ஜெட் வேகத்தில் அசைன்மென்ட்டை முடித்த ஐ.ஜி.முருகன் ! ஸ்டாலினுக்கு இறுகும் கிடுக்குப்பிடி!
புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டதில் ஊழல் என்று கூறப்படும் புகாரில், தான் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்கிற பீதியில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உயர்நீதிமன்றத்தை அணுகியுள்ளார். தி.மு.க ஆட்சியின் போது கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலக முறைகேடு புகார் தற்போது மீண்டும் லைம் லைட்டுக்கு வந்துள்ளது.
அ.தி.மு.க அமைச்சர்களை குறி வைத்து தி.மு.க சட்ட ரீதியான நடவடிக்கையை தீவிரப்படுததியுள்ள நிலையில் தி.மு.கவை பலவீனப்படுத்த புதிய தலைமைச் செயலக கட்டிட முறைகேடு வழக்கை அ.தி.மு.க அரசு கையில் எடுத்துள்ளது.
பழம் நழுவி பாலில் விழுந்தது போல் புதிய தலைமைச் செயலக முறைகேடு வழக்கை நீதிபதி ரகுபதி கமிசன் விசாரிக்க உயர்நீதிமன்றம் தடை விதித்தது.
இதனை சரியாக பயன்படுத்திக் கொண்ட தமிழக அரசு தலைமைச் செயலக கட்டிட முறைகேடு வழக்கை உடனடியாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது. ஏற்கனவே ஸ்டாலின் மீது கோபத்தில் இருக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை ஐ.ஜியும் மின்னல்வேகத்தில் செயல்பட்டு வருகிறார்.
இந்த வழக்கில் எப்படியேனும் ஸ்டாலினை கைது செய்துவிட வேண்டும் என்பது தான் மேலிடம் ஐ.ஜி.முருகனுக்கு கொடுத்துள்ள அசைன்மென்ட். இதனை கச்சிதமாக முடிக்க இரவு பகல் பாராமல் அவர் பணியாற்றி வருகிறார். இந்த தகவலை அறிந்த ஸ்டாலின் தற்போதைய சூழலில் முறைகேடு புகாரில் கைது செய்யப்படுவதை விரும்பவில்லை. முதலில் கூட வழக்கு லஞ்ச ஒழிப்புத்துறையிடம் மாற்றப்பட்டதை தி.மு.க தரப்பு பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
ஆனால் புதிய தலைமைச் செயலக கட்டிடம் கட்டும் போது மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம், முதலில் ஒதுக்கப்பட்ட தொகை பின்னர் அதிகரிக்கப்பட்ட தொகை உள்ளிட்ட விவரங்களை லஞ்ச ஒழிப்புத்துறை கைப்பற்றி ஆவணங்களை தயார்படுத்தும் தகவலை அறிந்த பிறகு தான் தி.மு.க தரப்பு உஷார் ஆகியுள்ளது.
நீதிபதி ரகுபதி ஆணையம் விசாரித்து வந்த வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மாற்றியதை ரத்து செய்ய வேண்டும் என்று ரகசியமாக தி.மு.க ஒரு வழக்கை உயர்நீதிமன்றத்தில் நேற்று முன் தினம் தாக்கல் செய்தது.
அதாவது ரகுபதி ஆணையம் விசாரணைக்கு பயன்படுத்திய ஆவணங்களை ஆராயாமல் தமிழக அரசு அவசரகதியில் வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு கொடுத்துள்ளதால் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஸ்டாலின் அந்த மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார். உயர்நீதிமன்றத்தின் மூலம் விசாரணைக்கு தடை பெற்றுவிட்டால் தற்போதைக்கு கைது நடவடிக்கை இருக்காது என்று ஸ்டாலின் தரப்பு நம்புகிறது. ஆனால் தமிழக அரசோ உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலேயே லஞ்சஒழிப்புத்துறையிடம் வழக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
-ஆசியாநெட் நியூஸ் தமிழ்
No comments:
Post a Comment