சரண கோஷம் ஒலிப்போம். !!
சபரிமலை காப்போம். !!!
சபரிமலை ஐயப்பன் கோவில் விவகாரத்திற்காக தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களும் போராட வேண்டும் இந்து மக்கள் கட்சி தமிழகம் வேண்டுகோள்
..........................................
ஆண்கள் பெண்கள் பேதமில்லாது சபரிமலை அய்யப்பன் கோவிலில் வழிபாடு செய்து கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்த தீர்ப்பானது உலகம் முழுவதும் உள்ள சபரிமலை ஐயப்ப பக்தர்கள் மட்டுமல்ல ; இந்து மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ,மனவேதனையை உண்டாக்கி இருக்கிறது.
மத நம்பிக்கைகளில் பிற மத வழிபாட்டு முறைகளில் தலையிட மறுக்கக்கூடிய நீதித்துறையானது ,
குறிப்பாக இந்துக் கோவில்களில் மட்டும் தலையிட்டு ஆண்டாண்டு காலமாக இருந்து வரக்கூடிய நடைமுறைகளை சிதைக்கக்கூடிய வேலையாக இருக்கலாம் என சிந்திக்க வைக்கிறது.
சபரிமலையை காப்போம் சம்பிரதாயங்களை காப்போம் என கோஷங்களை முன்வைத்து சாமியே சரணம் ஐயப்பா என்று மனதார பக்தி கோஷங்களை எழுப்பி வீதிகளிலே வந்து போராடக் கூடிய மாபெரும் ஐயப்ப பக்தி புரட்சி போராட்டமாக உருவெடுத்திருக்கிறது.
இந்து சமய வழிபாட்டு முறைகளில் ஒவ்வொரு கோவிலுக்கென்று ஒவ்வொரு வழிபாட்டு முறை இருக்கிறது.
ஒரே கோவில் ,வழிபாட்டு முறையை அனைத்து கோவில்களிலும் செயல்படுத்த நினைப்பது என்பது ஏற்றுக்கொள்ள இயலாதது.
உதாரணமாக காசி விசுவநாதர் ஆலயத்தில் பக்தர்கள் அனைவரும் சென்று கருவறையில் புனித நீர் ஊற்றி வழிபாடு செய்ய முடியும் அதே நடைமுறையை நாடு முழுக்க செயல்படுத்த முடியுமா?
தமிழகத்தில் மட்டுமல்ல பல இடங்களில் ஆண்கள் மட்டுமே செல்லக்கூடிய திருக்கோவில் இருக்கிறது.
பெண்கள் மட்டுமே வழிபாடு செய்யக் கூடிய திருக்கோவில் இருக்கிறது,
பல்வேறு விதமான வழிபாட்டு முறைகளில் மாறுபட்டு இருந்தாலும் கூட பக்தி ரீதியாக இந்து சமயம் நம்மை ஒருங்கிணைக்கிறது.
நான் இதை ஏன் சொல்லுகிறேன் என்று சொன்னால் இந்த சமுதாயம் பல மாறுதல்களை உண்டாக்கும்.
இருந்தாலும் கூட நாடு முழுக்க பல ஐயப்பன் திருக்கோவில் இருக்கிறது.
அங்கு ஆண் பெண் பேதம் இல்லாத அனைவரும் சென்று வழிபாடு செய்கிறார்கள் .
ஆனால் சபரிமலை சாஸ்தா வழிபாடு என்பது நைஷ்டிக
பிரம்மச்சரியம் ,
அய்யப்பன் நித்திய பிரம்மச்சாரி.
சபரிமலை ஐயப்பன் வழிபாட்டில் இப்படித்தான் என்று ஐயப்பனே வகுத்து வைத்து இருக்கிறான் .
அந்த வழிபாட்டு முறைகளை சிதைக்க வேண்டி நீதித்துறை தலையிடுமேயானால்
அது ஒட்டுமொத்த இந்து சமுதாய மக்களின் நம்பிக்கையையும் கேள்விக்குறியாக மாற்றி சிதைக்கக்கூடிய செயலாகவே நாங்கள் எண்ணுகிறோம்.
