ஐந்து மாநில தேர்தலில் பாஜகவுக்கு பின்னடைவு -
பாஜகவுக்கு தன்னை சுயபரிசோதனை செய்து கொள்ள ஒரு அரிய வாய்ப்பு.
1. முதலில் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, பாஜகவுக்கு வாய்த்த நன்மையா - தீமையா? என்பது பற்றி தெளிவான முடிவுக்கு வர வேண்டும்.
2. மக்களால் எளிதில் உணரத்தக்க நன்மைகளை விரைந்து செய்ய வேண்டும்.
3. அயோத்தியில் ராமர் ஆலயம் அமைப்பது குறித்து தாமதமின்றி அவசரச் சட்டம் கொண்டு வர வேண்டும். (போகிற போக்கைப் பார்த்தால், வோட்டுக்காக அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு ஆதரவாக காங்கிரஸ் களமிறங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.)
4. வருமான வரி உச்ச வரம்பு 5 லட்சமாக உயர்த்த வேண்டும்.
5. நாட்டில் உள்ள டோல்கேட் முறையை முற்றிலும் அகற்ற வேண்டும்.
6. Demonestion உண்மை நிலவரம் என்ன? கருப்பு பணத்தை வைத்து இருப்பவர்களை பெயர்களை வெளியிட்டு அவர்களுக்கு தண்டனையும் வழங்க வேண்டும்
7. பெட்ரோல் டீசல் விலை GSTக்குள் கொண்டு வருவது.
8. சமையல் கேஸ் மானியங்களை தவிர்த்து விட்டு அதற்கு உண்டான(845-345.65) சிலிண்டர் விலை499.35 ரூபாய் நிர்ணயிக்க வேண்டும்..
9. விவசாயிகளின் பிரச்சினைகளை சரிசெய்ய வேண்டும்.
10. தனித்து தேர்தலில் போட்டியிடாமல் கூட்டணி அமைக்க வேண்டும்.
11. மத்திய அரசின் திட்டங்களை சாமானிய மக்களுக்கும் புரியும் வகையில் பரப்புரை செய்யவேண்டும்.
12. ஏழை மக்களுக்கான சலுகைகள் வழங்கப்பட வேண்டும்.
இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் விஷயங்களை எவ்வளவுதான் செய்தாலும், அது மக்களிடம் எந்தப் பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்தாது. இவற்றை புரிந்து கொள்ள மக்களுக்கு பொறுமையும் சக்தியும் இல்லை..சில கொள்கைகளை மாற்றி மக்களுக்கு நன்மை செய்தது போன்ற தோற்றத்தையேனும் காட்ட வேண்டும் ..
இல்லையென்றால், கொள்ளையர்களின் கைக்குள் இந்தியா சென்று விடும் . இப்போது ஒட்டுமொத்த இந்திய ஐனநாயத்தின் எதிரிகள் ஒன்று கூடி உள்ளனர். இவர்களிடமிருந்து இந்தியாவைக் காப்பது அவசியம். அதற்கு உடனடித் தேவை, வாக்கு அரசியலுக்கான சாணக்கியம்.
இப்படிக்கு,
இந்தியாவை நேசிக்கும் சாமானியன்
Whatsapp-ல் வந்த ஒரு பதிவு ( சற்று எடிட் செய்யப்பட்டுள்ளது.)
No comments:
Post a Comment