#டிமானிட்டேஷன்_சாதித்தது_என்ன?
#இதை_செய்ய_அன்று_காரணம்_என்ன?
நான் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தேன், என் முந்தைய தலைமுறை பாதிக்கப்பட்டிருந்தது, அன்று இரவு இந்த அறிவிப்பு வரும் வரை,
#துவரம்_பருப்பு_ரூ.225 , #உளுத்தம்_பருப்பு #ரூ240 இன்று துவரம் பருப்பு ரூ65 உளுத்தம் பருப்பு ரூ70
இது ஒரு உதாரணமே
அறிவிப்பு எனக்கு நிரம்ப சந்தோஷம் கொடுத்தது. நான் திருச்சியில் இருந்து காரில் சென்னை அடைந்த நேரம் இந்த அறிவிப்பு.
அதிகபட்சமாக வங்கியில் க்யூவில் நின்று காசு கட்டியது தவிர, என் அன்றாட வாழ்விலே எனக்கு பெரிய ப்ரஸ்னை எதுவும் இல்லை, ஒரு நோட்டீஸ் வருமான வரித் துறையிடம் இருந்து , அதிக பணப்பரிமாற்றம் கணக்கில் இருப்பதால் வந்தது, அதற்கு பதிலளித்து அது நிலுவையில் இருக்கிறது.
மற்றபடி தேசத்துக்கு இதனால் என்ன பாதிப்பு, விலைவாசி குறைந்ததா? என்றால் ஆம், பதுக்கல் பேர்வழிகளால் எதையும் பதுக்க முடியவில்லை, பொருட்கள் விலை சரிவு. இங்கே கீழே சற்று விரிவாக இதைப் பார்ப்போம்.
அன்று திரு குருமூர்த்தியை நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது, இது ஒரு குழு நடத்திய நிகழ்ச்சியில், அவரிடம் கேட்ட கேள்வி,
“சார் ரிசர்வ் வங்கிக்கு உண்மையில் இது வரை எத்தனை நோட்டுக்கள் அச்சடிக்கப்பட்டிருக்கிறது என்ற கணக்கு தெரியுமா? அவர்களிடன் அந்த விவரம் சரியாக இருக்கிறதா? இது சரியென்று சொல்ல யாரால் முடியும்?
மனிதர் என்னை பார்த்தார், என் கேள்வியின் ஆழம் புரிந்து கொண்டார், மென் முறுவலுடன் சிரித்துக்கொண்டே , வேறு கேள்விகள் கேளுங்கள் என்றார்,
நண்பர்களே, இது தான் உண்மை, ரிசர்வ் வங்கிக்கு நிச்சயம் இந்த கணக்கு தெரியுமா என்றால்? அது பெரும் கேள்வி அதில் குழப்பம், அதை திரு மோடி அன்று கேள்வியாக கேட்டிருந்தால் நம் நாட்டின் மானம் உலக அரங்கில் பெரும் கப்பல் ஏறியிருக்கும்.
இது தான் காங்கிரஸ் ஆட்சியின் அவலமும் லட்சணமும்.
#டிமானிட்டேஷன், செய்ய வேண்டிய அவசியம் என்ன?
நாட்டில் கருப்புப்பணம் அதிகமாக புழங்கியது, பணத்துக்கு மதிப்பு இருந்தாலும் அதன் உண்மையான மதிப்பு உலக அரங்கத்தில் குறைந்து கொண்டே,
இன்னொரு புறம் தேசத்தில் அதிக அளவில் தீவிரவாத கும்பலும் மதமாற்ற கும்பலும் கருப்புப்பணத்தால் கபளிகரம் செய்து கொண்டு...
வங்கிகளில் இஷ்டத்துக்கு திரு ப சிதம்பரம் மற்றும் காங்கிரஸ் சிபாரிசினால் கடன் கொடுக்கப்பட்டு வங்கிகள் மொத்தமாக திவாலாகும் நிலைமை.
கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழல், ஒரு அரசன் தான் ஆட்சியில் இருப்பதை விட, தன் ஆட்சியில் மக்களின் எதிர்காலத்துக்கு நல்லது செய்து விட வேண்டும் என்று நினைப்பது தான் அறம் சார்ந்த ஆட்சியாகும்.
#டிமானிட் செய்ய எடுத்த முடிவும் அதன் செயலாக்கமும்
எடுத்த முடிவு உறுதியானது, அன்று காலை பதினோரு மணிக்கு இந்தியாவில் இருக்கும் அனைத்து வங்கிகளின் சேர்மன் மற்றும் உயரதிகாரிகள் டில்லிக்கு வரவழைக்கப்பட்டனர், அவர்கள் இரவு ஏழு மணி வரை அறையில் அமர்த்தப்பட்டு , என்ன விவாதம் இன்று தெரியாத நிலையில் அமர்ந்திருக்க,அவர்கள் வாராக் கடன் பற்றீய மீட்டிங் என்று நினைத்துக் கொண்டிருக்க
இரவு பிரதமரின் அறிவிப்பு வரும் சமயம் தான் அவர்களுக்கும் இது அந்த அறையில் இருந்தபடியே ஒரு செய்தியாக,
அன்று இரவு ஆரம்பித்த அவர்கள் வேலையும் திட்டமும் செயல்பாடுகளும், இத்தனை பெரிய தேசத்தில் பல கருப்புப் பண முதலைகளை மீறி, பல அரசியல் திருடர்களை மீறி, பல திருட்டு வங்கி அதிகாரிகளை மீறி, செயல்படுத்தப் படவேண்டுமென்றால், அது ஒரு பெரிய சவால் தான்,
இதை இப்படித்தான் சொல்லாமல் டக்கென்று செய்ய வேண்டிய நிலை, சமாளித்து விடலாமென்ற நம்பிக்கையை பல திருட்டுக் கும்பல் தகர்த்தெறிய, ஆனாலும் அந்த முதல் இரண்டு வாரங்கள் மிகவும் கடினமாக, பின்னால் மெதுவாக சகஜ நிலை திரும்பியது. இன்னும் சற்று கவனமாக இதை நடைமுறைப் படுத்தியிருக்கலாம் என்று பலர் எக்ஸ்பெர்ட் கமெண்டிடலாம், ஆனால் ஒரு ஊரை காப்பாற்ற வேண்டுமானால் சில சமயம் ஒரு வீட்டை தாக்கியே ஆகவேண்டிய நிலை இது.
#என்ன பலன் கிட்டியது இதனால்?
மக்கள் நடுத்தர மக்கள் சற்று பணம் கிடைக்க அவதிப்பட்டனர், உண்மையில் எனக்கு ஒரு ப்ரஸ்னையும் இல்லை, ஆனால் வருமான வரியிடம் இருந்து ஒரு நோட்டீஸ், எதற்காக இந்த இரண்டு ஆண்டுகளில் உங்கள் வங்கியில் இத்தனை டிரான்ஸாக்ஷன் என்று அதை குறிப்பிட்டு விளக்கம் கேட்டு,
இத்தனைக்கும் நான் அப்பொழுது மாத சம்பளக்காரன். சில முறை பெரும் அளவில் காஷ் டெபாஸிட் செய்திருந்தேன் என் கணக்கில்.
முதலில் கருப்புப் பணம் கொண்டவர் வங்கியில் கட்டினார்கள் மொத்த பணத்தையும் கட்டியவர்கள் விவரம் சேகரிக்கப்பட்டது. வெளியில் புழங்கிய பெரும் பணம் வங்கியில் வந்தது, கடனால் திவாலாக வேண்டிய வங்கிகள் எல்லாம் பெரும் அளவு பணம் உள்ளே வர, அவை தப்பித்தன, இன்று வங்கிகள் வாராக்கடன் மற்றும் NPA எவ்வளவு என்று பாருங்கள், இத்தனை பணம் வங்கிக்குள் வரவில்லை என்றால் 2008 இல் அமெரிக்காவில் ஆனது போல நமது ஊரும் ஆகியிருக்கும், நல்லவேளை கொடுத்த கடனை விட அதிகம் சேமிப்பாக நம் வங்கிகளில் இருந்ததால் வங்கிகள் இன்றும் பிழைத்த நிலையில்.
