Sunday, 18 November 2018

வ.உ.சியின் தியாகம்

தன்னலம் பார்க்காமல் நாட்டிற்கு உழைத்தால் நடுத்தெருவில் தான் நிற்க வேண்டும் என்பதை காலம் நமக்கு உணர்த்த பூமிக்கு அனுப்பி வைக்கப்பட்ட பாடம் தான் வ.உ.சி என்னும் உத்தமர். கண்ணியம் மிக்க காங்கிரசால் கழட்டி விடப்பட்டு நடிகர் சிவாஜியால் அடையாளம் காட்டப்பட்டவர்.

ஆங்கிலேயரை எதிர்த்து சுதேசி இயக்கம் ஆரம்பித்த வ.உ.சியின் சுதேசி இயக்கத்தின் முதுகெலும்பை உடைத்தெறிவது என்று ஆங்கிலேயன் முடிவெடுத்தான். சுதேசி கப்பல் நிறுவனத்தை விட்டு விலகினால் ரூ.1,00,000 கொடுப்பதாக வ.உ.சிக்கு ஆசை காட்டப்பட்டது. அவர் மறுத்துவிட்டார்.

‘இனி ஆங்கிலேய கப்பல்களில் கட்டணமே இல்லாமல் ஓசிப் பயணம் செய்யலாம்', என்று ஒரு அறிவிப்பை வெளியிட்டான். அதோடு மட்டுமல்ல பயணிப்பவர்களுக்கு ஒரு குடையையும் இலவசமாக வழங்கினான். ஓசிப் பயணத்திற்கு இலவசம் ஒரு குடை. இலவசங்களும், விலையில்லா பொருட்களும் தன்னையும், தன் நாட்டையும் சேர்த்து அழிக்கவல்லது என்பதை அன்றே உணர்த்தியது இந்த சம்பவம்.

தன்மானத்தையும், சுதேசி இயக்கங்களையும் புறக்கணித்த மக்கள் ஆங்கிலேய கப்பலில் பயணிக்கத் தொடங்கினர். சுதேசி கப்பல் பயணிக்க ஆளில்லாமல் கரை ஒதுங்கியது. மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்தார் வ.உ.சி. அவர் சிறை சென்ற பின் அவரின் கப்பல் ஆங்கிலேயருக்கே விற்கப்பட்டது.

பிறகு, 1912-ஆம் ஆண்டு டிசம்பர் 24-ஆம் நாள் வ.உ.சி. விடுதலை அடைந்தார். சிறை வாசலை பார்த்த வ.உ.சி அதிர்ந்து போனார். சிறைக்கு போகும் போது மக்கள் வெள்ளத்தில் மிதந்து சென்றவர்; இன்று அவரை வரவேற்க யாருமில்லை. சற்று தொலைவில் ஒரு இருமல் சத்தம். அந்த இருமலுக்குச் சொந்தமானவர் சுப்ரமணியம் சிவா. தொழு நோயால் பாதிக்கப்பட்டு விரல்களை இழந்து கூனிக் குறுகி போர்வைக்குள் தன்னை மறைத்து நின்றிருந்தார். சுப்ரமணியம் சிவாவிற்கு சிறை அளித்த பரிசு தொழு நோய்.

வாழ்க்கையில் ஆங்கிலேயர்களை மட்டுமல்ல தன்னுடைய வறுமையையும் எதிர்த்து போராடும் நிலைக்கு தள்ளப்பட்டார். அதற்காக சென்னை, கோயம்பத்தூர், கோவில்பட்டி, தூத்துக்குடி ஆகிய இடங்களில் வசித்தார். சில வியாபாரங்களையும் செய்து பர்த்தார். எதுவுமே அவருக்கு கை கொடுக்கவில்லை.

பெரும் செல்வந்தராய் மிடுக்கோடு வாழ்ந்த வ.உ.சி, மகாத்மா காந்தியிடமிருந்து 347 ரூபாய் 12 பைசா பெறுவதற்கு கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் போராடினார்.

வாழ்க்கை மாற்றம் முடிவுக்கு வந்தது.

‘என்று தணியும் இந்த சுதந்திர தாகம்? என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்?' என்ற பாடலை கேட்டபடி வ.உ.சி தன் உயிரை விடுவதாக ‘கப்பலோட்டிய தமிழன்' படத்தில் காட்சி அமைந்திருக்கும்.

ஆனால், தமிழகத்தின் இன்றைய அரசியல் நிலையை நினைத்தால் மிக கேவலமாக  இருக்கிறது. புதிதாக கட்சி தொடங்குகிறேன் அதற்கு முப்பது கோடி வேண்டும் என்று தொண்டர்களிடம் கேட்கும் இன்றைய டிவிட்டர் அரசியல்வாதிகளுக்கும்,

சுரண்டல், ஊழல் ஆகியவற்றால் பணம் சம்பாதித்து சொகுசு காரில் ஒய்யாரமாக வலம் வரும் அரசியல்வாதிகளுக்கும்,

ஊரான் உழைப்பையும், ரத்தத்தையும் உறிஞ்சி மக்களை நாட்டிற்கு எதிராக திசை திருப்பி பல நாடுகளுக்கு பறந்து உல்லாசமாய் வாழும் வேலைவெட்டியற்ற சமூக போராளிகளுக்கும்,  அவர்களின் அடிமைகளுக்கும் வ.உ.சியின் தியாகம் புரியாது.

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...