பாஜக கேட்ட 10 கேள்வி பதில் சொல்லமுடியாமல் எதிர்க்கட்சிகள் ஓட்டம் !
பணமதிப்பு நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இன்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் இதுதொடர்பாக கடுமையாக விமர்சித்து வரும் காங்கிரஸூக்கு பாஜக 10 கேள்விகளை எழுப்பியுள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் ட்விட்டர் பக்கத்தில் இடம் பெற்றுள்ள கேள்விகள்:
1) ஊழலுக்கு எதிராக மத்திய அரசு எப்போதெல்லாம் நடவடிக்கை எடுக்கிறதோ அப்போது காங்கிரஸ் பதறுவது ஏன். போராட்டம் நடத்துவது எதற்காக?
2) கருப்பு பணத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்போது காங்கிரஸ் அதனை ஆதரிக்க முன் வராதது எதனால்?
3) வரி செலுத்துவோர் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் எடுக்கப்பட்ட உறுதியான நடவடிக்கை எடுக்கும்போது, வளர்ச்சிக்கு எதிரான அரசியலை காங்கிரஸ் முன்னெடுப்பது எதனால்?
4) காங்கிரஸைச் சேர்ந்த முன்னாள் நிதியமைச்சரே ஊழல் புகாரில் சிக்கியுள்ளதுடன், நிலம், சொத்து, பணம், வெளிநாட்டு வங்களில் முதலீடு செய்ததாக நடவடிக்கைக்கு ஆளாகி இருக்கிறாரே. எந்த முகத்துடன் கொள்கையை பற்றி பேசுகிறீர்கள்?
5) பணமதிப்பு நீக்கத்தை எதிர்த்து நாடாளுமன்றத்தில் காங்கிரஸைச் சேர்ந்த ஆனந்த் சர்மா தொடர்ந்து பேசி வருகிறார். ஆனால் 2 ஆண்டுகளாக வரி செலுத்துவோர் எண்ணிக்கை 2 கோடிக்கும் அதிகமாக உயர்ந்துள்ளதே. பிறகு ஏன் மதிப்பு நீக்கத்தை எதிர்க்கிறீர்கள்?
6) கணக்கில் வராத பொருளாதாரம் என்பது ஏழைகளை சுரண்டுவது, மத்திய கீழ்த்தட்டு பிரிவு மக்களை மேலே வரவிடாமல் தடுப்பது. பணமதிப்பு நீக்கம் என்பது பொருளாதாரத்தை வரன்முறைபடுத்துகிறது. அவர்களை உயர்த்துகிறது. பிறகு ஏன் காங்கிரஸ் இதனை எதிர்க்கிறது?
7) நாட்டில் பொருளாதார வளர்ச்சி ஏற்படுவதை காங்கிரஸ் விரும்பவில்லை. எளிமையாக தொழில் செய்யும் நாடுகளின் பட்டியலில் உயர்வு, தொழில் வளர்ச்சி நாடுகளில் பட்டியலில் முன்னேற்றம் இவையெல்லாம் காங்கிரஸூக்கு தெரியவில்லையா. நமது வளர்ச்சியை உலகம் அங்கீகரிப்பது காங்கிரஸூக்கு மகிழ்ச்சியை தரவில்லையா?
8) உலகம் நம்மை அங்கீகரிக்கும்போதெல்லாம் காங்கிரஸ் ஏன் அவமானப்படுத்துகிறது. மக்களை தவறாக வழி நடத்துகிறது?
9) சிறு வர்த்தகர்களை பற்றி இப்போது பேசும் காங்கிரஸூக்கு தங்கள் ஆட்சியின் போது அவர்களை பற்றி ஞாபகம் வந்ததா. காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் வரி கொடுங்கோன்மை, அவர்களுக்கு எதிரான திட்டங்களை மக்கள் மறக்கவில்லை. ஆட்சியில் இருந்தபோது காங்கிரஸ் சிறு வர்த்தர்களுக்கு ஏதும் செய்யாதது எதனால்?
10) ஊழல் மற்றும் கருப்பு பணத்துக்கு எதிராக காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் ஏதேனும் ஒரு நடவடிக்கையாவது எடுக்கப்பட்டதா?
இந்த கேள்விகளுக்கு பதில் அளிக்கமுடியாமல் காங்கிரஸ் கட்சி மற்றும் ராகுல் காந்தி தங்களது ட்விட்டை நீக்கிவிட்டு மவுனம் ஆகிவிட்டனர்.
No comments:
Post a Comment