Sunday, 11 November 2018

பகுத்தறிவு போர்வையில் சுவாமி ஐயப்பனை இழிவுபடுத்தும் பன்னாட்டு கைக்கூலிகள்"*

*"பகுத்தறிவு போர்வையில் சுவாமி ஐயப்பனை இழிவுபடுத்தும் பன்னாட்டு கைக்கூலிகள்"*

அன்பிற்கினிய *இஸ்லாமிய பெருமக்களே, இஸ்லாமிய சகோதர, சகோதரிகளே வணக்கம்.*

*10வயதுக்கு மேற்பட்ட, 50வயதுக்குட்பட்ட பெண்கள் சபரிமலைக்கு செல்லலாமா? வேண்டாமா?* என்கிற சர்ச்சை ஒருபுறம் இருக்கட்டும்.

தன்னை *"பெரியாரிஸ்ட்"* பகுத்தறிவுவாதியாக காட்டிக் கொள்ளும் தங்கள் மதத்தை சார்ந்த *"ரெஹானா பாத்திமா சுலைமான்"* என்கிற சகோதரியும், *ஆந்திரா ஊடகவியலாரான  ஜக்கல் கவிதா* என்கிற பெண்ணும் *இன்று (19.10.2018) சபரிமலை ஐயப்பன் சன்னதிக்கு பலத்த போலிஸ் பாதுகாப்போடு சென்றதையும், ஐயப்பன் சன்னிதானத்தில் பக்தர்களின் கடும் எதிர்ப்பால் அவர்கள் இருவரும் திரும்பி வந்ததை மட்டுமே நீங்கள் அறிவீர்கள்.*

ஆனால் தங்கள் மதத்தை சார்ந்த *"ரெஹானா பாத்திமா சுலைமான்"* என்கிற அந்த சகோதரி *ஏற்கனவே ஐயப்ப பக்தர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்து கொண்டவர் என்பதும் அவருடைய நோக்கம் சுவாமி ஐயப்பனை தரிசிப்பதல்ல அவரை இழிவுபடுத்துவதே என்பதை நீங்கள் அறிவீர்களா..?* எனத் தெரியவில்லை.

ஏனெனில் அவர் *கடந்த 30.09.2018* அன்று *பிற்பகல்* சுமார் *1.42மணியளவில்* தனது *Rehana Fathima Pyarijaan Sulaiman* எனும் முகநூல் பக்கத்தில் தனது *Profile Picture* ஆக *ஒரு புகைப்படத்தை பதிவேற்றம் செய்துள்ளார்.*

அந்த புகைப்படமானது *சபரிமலை சென்று சுவாமி ஐயப்பனை தரிசிக்க செல்லும் பக்தர்கள் தங்களின் 48நாட்கள் விரதத்தை துவக்கும் போது கறுப்பு அல்லது நீல நிறத்திலான ஆடைகள் அணிந்து 108மணிகள் கொண்ட துளசிமணி மாலையை தங்களின் கழுத்தில் தரித்துக் கொள்வது சுவாமி ஐயப்பனின் பிரம்மச்சரிய கோலத்தை மேற்கொள்வதாக ஐதீகம்.*

*சுவாமி ஐயப்ப பக்தர்களின் பிரம்மச்சரிய விரதத்தை கேலி செய்து இழிவுபடுத்தும் வகையில்* தங்கள் மதத்தை சார்ந்த *"ரெஹானா பாத்திமா சுலைமான்"* என்கிற அந்த சகோதரி *துளசி மாலையை தனது கழுத்தில் அணிந்து கொண்டும், கைகளிலும் அம்மாலையை சுற்றிக் கொண்டும், ஐயப்பன் விரதத்தை குறிக்கும் கறுப்பு நிற சட்டை, வேஷ்டி அணிந்து கொண்டு குத்துக்காலிட்ட நிலையில் தனது தொடைப் பகுதி தெரியும் வகையில், தலையில் குடுமி போட்டுக் கொண்டு, நெற்றியில் விபூதிப்பட்டையிட்டு கண்ணத்தில் கை வைத்து* புகைப்படம் எடுத்து *அதனை கடந்த 30.09.2018 பிற்பகல் சுமார் 1.42மணியளவில் தனது Rehana Fathima Pyarijaan Sulaiman எனும் முகநூல் பக்கத்தில் தனது Profile Picture ஆக பதிவேற்றம் செய்துள்ளார்.*

