நான் கூட படிக்கும் காலத்தில் இந்த திப்பு சுல்தான் ஆங்கிலேயர்களை எதிர்த்து சுதந்திரத்துக்காக போராடிய மாவீரன்
என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தேன்.:. ஆனால் பிறகுதான் நமக்கு பள்ளிகளில் சொல்லிக்கொடுக்கப்படும் பெரும்பாலான வரலாறு உண்மையான வரலாறே அல்ல, அரசியல் காரணங்களுக்காக திரித்து சொல்லப்படுபவை என்பதை உணர்ந்தேன்
இந்த திப்பு எவ்வளவு பெரிய அரக்கன் என்பதற்கு இரண்டு உதாரணங்களை சொல்கிறேன்..
மைசூரை சேர்ந்த Wodeyar மன்னரை வஞ்சகமாக ஏமாற்றி திப்புவின் தந்தை ஹைதர் அலி மைசூர் ஆட்சியை கைப்பற்றினான்.. ஆனால் பிறகு இந்துக்கள் மீதான இவனது அட்டூழியம் அதிகரிக்கவே, Wodeyar மன்னர் குடும்பத்தை சேர்ந்த லட்சுமி அம்மாணி எனும் ராணி, அவரது ஒரு முக்கிய தளபதியான திருமலை அய்யங்கார் என்பவர் மூலம் ஆங்கிலேயர்களின் உதவியை நாடினார், திப்புவை வீழ்த்த..அவர் பின்னால் ஆயிரக்கன்னைக்கான வைணவர்கள் நின்றார்கள் (மாண்டியம் அய்யங்கார் என அழைக்கப்படுபவர்கள்) இதை அறிந்த திப்பு சுல்தான், ஒரு தீபாவளி நன்னாள் அன்று, மாண்டியம் பகுதியின் திருநாராயணபுரம் எனும் ஊருக்குள் நுழைந்து, தீபாவளி பண்டிகை கொண்டாட்டங்களில் மூழ்கி இருந்தார்கள் ஆயிரக்கணக்கான மாண்டியம் அய்யங்கார் சமுதாயத்தை சேர்ந்த மக்களை, பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட, தலையை சீவிக்கொன்று தீர்த்தான்..அதனால் இன்று வரை அம்மக்கள் அந்த கிராமத்தில் தீபாவளி கொண்டாடுவதில்லை...
இரண்டாவது சம்பவம் - கேரள மலபாரை சேர்ந்த நாயர்கள்.. இவர்கள் தீவிர இந்துக்கள்.. திப்புவின் மதமாற்று அட்டூழியத்தை கண்டித்து ஆங்காங்கே போராடிவந்தார்கள்.. இது திப்புவுக்கு பெரும் குடைசலாக இருந்தது.. இதனால் அவன் அவர்களை மதம் மாறுமாறு மிரட்டுகிறான்.. ஆனால் அதை மறுத்து கொந்தளித்து எழவே, கோபமடைந்த திப்பு அவர்களை தன் தளபதிகளை அனுப்பி, 30,000 க்கும் மேற்பட்ட பெண்கள், குழந்தைகள் என பாராமல் சிறைபிடித்து மைசூருக்கு அழைத்து வருகிறான்.. அங்கே அவர்களை மதம் மாற சொல்லி கொடூரமாக சித்திரவதை செய்கிறான்.. அப்படியும் அவர்கள் மறுக்கவே, அவர்களை கருணையில்லாமல், பெண்கள் குழந்தைகள் என பாராமல், கொன்று குவிக்கிறான்.. சில ஆண்டுகளுக்கு பிறகு, சிறைபிடிக்கப்பட்ட 30,000 பேரில் சில நூறு பேர் மட்டுமே உயிரோடு மலபார் திரும்புகிறார்கள்..
இப்படிப்பட்ட மதவெறியன், அரக்கனுக்குதான் காங்கிரஸ் காரர்கள் வருடா வருடம் பிறந்த தினத்தை ஒட்டி, திப்பு ஜெயந்தி என கொண்டாடுகிறார்கள்.. கேட்டால், ஸ்ரீரங்கப்பட்டினம் கோவிலுக்கு நிறைய செய்திருக்கிறானாம்.. அதனால் அவன் மதச்சார்பற்றவனாம். காங்கிரஸ் காரர்களின் மதச்சார்பற்ற தன்மை இந்த லட்சணத்தில் இருக்கிறது.. அவன் ஸ்ரீரங்கப்பட்டினத்திற்கு செய்தது, அக்கோவிலின் ஜோசியர்கள் திப்புவின் ஆரம்ப காலத்தில் , நீ இந்த கோவிலுக்கு யாகம் கொடுத்தால்தான் உன்னால் இங்கே தொடர்ந்து ஆட்சி செய்யமுடியும் என்று பயமுறுத்தியதால் செய்தான்.. ஏதோ பக்தியினாலோ, இந்துக்கள் மீதான பாசத்தாலோ அல்ல.. அதேபோல, அவன் வெள்ளைக்காரர்களை எதிர்த்து போராடியது பாரத நாட்டின் நன்மைக்காக அல்ல, அவனது ஏகாதிபத்தியத்தை நிலைநாட்டிக்கொள்ளத்தான்.. காங்கிரஸ் காரன் இன்று உள்ள முஸ்லிம்களை திருப்தி படுத்தி ஓட்டுக்களை அறுவடை செய்ய இந்துக்களை கொத்துக்கொத்தாக கொலை செய்த ஒரு அரக்கனை வீரனாக கொண்டாடி வருகிறார்கள்.. அதுகூட பரவாயில்லை, ஆனால் இம்மண்ணுக்கு சம்மந்தமே இல்லாத திப்புவுக்கு, நம் தமிழகத்தில் 3 கோடி ரூபாய் செலவில் திராவிஷ கட்சிகள் மணிமண்டபம் காட்டியிருக்கிறது.. இந்த அயோக்கியர்கள்தான் படேல் சிலையை எதிர்க்கிறார்கள்..
No comments:
Post a Comment