பாரதியார் இறந்தபிறகு 34 ஆண்டுகள் செல்லம்மா உயிர் வாழ்ந்து இருக்கிறார்
. அந்தக் காலகட்டத் துலதான் தனது இரண்டாவது மகள் சகுந்தலாவிற்குத் திருமணம் செய்து வைத்தார். பாரதி ஆஸ்ரமத்தை உருவாக்கி அவரது பாடல்களின் முதல் தொகுதியை புத்தகமாக வெளியிட்டார். தனது இரண்டாவது மகளுக்கு கடன் வாங்கித்தான் திருமணம் செய்து வைத்தார். ‘பாரதி பிரசுராலயம்’ நிறுவனத்தை நான்காயிரம் ரூபாய்க்கு விற்று, மகள் திருமணக் கடனுக்காக 2,500 ரூபாயை அடைத்து விட்டார். இறுதியாக, பாரதியார் கவிதை களை விற்று வெறும் 1,500 ரூபாய் மட்டுமே செல்லம்மா பெற்றார்.
கயிற்றுக் கட்டிலில் படுத்தபடுக்கையாக இருந்தார். சுயநினைவு இல்லாத சூழ்நிலை யிலும் வாயைத் திறந்தால் பாரதி பாட்டு... குறிப்பாக கண்ணன் பாட்டு வரும்.‘திண்ணை வாயில் பெருக்க வந்தேனெனைத் தேசம் போற்றத் தன் மந்திரி யாக்கினான்.அதைத் திரும்ப, திரும்பச் சொல்லி வந்தார்.
பாரதியின் எழுத்துக் களை பிரசுரமாக்கிய செல்லம்மா முன்னுரை யில் எழுதினார்:
‘‘தமிழ்நாட்டு மக்களே, நான் படித்தவளல்ல, இந்த நூலுக்கு முகவுரை எழுதவும் நான் முன்வர வில்லை. அதற்கு
எனக்கு சக்தியும்
இல்லை.அவர் உடல், பொருள், ஆவி மூன்றையும் தேச கைங்கரியத்துக்காக, முழுமனத்துடன் அர்ப்பணம் செய்தார்.
நமது நாடு இன்னது, நமது ஜனங்கள் யாவர், நமது சக்தியும், உணர்ச் சியும் எத்தகையது? இவைகளைப் பற்றிய விவகாரங்களும்,சண்டை களும்தீர்மானங் களும் அவர் ஜீவனுக்கு ஆதாரமாக இருந்தன.
எதுவும் யோசித்தாக வேண்டியதில்லை. திடீர் திடீர் என்று அவருடைய புதிய எண்ணங்கள், புதிய புதிய பாட்டுக்கள், புதிய புதியகொள்கை கள் என் இரு காதுகளும் மனமும் இருதயமும் நிரம்பித் ததும்பும் இந்த ஒரு பாக்கியம் நான் பெற்றேன். இந்த பாக்கியத்தை மறுபடி பெற எத்தனை கோடி ஜென்மம் வேண்டு மானாலும் பெறத் தயாராக இருக்கிறேன்.
அவரது தேகத்தில் ஜீவன் போய்விட்டது. அவரது ஜீவனுக்கு ஆதாரமாக இருந்த பாரத மாதாவின் ஜீவசக்தி என்றென்றும் அழியாதது. தமிழ்நாடு உள்ளளவும், தமிழ்நாட் டில் ஒரு மனிதனோ, குழந்தையோ தமிழ் பேசிக் கொண்டிரு க்குமளவும் பாரதியின் மூலமாக நமக்குக் கிடைத்த ஜீவசக்தி என்றென்றும் நிலைத் திருக்கும் என்று என் இருதயம் சொல்கிறது. இதைத்தான் நான் உங்களுக்குச் சொல்ல வந்தேன். நீங்கள் நீடூழி வாழ்க.பாரதியாரின் நூல்கள் முழுமையும் அச்சிட்டு வெளியிடும் பொறுப்பை என் ஜீவன் உள்ளவரை நான் வகித்து பிற்பாடு தத்தம் செய்துவிட்டுப் போகத் தீர்மானித்திருக்கிறேன்.
வந்தேமாதரம்.’’
No comments:
Post a Comment