மோடியை விட இசுடாலின் சிறந்தவர் - சந்திரபாபு நாயுடு.
ராஹூல் காந்தி கூட இந்தளவுக்கு
கேவலமாக சொல்லியிருக்கமாட்டார்.
இந்திராவின் சர்வாதிகாரப் போக்கையும்
ஆந்திர மாநிலத்தைச் சூறையாடிய காங்கிரஸையும் எதிர்த்து புதிய இயக்கம் ஆரம்பித்து போர்க்களம் புகுந்து இந்திராவையும் காங்கிரசையும் வீழ்த்தியவர்
N T ராமாராவ்.
இந்த வரலாற்றை நினைவுபடுத்தும்
Ramanathan Ravi அவர்களின் பதிவு இனி :
DEDICATED TO மானம்கெட்ட சந்திரபாபு நாயுடு :
15-08-1984
அப்போதைய ஆந்திர முதல்வர்
என்.டி.ராமாராவ் இதய அறுவை சிகிச்சை முடிந்து அமெரிக்காவிலிருந்து திரும்பினார்.
அடுத்த நாள் தெலுங்கு தேச எம்எல்ஏ
பாஸ்கரராவ், ராமாராவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினார்.
காங்கிரஸ் எம்எல்ஏக்களுடன் சேர்ந்து
கவர்னர் ராம்லாலை சந்தித்து என்டிஆரின் தெலுங்கு தேசத்தை விட தங்களிடம்
அதிகமான உறுப்பினர்கள் இருக்கிறார்களென்றும்,
ராமாராவ் ஆட்சியை கலைத்துவிட்டு,
தன்னை முதல்வராக்கினால் தனது
பலத்தை நிரூபிப்பதாக ஆகஸ்ட் 15ல்
கூறினார். அதற்காகவே காத்துக் கிடந்த
கவர்னர், பாஸ்கரராவை 16ந்தேதியே முதல்வராக்கினார்.
பெரிய அளவிலான அறுவை சிகிச்சை
முடிந்து மிகவும் பலவீனமான நிலையில்
வீல் சேரில் உட்கார்ந்தபடியே தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் கவர்னரை சந்திக்கச் சென்றார் ராமாராவ்.
ராஜ்பவனில் அவரும் அவரது ஆதரவு எம்எல்ஏக்களும் கைது செய்யப் பட்டனர்.
அப்போது போலீஸ் அறிக்கையிலேயே 159 எம்எல்ஏக்கள் இருந்ததாக கூறியிருந்தனர்.
இந்த எண்ணிக்கையே மெஜாரிட்டியை
விட அதிகமானதுதான். என்டிஆர் மூன்று நாள் தான் அவகாசம் கேட்டார்.அவருக்கு அவகாசம் கொடுக்கப்படவில்லை.
ஆனால் பாஸ்கரராவுக்கு ஒரு மாதம்
அவகாசம் அளித்தது தான்
வேதனையான வினோதம்.
இந்த கலைப்பிற்காக நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்களில் "மூப்பனாரும்"
ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதன் பிறகு ராமாராவ் எதிர்க்கட்சித் தலைவர்களை ஒன்று திரட்டினார்.
இந்த விஷயத்தில் ஆசிரியர் பெருந்தகை
சோ அவர்கள் முக்கிய பங்காற்றினார்.
அவரும் NTRஉடன் இருந்து போராட்டத்தை
வழி நடத்தினார். அவருடைய அறிவுரையின் பேரில், இதற்கெல்லாம் காரணமான இந்திராவை எதிர்த்துப் போராட டில்லிக்கே செல்ல முடிவெடுக்கப் பட்டது.
ஹைதராபாத்திலிருந்து என்டிஆர் ஆதரவு எம்எல்க்களை தனி விமானத்தில் ஏற்றிக் கொண்டு நேராக டில்லிக்குச் சென்றார்.
வீல் சேரில் ராமாராவ் தனது 161 எம்எல்ஏக்களுடன் தங்களது சட்டசபை உறுப்பினர் அட்டைகளை தூக்கிப் பிடித்தவாறு ஊர்வலமாகச் சென்று ஜனாதிபதி ஜெயில்சிங்கை சந்தித்து மனு அளித்தார்.
ஜெயில்சிங் என்டிஆரை சந்திக்க நேரம் ஒதுக்கியதே அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது.ஏனெனில் ஜனாதிபதி பாத்ரூம் போவதானால் கூட இந்திராவின் அனுமதி தேவைப்பட்ட காலகட்டமது.
காட்சிகள் தலைநகர் டில்லிக்கு மாறியதால் எல்லா மாநில செய்தியாளர்களும் இந்திராவைக் கண்டித்தனர்.
25 நாடுகளிலிருந்து வந்திருந்த டிவி செய்தி நிறுவனங்கள் அந்த ஊர்வலத்தை நேரடியாக ஒளிபரப்பி இந்தியாவின் மானத்தை வாங்கினார்கள்.
வீல்சேரில் வந்த என்டிஆருக்கு மக்களின் அனுதாபம் பெருகியது.இந்திராவுக்கு எதிர்ப்பு வலுத்தது.கர்நாடகாவில் ஜனதா கட்சியின் ராமகிருஷ்ண ஹெக்டேவின் ஆட்சி நடந்து கொண்டிருந்ததால் எம்எல்ஏக்கள் பெங்களூரில் தங்க வைக்கப் பட்டனர்
பாஸ்கரராவ் பெரும்பான்மையை
நிரூபிக்க முடியாமல் பதவி விலகினார்.
மீண்டும் ராமாராவ் முதல்வரானார்.
இந்த நிகழ்வு ஆந்திர மாநில மக்களின்
மனதில் காங்கிரஸ் மீது வெறுப்பு வர காரணமானது. இன்று வரை பாஸ்கரராவுக்கு துரோகிப் பட்டம் துரத்திக்கொண்டிருக்கிறது.
அரசியலில் அதன் பிறகு அவர் விளங்கவில்லை.
மக்களே பேச்சு வழக்கில் துரோகி என்பதற்கு பாஸ்கரராவ் பெயரையே உபயோகித்தனர்.
=========================================
இனி அந்த துரோகிப்பட்டம்
சந்திர பாபு நாயுடுவுக்கும் பொருந்தும்.
No comments:
Post a Comment