Thursday, 13 December 2018

இறுதியில் காமராஜர் பயந்ததுதான் நடந்தது...

பணமதிப்பு விவகாரத்தில் அதாவது மோடி பணமதிப்பினை நீக்கினார் அதனால் நாடு நாசமாயிற்று என்கின்றார்கள்

இன்னொரு கோஷ்டி மோடி அயல்நாடுகளுடன் ரூபாயில் வர்த்தகம் செய்தால் அது காங்கிரஸ் செய்ததுதான் என்கின்றார்கள்

காங்கிரஸ் என்ன செய்தது என்றால்? அவர்கள் செய்ததும் வில்லங்கமான விஷயம்

அது இந்திரா காந்தி செய்த பணமதிப்பு குறைப்பு

அன்று அமெரிக்காவின் நிர்பந்தம் காரணமாக இந்திய ரூபாயின் மதிப்பு குறைக்கபட்டது. அப்படி குறைந்தால் அந்நிய முதலீடு குவியும் என்றெல்லாம் சப்பை கட்டு கட்டபட்டது

இந்திய ரூபாயின் மதிப்பினை குறைத்தார் இந்திரா, யாரும் எதிர்க்கவில்லை அல்லது அதன் தன்மை அப்பொழுது புரிந்திருக்கவில்லை.

இந்திரா கொஞ்சம் சோவியத் சார்பு என்பதால் கம்யூனிஸ்டுகள் எல்லாம் மகா அமைதி, பாஜக எல்லாம் அப்பொழுது இல்லை, அதன் தாயான‌ ஜனசங்கம் எங்கோ பஜனை பாடிகொண்டிருந்தது

ஒரே ஒரு குரல் எதிராக சீறியது

"எனக்கு பொருளாதாரம் தெரியாதுண்ணேண், ஆனா இப்படி நமது பண மதிப்பை குறைத்தால் பெட்ரோலுக்கும் இன்னும் பல இறக்குமதிக்கும் நிறைய பணம் நம்ம பணம் கொடுக்கவேண்டி வரும்ணேன்

இதால நம்ம நாட்ல விலைவாசி உயரும்ணே, தங்கம் முதல் எல்லா விலையும் கூடும்ணேன், இது செய்ய கூடாதுண்ணே" என சீறினார் காமராஜர்

படிக்காத கிழவர்களுக்கு பதில் சொல்லவேண்டிய அவசியமில்லை என தன் நிலையில் உறுதியாக நின்று பணமதிப்பினினை குறைத்தார் இந்திரா

காமராஜர் இந்திரா மோதல் இதனால் இன்னும் அதிகரித்தது.

ஆனால் அதன்பின்புதான் இந்திய விலைவாசி மகா வேகமாக உயர்ந்தது,
இன்று டாலருக்கு நிகரான வீழ்ச்சி அன்றுதான் தொடங்கியது

அந்த இந்திரா செய்ததை எல்லோரும் மறந்துவிடுகின்றார்கள்,

இந்திரா அதனை செய்திருக்க கூடாது, ஆனால் கடந்தவருடம் சீனா அப்படி செய்ததை போல அன்றே விஷபரீட்சையில் இறங்கினார் இந்திரா.

சீனா எந்த சவாலையும் எடுக்கலாம்,
அங்கு நிலையான அரசு கடும் கட்டுப்பாடுகள். ஆனால் இந்தியா போன்ற நாடுகள் அம்மாதிரி விஷயங்களில் இறங்கியிருக்க கூடாது

மோடி அப்படி செய்யவில்லை மாறாக இருக்கும் பணத்தை மாற்றிகொள்ளத்தான் வாய்பளித்தார்.

ஆக மோடியின் நடவடிக்கையினை பணமதிப்பு நீக்கம் என சொல்வதே சரியான வார்த்தை ஆகாது, கரன்சியினை மாற்றிகொள்ள சொன்னார்

ஆனால் இந்திரா அன்று செய்ததுதான் பணமதிப்பு நீக்கம் அல்லது குறைப்பு

அதன் விழைவுதான் 1980களுக்கு பின் நடந்த ராக்கெட் விலைவாசி உயர்வு
இந்திய பணம் இப்படி வீழ்ந்து கிடப்பது.

இதனை எல்லாம் பாஜக காரர்கள் எடுத்து சொல்லவேண்டும், ஆனால் அவர்களோ தமிழிசை போன்றவர்களை என்னவெல்லாமோ பேசவைத்து காமெடி செய்கின்றனர்

எது பேசவேண்டுமோ அதனை பாஜகவினர் பேசுவதில்லை,
எது பேசகூடாதோ அதனை  பேசிவிடுகின்றனர்

உண்மையில் இங்கு டாலருக்கு நிகரான வீழ்ச்சியினை வலிய தொடங்கி வைத்தவர் இந்திரா,
அவர் அப்படி செய்திருக்க கூடாது, காமராஜர் எனும்  தொலை நோக்குவாதியினை புறந்தள்ளி இருக்க கூடாது

இறுதியில் காமராஜர் பயந்ததுதான் நடந்தது...

🕉

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...