Thursday, 13 December 2018

காங்கிரஸ் கட்சியின் தலைவர் பிரதமரிடமும் நாட்டு மக்களிடமும் பகிரங்க மன்னிப்பு கேட்பாரா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.


https://www.facebook.com/185115731901122/posts/594361077643250/

ரபேல் ஒப்பந்தம்: மோடி அரசின் முடிவு சரியானது, விசாரணைக்கு உத்தரவிட முடியாது - உச்ச நீதிமன்றம் அதிரடி : வெளுத்துப் போன காங்கிரஸ் கட்சியின் சாயம்!

http://www.kathirnews.com/2018/12/14/big-blow-for-congress-on-rafale/

http://www.kathirnews.com/2018/12/14/big-blow-for-congress-on-rafale/

.
ரபேல் போர் விமானம் வாங்கும் அரசின் கொள்கை முடிவு சரியானது தான் என்றும், அரசின் கொள்கை சார்ந்த முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக கண்காணிப்புடன் கூடிய விசாரணைக்கு உத்தரவிடக்கோரி, வழக்கறிஞர் எம்.எல்.சர்மா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். பிறகு, வினீத் தண்டா என்பவரும் அதே கோரிக்கையுடன் மனு தாக்கல் செய்தார். ஆம் ஆத்மி பிரமுகர் சஞ்சய் சிங்கும் வழக்கு தொடர்ந்தார்.

பின்னர், முன்னாள் மத்திய மந்திரிகள் யஷ்வந்த் சின்கா, அருண் ஷோரி மற்றும் வக்கீல் பிரசாந்த் பூஷண் ஆகியோர் இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யுமாறு சி.பி.ஐ-க்கு உத்தரவிடக்கோரி மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்கள் மீது தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு விசாரணை நடத்தியது. விசாரணை முடிந்த நிலையில், கடந்த மாதம் 14-ஆம் தேதி, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்தது.

இந்நிலையில், தலைமை நீதிபதி அமர்வு, இம்மனுக்கள் மீது இன்று தீர்ப்பு அளித்தது. அப்போது ‘ரபேல்’ விவகாரத்தில் விசாரணைக்கு உத்தரவிட முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர். அத்துடன் விசாரணை கோரிய அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தனர்.

ரபேல் போர் விமானம் வாங்கும் அரசின் கொள்கை முடிவு சரியானது தான் என்றும், அரசின் கொள்கை சார்ந்த முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து, காங்கிரஸ் கட்சி மத்திய மோடி சர்க்கார் மீது அபாண்டமாக பொய் குற்றச்சாட்டை முன் வைத்தது நிரூபணம் ஆகியுள்ளது. பச்சை பொய் உரைத்த காங்கிரஸ் கட்சியின் தலைவர் பிரதமரிடமும் நாட்டு மக்களிடமும் பகிரங்க மன்னிப்பு கேட்பாரா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...