் 15 + லட்சம் கோடி...
இப்போ ஆர்பிஐ கணக்குல மீதம்னு வரவு ஆகாததுன்னு சொல்வது சுமார் 10 ஆயிரம் கோடி...
புது நோட்டு அடிச்ச வகைல சுமார் 8ஆயிரம் கோடி போச்சு...
சோ... 2 ஆயிரம் கோடிதான் மிச்சம்...
கூட்டிக்கழிச்சு.. பெருக்கி ஒதுக்கி... ஓரம்போட்டு கையை கழுவியாச்சு...
இனி என்ன நடக்கும்?
2000₹ நோட்டு மீது அறிவிக்கப்படாத டீமானிட்டை நிகழ்த்துவதால்..
இனி இருப்பிடத்துல இருந்து வெளியாகும் 2000₹ நோட்டு எதுவும் பொது புழக்கத்துக்கே வராமல் போகலாம்...
சரி.... ப்ளஸ் , மைனஸ்...
இருக்கு.. இருக்கு...
ப்ளஸ்:-
1) கட்டுக்குள்ளே வராமல் தாறுமாறான ஏற்ற இறக்கமாய் திரிஞ்ச பணவீக்கம் ஆவரேஜ் அளவை தொடமுடியாமல் இன்னும் தடுமாறுது..
2) பணத
்தை வெறும் பேப்பர் குப்பையாக கொட்டினவன்... டீமானிட்டுக்கு பிறகான ரெய்டுகளில் மாட்டினவன்.. அது தொடர்பாக உடனே கைதான அதிகாரிகள் வழியே... நாசமாய் போயிருக்கவேண்டிய ஒரு பரிவர்த்தனை அமைப்பு.. சாவின் விளிம்பில் இருந்து உயிர் பிழைச்சு வந்திருக்குது...
3) அதிபுத்திசாலித்தனமாய் 2000₹ நோட்டை அறிமுகப்படுத்தி... புரட்சி போராளியில் இருந்து புண்ணாக்கு போராளீ வரைக்கும்.... அவனுகளோட கவனத்தை வங்கி அமைப்பை விட்டு... பொருளாதாரம் பக்கம் டைவர்ட் பண்ணினது...
மைனஸ்:-
1) பண மாற்றத்திற்கான காலக்கெடுவை அதிகரிச்சது...
(யார் யாருக்கு பயன்பட்டு இருக்கும்னு நமக்கு நல்லாவே தெரியும்..)
2) வங்கி அமைப்பை முன்பே சீரமைக்காமல்... தங்கள் முயற்சிக்கு வங்கிகளையே சோதனை எலிகளாக பயன்படுத்தியது..
(மக்களுக்குதான் அதிக சிரமமாச்சு..)
3) மேல் மட்டத்தின் மீது நடவடிக்கை எடுக்க முடியாத அளவுக்கு ஆபத்தான சுழலில் சிக்கிக்கொண்டது..
(இனிமேலாவது சட்டங்களை மீண்டும் இதுபோல நடவாதிருக்க சட்டங்களை சீரமைப்பார்கள் என நம்புவோமாக...
என்னோட பார்வையில்:-
1) எல்லாருக்கும் எல்லாம் தெரிஞ்ச நிலையில் ஆர்பிஐ மற்றும் அரசே பழியை ஏத்துக்கிட்டு கணக்கை நேர் பண்ணினது செம ப்ளான்...
2) கள்ளப்பணம், கருப்பு பணம் என்ற மூர்க்கமான காமடி பேச்சுகளை நீர்த்துப்போக வச்சது...
3) ஆரம்பித்த விசயத்தை தெளிவாக முடிச்சு கை கழுவினது அதிபுத்திசாலித்தனமான முடிவு...
போஸ்ட்டோட லின்க்:
https://m.facebook.com/story.php?story_fbid=473995313092376&id=100014457347942
No comments:
Post a Comment