கி.வீரமணியை ஆசிரியராக கொண்ட விடுதலை பத்திரிகையில், 09-11-18 அன்று, "தந்தை பெரியார் சிலை அவமதிப்பு சமூகத்துக்கு செய்யும் துரோகமே...!" என்கிற தலைப்பில் அன்புச்சுடர் என்கிற வரலாறு தெரியாத அறிவிலி, ஒரு கட்டுரையை தந்திருக்கிறார். அதையும் "நீதிக்கான விடியல், நவம்பர் 2018" என்கிற பத்திரிகையிலருந்து தந்திருக்கிறார். அந்த கட்டுரையில்
"இந்து மதத்தில் உடன்கட்டை ஏறும் பழக்கம் இருந்தது. கணவன் இறந்தால் மனைவியை உடன்கட்டை ஏற்றுவார்கள். இப்படிப்பட்ட கொடுஞ் செயலை எதிர்த்து தடுத்து பிரச்சாரம் செய்து வெற்றி கண்டவர்." என்று கட்டுரையாளர் ஈவெராமசாமியை குறிப்பிடுகிறார்.
ஈவெராமசாமி பிறப்பதற்கு 45 ஆண்டுகளுக்கு முன், ஏன் ஈவெராமசாமியின் தகப்பனார் வெங்கட்ட நாயக்கர் பிறப்பதற்கு முன்னாலேயே, ராஜாராம் மோகன் ராயின் மாபெரும் போராட்டத்தின் பயனாய், "1833ல், அப்போது ஆட்சியிலிருந்த லார்ட் வில்லியம் பென்டிக் ஒரு சட்டம் இயற்றி, அதன் மூலம் சதி என்கிற உடன்கட்டை முறை ஒழிக்கப்பட்டது. இந்த வரலாற்றை கூட தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற அறிவின்றி, ஒருவன் கட்டுரை எழுதி இருக்கிறான். அது தெரிந்தும், உண்மைக்கு மாறான தகவலை வெளியிடுகிறோமே என்கிற சிறு உறுத்தல் கூட இன்றி, வெட்கமே இல்லாமல் மானங்கெட்டதனமாக வெளியிடுகிறது விடுதலை பத்திரிகை என்றால், அது எவ்வளவு பெரிய அயோக்கியதனம்.
திராவிடர் கழகத்தால் விளைந்த ஒரு நன்மையை வேறொரு இயக்கத்திவரால் கிடைத்தது என எழுதினால் கி.வீரமணி வரிந்து கட்டிக் கொண்டு வரமாட்டாரா. அந்த உணர்வு எல்லா இடத்திலும் இருக்க வேண்டும். வரலாற்றை திரித்து எழுதுவது, தி.க.காரனின் மொத்த வரலாற்றையும் கேள்விக்குள்ளாக்கும். பல முறை சொல்லியாயிற்று, "உண்மையை மட்டும் எழுதுங்கள்" என்று. "நன்றாகவே கேட்கிறோம் - நாக்கைப் பிடுங்கக் கேட்கிறோம் - அறிவைத் தூண்டும் வகையில் செவுளில் அறைவது போலவும் கேட்கிறோம்" ஆனால் கி.வீரமணி கும்பல், உண்மைக்கு மாறான தகவல்களை வெளியிட உறுத்தலோ, அச்சமோ கொள்வதில்லை.
ஈவெராமசாமி, "தான் எதையெல்லாம் செய்தேன்" என பீற்றி கொண்டாரோ, அதையெல்லாம் ஈவெராமசாமி பிறப்பதற்கு 45 ஆண்டுகளுக்கு முன்பே, எந்த பீற்றலுமின்றி செய்து முடித்தவர் ராஜாராம் மோகன்ராய். '1814ல், சமுதாயத்தில் சமூக மற்றும் சமய சீர்திருத்தங்களைக் கொண்டு வரும் முயற்சியாக ‘ஆத்மிய மக்களவை’ என்ற ஒரு அமைப்பை உருவாக்கினார். பின்னர், பெண்கள் உரிமைக்காகவும், விதவைகள் மறுமண உரிமைக்காகவும், பெண்களுக்கான சொத்து உரிமைக்காகவும், பல பிரச்சாரங்களில் ஈடுபட்டார். அவர் அக்காலத்தில் பெண்களுக்கு கட்டாய பழக்கமாக இருந்த உடன்கட்டை ஏறுதல் மற்றும் பலதார மணம் புரிதல் போன்ற நடைமுறைகளைத் தீவிரமாக எதிர்த்தார்.
பெண்களுக்கானக் கட்டாயக் கல்வி முறைக்காக பெரிதும் ஆதரவு காட்டிய அவர், பாரம்பரிய இந்திய கல்வி முறையை விட ஆங்கில மொழி கல்வி மேன்மையானது என்று நம்பினார், அதுமட்டுமல்லாமல், சமஸ்கிருதம் கற்றுத் தரும் பள்ளிகளில், அரசாங்க நிதிகளை பயன்படுத்தக் கூடாது என்று மிகக் கடுமையாக எதிர்த்தார். மேலும் 1822 ஆம் ஆண்டு ஆங்கிலக் கல்வியின் அடிப்படையில் ஒரு பள்ளியை நிறுவினார்." ஈவெராமசாமி சமஸ்கிருதத்தை எதிர்ப்பதற்கு 100 ஆண்டுகளுக்கு முன்பே அந்த வேலையை செய்தவர் ராஜாராம் மோகன் ராய். அவரின் சமூக சீர்திருத்த கருத்துகளை ஈவெராமசாமி, காப்பி->பேஸ்ட் செய்து கொண்டார் என தான் சொல்ல வேண்டும்.
No comments:
Post a Comment