Sunday, 18 November 2018

பிரசவ விடுமுறை தரும் நிறுவனங்கள்🏢- 7 வார 💸சம்பளத்தை 🏛அரசே வழங்குமென மத்திய அரசு அறிவிப்பு

*பிரசவ விடுமுறை தரும் நிறுவனங்கள்🏢- 7 வார 💸சம்பளத்தை 🏛அரசே வழங்குமென மத்திய அரசு அறிவிப்பு👏*

✍இளவேனில்🌄

🏛அரசு மற்றும் தனியார் 🏢நிறுவனங்களில் பணியாற்றும் 👩பெண்களுக்கு 12 வாரமாக இருந்த பிரசவ விடுப்பை கடந்த ஆண்டு 26 வாரங்களாக உயர்த்தி⏫ மத்திய 🏛அரசு அறிவித்தது🔈. விடுமுறை நீட்டிப்பை பல 🏛அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் வழங்க மறுப்பதாக அரசுக்கு புகார்கள் வந்தது. இதையடுத்து 💸15 ஆயிரம் ரூபாய் சம்பளம் பெறும் பெண் தொழிலாளர்கள் பிரசவ விடுப்பு எடுக்கும் 📆26 வார காலத்தில் 7 வாரங்களுக்கான 💸சம்பளத்தை வேலைவழங்கும் 🏢நிறுவனங்களுக்கு 🏛அரசே வழங்கும் என்று மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சக செயலாளர் ராகேஷ் ஸ்ரீவத்சவா அறிவித்துள்ளார்🔈. மேலும், இதனால் கர்ப்பிணி ஊழியர்கள் மீண்டும் பணிக்கு திரும்பும்போது எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் கூறப்பட்டுள்ளது🗣.

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...