தீவிரவாதிகளால் பணப்புழக்கம் செய்ய முடியவில்லை, ஒரு லெவலுக்கு மேல் பணம் வங்கியில் கட்ட இயலாமல் பலர் கருப்புப் பணம் வைத்து தவித்தனர், இப்பவும் பல்லாயிரக்கணக்கில் ஆயிரம் ஐ நூறு நோட்டுக்கள் மதிப்பிழந்து வெளியே இருக்கின்றன, ஆனால் ரிசர்வ் வங்கி சொல்லுவது 98 சதவிகிதம் பணம் வந்துவிட்டதென்று.
ஆக இப்ப என் முதல் கேள்விக்கான பதிலை நாம் எங்கே பெற முடியும்.? அது சிதம்பர ரகசியம் அன்றோ?
அதிக பணம் கட்டிய்வர்கள் அனைவருக்கும் நோடீஸ் அனுப்பி விளக்கம் கேட்டு அவர்களை குடையத் தொடங்கிவிட்டது வருமானவரித்துறை, நம் நாட்டுச் சட்டம் கொடுக்கும் தைரியத்தில் காலம் ஆகிறது இவை எல்லாம் கணக்கு முடித்து பெரும் பணம் அரசு கணக்கில் வருவதற்கு என்பது தான் உண்மை.
மேலும் இப்படி பலர் பணம் கட்டியதால் அவர்கள் வருமான வரி கட்டும் நிலைக்கு ஆளாக, பெருமளவு வருமான வரி இரண்டு ஆண்டுகளில் வசூலிக்கப்பட்டது, கிட்டத்தட்ட மூன்று லட்சம் போலி பணப் பரிமாற்றம் செய்யும் நிறுவனங்கள் மூடப்பட்டன, இதை அடுத்து எடுத்து வந்த ஜி எஸ் டி இன்னமும் இறுக்க, நேர்மையான வியாபார பரிவர்த்தனம் இந்தியாவில் அமையத் தொடங்கியது.
இதன் பலனை உடனே நாம் காண்பது சாத்தியமில்லை என்பதை உணராத பலர் இதை குற்றமாக்கி கேலி செய்து எள்ளி நகையாட, மோடி கவலையே படாமல் அடுத்து ஜிஎஸ்டி யையும் கொண்டு வந்து , இன்று வர்த்தகம் சரிவர நடக்க வழி செய்து விட்டார்.
தன் படைப்பை கூட கடவுள் ஏன் ஒரே மாதத்தில் வெளிக்கொணராமல் பத்து மாதம் எடுத்துக் கொள்கிறான், வளர்ச்சி என்பதை கொண்டே பலம் என்பது அமையும். அதற்கு காலம் ஒரு முக்கிய கருவி.
டிமானிட் சரியாக பலன் கொடுக்க இன்னும் இரு வருடம் ஆகலாம். ஆனால் நல்ல பலன் பெற இரண்டு ஆண்டு முன்பு விதை விதைத்தாகிவிட்டது. தேசம் நிச்சயம் சிறப்பு பெரும் என்பதில் சந்தேகமேயில்லை.
மோடி இன்னும் ஒரு வருடத்தில் மீண்டும் இரண்டாயிரம் செல்லாது என்று அறிவிக்க வேண்டும். இரு வருடத்திற்கு ஒரு முறை இப்படிச் செய்தாலே போதும் பாதி பேர் கிலி பிடித்து கருப்புப் பணம் சேமிப்பதையே விட்டு விடுவார்கள்.
No comments:
Post a Comment