சபரிமலை காப்போம் ஆண்டாண்டு காலமாக சபரிமலையில் உள்ள பூஜை விதிமுறைகளை அமல்படுத்துவோம் என்று கேரளத்தில் ஒரு ஐயப்ப பக்தி புரட்சி போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது .
இந்த போராட்டத்தில் ஆண் பெண் பக்தர்கள் அனைவரும் வீதிகளில் இறங்கி போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த ஐயப்ப பக்தி புரட்சிப் போராட்டத்திற்கு கேரளத்தில் இருக்கக்கூடிய அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஆதரவு கொடுத்திருப்பதோடு மட்டுமல்லாமல் வீதிகளில் இறங்கி அவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இதேபோல தமிழகத்தில் சபரிமலை சாஸ்தா ஐயப்பன் மாலை அணிந்து விரதம் இருந்து இருமுடி சுமந்து செல்லக்கூடிய அனைத்து பக்தர்களும் வீதியில் இறங்கி போராட பிள்ளையார் சுழி போட்டு இருக்கிறது.
பிற மதத்தவர்களுக்கு ஒரு பிரச்சினை என்று சொன்னால் வீதிகளில் இறங்கி போராடக்கூடிய தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் சபரிமலை அய்யப்பன் விஷயத்தில் சபரிமலையை காப்பதற்காக பெரும்பான்மை இந்து சமுதாய மக்களின் மத உணர்வுகளுக்கு மதிப்பளித்து நீதித்துறையானது,இந்து மத நம்பிக்கையில் தலையிடக் கூடாது என்று சொல்லி சபரிமலையை காத்திட ஆதரவை தெரிவிக்கும் விதமாக வீதியில் இறங்கி போராடுவது தொடங்க வேண்டும் .
சபரிமலை ஐயப்பன் விஷயத்தில் அனைத்து கட்சிகளும் ஒன்றாக இணைந்து மத்திய அரசுக்கும், நீதித்துறைக்கும் ஒரு அழுத்தத்தைக் கொடுக்க கூடிய வகையிலே போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.
என இந்து மக்கள் கட்சி தமிழகத்தின் சார்பில் வேண்டுகோள். முன்வைக்கின்றோம்.
அதுமட்டுமல்லாது பாரத பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்கள் பெரும்பான்மை இந்து மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பாராளுமன்றத்தை அவசரமாகக் கூட்டி மத நம்பிக்கைகளில் நீதித்துறையானது தலையிடக்கூடாது என ஒரு சிறப்புச் சட்டத்தை உடனடியாக இயற்ற வேண்டும்.
இது அவசரமும் அவசியமும் கூட.....
தமிழகத்தில் சபரிமலையை காத்திட ஐயப்ப பக்தி புரட்சிப் போராட்டம் அனைத்து இடங்களிலும் பரவ வேண்டும்.
இன்று இந்த சமுதாயம் வீதிக்கு வந்து போராடா விட்டால் நாளை இந்த சமுதாயம் வீதிக்கே வர வேண்டிய நிலை உருவாகும் .
ஆகவே சபரிமலையை காத்திட கட்சி பேதமின்றி ,ஜாதி பேதமின்றி, மொழி இன ,பேதமின்றி அனைவரும் ஐயப்ப பக்தர்கள் என்கின்ற அடிப்படையில் ஒரு அணியில் திரண்டு வெற்றி பெறும் வரை போராடுவோம் என இந்து மக்கள் கட்சி தமிழகத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம் .
இதற்காக வரக்கூடிய 13 .10.2018 சனிக்கிழமை
"ஒரே நேரம் - ஒரே சரணகோஷம் " என்ற பக்தி போராட்டத்தை இந்து மக்கள் கட்சி முன்னெடுக்கிறது .
இதில் அனைவரும் கலந்து கொள்ள அன்போடு அழைக்கின்றோம்.
சாமியே சரணம் ஐயப்பா !
சரண கோஷம் ஒலிப்போம் !!
சபரிமலை காப்போம் !!!
கொள்ளிடம் ஜெ.சுவாமிநாதன்,
மாநில செயலாளர்,
இந்து மக்கள் கட்சி .
9677312780.
No comments:
Post a Comment