நமது *ஒன்றுபட்ட இந்தியாவில் இந்து, இஸ்லாமிய மத சகோதர, சகோதரிகள் அனைவரும் ஒற்றுமையாக, அமைதியாக பயணித்துக் கொண்டிருக்கும் வேளையில்* அதற்கு *வேட்டு வைத்து, அமைதியை சீர்குலைத்து அதில் குளிர்காய நினைக்கும் பன்னாட்டு கைக்கூலிகள் பகுத்தறிவு போர்வையில் ஒளிந்து கொண்டு பிற மதத்தினரை இந்து மதத்திற்கு எதிராக தூண்டி விட்டு கொண்டிருக்கின்றன என்பது மறுக்க முடியாத உண்மை.*

*பகுத்தறிவு* என்கிற பெயரில் *சுவாமி ஐயப்பனை இழிவுபடுத்தும் செயலை செய்திருக்கும்* இந்த *சகோதரி* போன்று *இந்து மத சகோதரிகள் எவரேனும் தங்களின் மத நம்பிக்கையை இழிவுபடுத்தும் வகையில் நடந்து கொண்டிருந்தால் தங்களின் மனநிலை என்னவாக இருந்திருக்கும்...?* என்பதை *நினைத்துப் பார்க்க கூட நாங்கள் விரும்பவில்லை.*

மேலும் இங்கே *இந்து மதத்தை பற்றி பேசவோ, எழுதவோ தொடங்கி விட்டாலோ* அல்லது *பிற மதங்களில் நடைபெறும் தவறுகளை சுட்டிக் காட்டினாலோ* உடனடியாக *சம்பந்தப்பட்டவர்கள் மீது இந்துத்துவா முத்திரை குத்தப்படும் சூழலுக்கு அச்சப்பட்டே நடுநிலைவாதிகள் பலரும் வாய் திறந்து பேசவும், எழுதுகோல் எடுத்து எழுதவும் அச்சப்படுகின்றனர்.*

அதுமட்டுமின்றி *முல்லைப் பெரியாறு பிரச்சினையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காத பினராயி விஜயன்* தலைமையிலான *கேரள* (கம்யூனிஸ்ட்) *அரசை கடுமையாக கண்டித்த தமிழக அரசியல் கட்சிகள்* பலவும் *சபரிமலை ஐயப்பன் சன்னதிக்கு பெண்கள் செல்வது தொடர்பான விசயத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பை அவசர, அவசரமாக அமுல்படுத்த துடிக்கும் கேரள அரசை கண்டிக்க மறந்தது* வருகின்ற *நாடாளுமன்ற தேர்தலை மனதில் கொண்டும், பிற மதத்தினரின் வாக்கு வங்கியை கணக்கில் கொண்டும் தான்* என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

*உலகில் வணங்கப்படும் அனைத்து கடவுளர்களிலும் மத ஒற்றுமையை பறைசாற்றுகிற ஒரே கடவுளாக விளங்கும் சுவாமி ஐயப்பன்* விவகாரத்தில் நடைபெற்று வரும் *அரசியல் சித்து விளையாட்டுகளை மதங்களை கடந்து அனைவரும் கண்டிக்க வேண்டும். ஒவ்வொரு மதங்களை சார்ந்தவர்களின் மத நம்பிக்கையில் நீதிமன்ற உத்தரவை காரணம் காட்டி பிற மதத்தினர் எள்ளி நகையாடினால் நம்மை பிரித்தாள நினைக்கும் அரசியல் தீய சக்திகளுக்கும், பன்னாட்டு கைக்கூலிகளுக்கும் நாமே இடம் கொடுத்ததாகி விடும்.*

எனவே *மதங்களை கடந்து மனிதநேயம் காக்க அவரவர் மத நம்பிக்கைகளை காத்திடுவோம்.*

*நம்மை பிரித்தாள நினைக்கும் தீய சக்திகளுக்கு சரியான பாடம் புகட்டுவோம்.*

*பகுத்தறிவு என்கிற போர்வையில் ஜாதி, மத துவேஷ கருத்துக்களை பரப்பி வரும் அன்னிய சக்திகளை அடையாளம் கண்டு கொண்டு நமக்குள் பிரிவினை ஏற்படாவண்ணம் ஒன்றுபட்டு நிற்போம்.*

அன்புடன்
*சு.ஆ.பொன்னுசாமி*
(நிறுவனர் & மாநில தலைவர்)
*தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம்.*
அலைபேசி :- *9600131725*
கட்செவி அஞ்சல் *(WhatsApp) :- 9566121277.*
*19.10.2018 / இரவு 8.26மணி.*

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...