திரு . வைகோ
அவர்களுக்கு வணக்கம்.
நான் ஒரு இந்து
தமிழன்
திரு . வைகோ அவர்களே !
நீங்கள் மதசார்பற்றவரா
இல்லை மதம் சார்ந்தவரா ???
ஏன் கேட்கிறேன் என்றால்
நீங்கள் தந்தி. டீவியில் பாண்டேவிற்கு
பேட்டி கொடுக்கையில்
பயங்கரவாத இந்துத்துவா சக்திகளை
வேரோடு களைய வேண்டும்
என்றும் ,
அடியோடு விரட்ட வேண்டும் என்றும்
நீட்டி முழங்கினீர்கள் .
நீங்கள் அரசியல் கோமாளித்தனம்
செய்வதற்கு இந்துமதம் தான்
கிடைத்ததா ?
இந்துக்களின் ஆன்மாவில் கைவைப்பதற்கு
உங்களைப் போன்ற தலைவர்களுக்கு
யார் அனுமதி கொடுத்தது ?
மதசார்பற்றவர் ஏன் இந்துமதத்தை
மட்டும் எப்போதும் தாக்கிப் பேசுகிறீர்கள் ??
இஸ்லாமிய கிருத்துவ மதங்களை
தாக்கிப் பேச தைரியமில்லாத
தொடை நடுங்கியா நீங்கள் ??
உங்களோடு இந்துமதத்தை ஏசும் நாத்திக தலைவர்களும் தொடை நடுங்கிகளா ???
மதசார்பற்ற தலைவர்களென்றால் அனைத்து மதத்திலுள்ள தவறுகளையும்
சுட்டிக் காட்ட வேண்டும் !
அவர்களே சரியான ஆண்மகன்கள் !
வாய்யா மோடி !
56 இன்ச் பாடி ஆம்பளையா நீ என்று
பேராண்மை மிக்க
இந்தியப் பிரதமரை பார்த்து
கேள்வி கேட்ட உம்மை இந்துவாகிய நான் கேட்கிறேன்.
அதாவது இந்துத்துவா என்பது பயங்கரவாதம் எனில்
அன்று சமூகவலை தளத்தில்
வைகோ கிருத்துவ மதத்திற்கு
மாறி விட்டார் என்று செய்தி உலவியபோது
பதறியபடி நான் மதம் மாறவில்லை
என்று ஏன் அறிக்கை விட்டீர்கள் ?
மதசார்பற்றவருக்கு
இந்துக்களை
இந்துமதத்தை கொச்சைப்படுத்துபவருக்கு
தங்களை பற்றி மதம் மாறிய
செய்தி உலவியபோது
பதறிப் போய் மறுக்க வேண்டிய
அவசியமென்ன வந்தது ?
அமைதியான இந்துத்துவா பயங்கரவாதம் என்றால் ??
அமைதி மார்க்கத்தின்
குண்டு வெடிப்புகள்
இந்துக்களை வெட்டிக் கொல்லும்
இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கு
பெயரென்ன என்பதை
பிரதமரைப் பார்த்து ஆம்பளையா
என்று கேட்ட நீங்கள்
சரியான ஆண்மகனென்றால்
பதில் சொல்லுங்கள் ?
பிறப்பால் இந்துவாகப் பிறந்த
நீங்கள்
இந்துத்துவாவை இகழ்வதால்
நான் இந்து இல்லை என்று
பகிரங்கமாய் அறிவிக்க முடியுமா ??
மதசார்பற்றவரென்றால்
என் இந்துமதத்தை நீங்கள்
இகழ்வதற்கு என்ன தார்மீக
உரிமை இருக்கிறது உமக்கு ?
நான் ஒரு இந்து !
ஆனால் நான் மும்மதங்களையும்
மதிக்கிறேன் !
எனக்கு இஸ்லாமிய கிருத்துவ நட்புகள்
நிறைய பேர் இருக்கிறார்கள் .
அல்லாவையும், ஏசுவையும்
மதிக்கிறேன் !
அதே வேளையில்
என் தாய் மதமான இந்துமதத்தை
பழிக்கும் வெறுக்கும்
மாற்றுமத தீவிரவாதத்தை தான்
நான்
அடியோடு வெறுக்கிறேன் !
என்மத ஊர்வலங்களை நடத்துவதற்கு
வரும் எதிர்ப்புகளை
என் மதவழிபாடுகளை தடுப்பதை
அது எவராயினும் நான்
வன்மையாக கண்டிக்கிறேன் .
மதசார்பற்ற நாட்டில் என்
ஸ்ரீ ராமர் ஊர்வலத்தை தடுக்க
எவருக்கும் உரிமையில்லை .
