Thursday, 13 December 2018

மோடி அரசாங்கத்தை திட்டும் புண்ணியவான்கள் கவனத்திற்கு  

https://m.facebook.com/story.php?story_fbid=10210150396634647&id=1780487693

மோடி அரசாங்கத்தை திட்டும் புண்ணியவான்கள் கவனத்திற்கு  

 நான் சேலம் மாவட்டம் தம்மம்ட்டி என்னும் பேரூராட்சி பகுதியில் ஜாப்டைப் மற்றும் பத்திரம் எழுதும் தொழில் பார்த்து வருகிறேன். எங்களது அன்டை ஊரான மண்மலை என்னும் கிராமத்திலிருந்து ஒரு பெண்மணி கடந்த வாரம் சனியன்று என்னிடம் அழுது கொண்டே ஒரு புகார் விண்ணப்பம் தம்மம்பட்டி காவல்நிலையத்திற்கும் சேலம் மாவட்ட ஆட்சியருக்கும் அனுப்ப வேண்டும் என்று கூறினார்.  விசாரித்ததில் அவரின் கணவர் ஆப்பிரிக்கா நாடான உகாண்டா என்னும் தேசத்தில் ஒரு கம்பெனியில் போர்வெல் போடும் வண்டியில் டிரில்லர் மற்றும் டிரைவர் பணிக்காக வெளிநாடு சென்றுள்ளதாகவும் மாதம் ரூ. 30000/- சம்பளம் எனவும் முதல் 3 மாதங்களுக்கு மட்டும் சம்பளம் அனுப்பியதாகவும் அதற்கு பிறகு அவரது கணவருக்கு சம்பளம் தரவில்லை. மற்றும் இந்தியாவிற்கு கடந்த 18 மாதங்களுக்குமேலாகியும் லீவிற்கும் அனுப்பவில்லை, சாப்பாடு  சரிவர போடுவதில்லை என்னை அடிக்கிறார்கள் எப்படியாகிலும் இந்தியா வரவழைக்க புகார் செய் என்று அவரது கணவர் போனில் கூறியுள்ளதாக கூறினார்.  நான் இங்கு லோக்கல் காவல்நிலையம் கொடுத்து புண்ணியமில்லை என்று கருதி மாண்புமிகு சுஷ்மாசுவராஜ் வெளியுறவுத்துறை அமைச்சர் அலுவலகத்திற்கு ஒரு மெயில் செய்யலாம் என அவர்களிடம் கூறி அவர்களின் சம்மதத்தின் பேரில் எனக்கு தெரிந்த அரைகுறை ஆங்கில அறிவை பயன்படுத்தி ஒரு மெயில் செய்தேன்.        கடந்த 3ம் தேதி தங்கள் மெயில் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது பொறுத்திருக்கவும் என்று ஒரு மெயில் வந்தது. இன்று உகாண்டா வில் உள்ள இந்திய தூதரக அலுவலகத்திலிருந்து ஒரு மெயில் எனது மெயில் ஐடிக்கு வந்து இருந்தது. அவர்களது கம்பெனி எம்டி மற்றும் புரெடாக்ஷன் மேனேஜர் அவர்கள் மற்றும் மேற்படி இந்திய தொழிலாளி ஆகியோரை உரிய முறையில் விசாரணை மேற்கொண்டு எனது அன்டை கிராம தொழிலாளியின் சம்பள பாக்கி தொகை ரூ. 4,95,000/- ஆகியவற்றையும் கொடுத்து இன்னும் 10 நாட்களுக்குள் இந்தியா அனுப்பி வைப்பதாக கூறி உள்ளார்கள். எனவே கவலை வேண்டாம் இந்த மாத இறுதியில் அவர் இந்தியா வந்து விடுவார் என்று மெயில் வந்துள்ளது.  உண்மையிலேயே மெய் சிலிர்த்து விட்டேன். வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அவர்களுக்கு எனது சிரம் தாழ்ந்த நன்றியினை காணிக்கையாக்குகிறேன்.  தோழமையுடன் ராகவேந்திரன்

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...