Sunday, 18 November 2018

2.ஆண்டுக்கு_ஒரு_முறை_FC_வாங்கினால்_போதும்..#மோட்டார்_வாகன_சட்டத்தில்_மாற்றம்

R. Balu:

2.ஆண்டுக்கு_ஒரு_முறை_FC_வாங்கினால்_போதும்..#மோட்டார்_வாகன_சட்டத்தில்_மாற்றம்

நேஷனல் பர்மிட் வாகனங்களுக்கான விதிமுறைகளை மாற்றியுள்ளது நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம். மத்திய மோட்டார் வாகன சட்டம் 1989-ல் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றங்களின் படி இனி நேஷனல் பர்மிட் வாகனங்களுக்கு அடர்ந்த பிரவுன் நிறம் தேவையில்லை. இரண்டு ஓட்டுநர்கள் இருக்கவேண்டும் என்ற விதியும் தளர்த்தப்பட்டுள்ளது.

#மோட்டார்_வாகன_சட்டம் - லாரி

எல்லா நேஷனல் பர்மிட் வாகனங்களிலும்  National Permit அல்லது  NP என்று முன்பக்கத்திலும், பின்பக்கத்திலும் பெரிய எழுத்துகளில் பொறிக்கப்பட வேண்டும். ட்ரெயிலர் லாரியாக இருந்தால் பின்பக்கம் மட்டுமில்லாமல் இடதுபக்கமும் இருக்க வேண்டும்.

ஆபத்தான பொருட்களை ஏற்றிச் செல்லும் டேங்கர் லாரிகள் வெள்ளை நிறத்தில் இருக்கவேண்டும். எந்த க்ளாஸ் வகை உள்ளே இருக்கிறது என அந்த டேங்கரில் பொறிக்கப்பட்டிருக்கவேண்டும். முன்-பின் பக்கங்களில் ரிஃப்ளெக்டிவ் டேப்கள் ஒட்டப்படுவது மட்டுமில்லாமல்  FASTag இருக்கவேண்டும்.

எல்லா வாகனங்களிலும் டிராக்கிங் டிவைஸ் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். இதற்கு முன்பு ஓராண்டுக்கு ஒருமுறை  FC வாங்கவேண்டும் என்றிருந்த விதியைத் தளர்த்தி 8 ஆண்டுகளுக்குள்ளான வாகனங்களுக்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை என்றும் அதற்கு மேல் உள்ள வாகனங்களுக்கு ஒரு ஆண்டுக்கு ஒருமுறை என்றும் மாற்றப்பட்டுள்ளது. புதிய வாகனங்களுக்கு 2 ஆண்டுகளுக்கு FC தேவையில்லை.

செக்‌ஷன் 138 B-யிலும் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி இந்த வாகனங்களில் எந்தப் பொருளையும் வெளியில் தெரியும்படி கொண்டுசெல்லக் கூடாது. கன்டெய்னரிலோ அல்லது டார்பாலின் போர்த்தியோ கொண்டுசெல்ல வேண்டும்.

டிரைவிங் லைசன்ஸ், இன்ஷூரன்ஸ்,  RC, FC, பெர்மிட் போன்ற டாக்குமென்ட்டுகளை டிஜிட்டலாக கொண்டுசெல்லாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...