ஜனநாயக நாட்டில்
மதசார்பற்ற நாட்டில்
என் மதத்தை வழிபடவும்
என் மத ஊர்வலங்களை
நடத்துவதற்கும்
எங்கள் சொந்த நாட்டிலே
இந்துக்களாகிய எங்களுக்கு
உரிமை உண்டு .
ஜமாத் பள்ளிவாசல் தொழுகைகளை
இஸ்லாமிய மத ஊர்வலங்களை
தேவாலயங்களில் துதிப்பதை
பிறர் இடங்களில் நடக்கும் ப்ரேயர்களை
கிருத்துவ மத
ஊர்வலங்களை
நாங்கள் தடுக்கின்றோமா ??
இந்துக்களாகிய நாங்கள்
இஸ்லாமிய பண்டிகைகளுக்கு
வாழ்த்து சொல்கிறோம்.
கிருத்துவ பண்டிகைகளுக்கு
வாழ்த்து சொல்கிறோம் .
கோரியில் கயிறு கட்டிக் கொள்கிறோம் .
வேளாங்கண்ணி மாதாவை
தொழுகின்றோம்.
இந்துத்துவா வழியில்
சமத்துவத்தை நேசித்து
நாங்கள் மதசார்பற்றவர்களாக
சகோதர சகோதரிகளாய்த்
தான் வாழ்கின்றோம்.
ஆனால் நாத்திகப் போர்வையில்
உங்களைப் போன்ற நாத்திக
தமிழகத் தலைவர்களால் தான்
மதசார்பற்ற வேடத்தில்
மதக்கலவரங்கள் தூண்டி விடப்பட்டு
வன்முறைகள் வெடிக்கின்றன
என்பது தான் நிதர்சனமான
ஆணித்தரமான உண்மை !
அதனால் உங்களைப் போன்றத்
தலைவர்கள் தான்
இந்தியாவின் இறையாண்மைக்கும்
சமூக நீதிக்கும் ஊறு விளைவிக்கும்
பேராபத்தானவர்கள் என்பதை
நான் அடித்துச் சொல்வேன் !
இந்துத்துவா அடியோடு ஒழிக்கப்பட
வேண்டும் என்று
கூவும் வேலையை முதலில்
நிறுத்துங்கள் !
இந்துத்துவா என்பது இந்து மக்கள்
வாழ்க்கையின் உரிமை !
அதை அழிக்க இந்தியாவில் எவனுக்கும் இல்லை ஆண்மை !
இந்துத்துவா பயங்கரவாதம் என்று இந்துமதத்தைப் பற்றி பேசும்
உம்மைப் போன்ற
தலைவர்கள் ஆண்மையிருந்தால்
மாற்றுமத பயங்கரவாதத்தையும்
மதவெறியையையும்
அதனால் இந்துக்களுக்கு ஏற்படும்
இன்னல்களையும்
உயிரிழப்புகளையும் பாரபட்சமின்றி
சுட்டிக்காட்டி
குரல் எழுப்ப திராணி உண்டா ?
உண்டென்றால் நீங்களனைவரும்
மதசார்பற்றவர்களே !
இல்லையென்றால் நீங்களனைவரும்
மதத்தீவிரவாதிகளே !
சத்தியம் உரைக்கின்றேன் !
இந்தியாவில் வாழும் அனைத்து
மதத்தினரும்
சகோதர சகோதரிகளே !
அவரவர் மதத்தை மதிப்பவர்கள்
பிறர் மதத்தை ஏசுவது ஆகாது !
மனிதருக்குள் மதம் இருக்கலாம் !
ஆனால் மதத்திற்காக மதம் பிடித்து
மனிதாபிமானத்தை தொலைத்து
மதத்தின் மாண்புகளை இழந்து மதத்தீவிரவாதத்தால் மதக்கொலைகள்
எதற்கு ? எதற்கு ?
இந்துக்களனைவரும்
பிறர் மத உரிமைகளில் வழிபாடுகளில்
தலையிடுவது மில்லை !
தன் மதத்தின் வழிபாடுகளை
எவர் தடுப்பினும் அதை அனுமதிக்கப்
போவதுமில்லை !
இதுதான் இந்துக்களின் சமதர்ம நீதி !
இதை தமிழக நாத்திக தலைவர்கள்
அனைவரும் உணரும் தருணம்
வந்து விட்டது !
உங்கள் அனைவரின் இந்துமத ஆத்திக எதிர்ப்பால் என்பதை
சவாலிட்டுச் சொல்கிறேன் !
இந்த
இந்து மதத்தில் பிறந்த
இந்திய தேசத்தை உயிராக
நேசிக்கும் வீரத்தமிழன்!
ஜெய் ஸ்ரீராம் !
நமசிவாய வாழ்க !
ஓம் பராசக்தியே !
- படித்ததில் பிடித்தது.
.
No comments:
Post a Comment