#ரிபப்லிக் டிவியின் அர்னாப் கோஸ்வாமி மோடிஜீக்கு எழுதிய கடிதம் கண்ணீரை வரவழைக்கிறது.
#மதிப்புக்குரிய பிரதம மந்திரி அவர்களே.,
#உங்களைப் போன்ற ஒரு பிரதமரைப் பெறுவதற்கு நாங்கள் இன்னும் தகுதி பெறவில்லை. பெரும்பாலான மக்களுக்கு உங்களுடைய உழைப்பின் மதிப்புத் தெரியவில்லை.
#ஒரு நாளைக்குக் கிட்டத்தட்ட 16 மணி நேரம் நாட்டு மக்களுக்காக உழைக்கிறீர்கள் , உங்களுடைய பெரும்பாலான ஓய்வு நேரத்தையும் தியாகம் செய்கிறீர்கள். ஆனால் உங்களுடைய உழைப்புக்கான அங்கீகாரத்தையும்., பாராட்டையும் ஒரு நாளும் நீங்கள் பெறவில்லை.
#ஆனால் சின்னஞ்சிறு விஷயமானாலும் உங்கள் மீது குற்றம்சாட்டப்படுகிறது. இந்த நாட்டு மக்கள் இந்த தேசத்தை 60 ஆண்டுகளாக ஒரு குடும்பத்திடம் ஒப்படைத்து இருந்தார்கள். ஆனால் ஐந்து வருடம் உங்களிடம் இந்த நாட்டை ஒப்படைத்துப் பொறுமை காக்க முடியவில்லை. இதற்குக் காரணம் என்னவென்றால் போலி அரைவேக்காடு அறிவுஜீவிகளும்., சோம்பேறி மனிதர்களும்.
இந்த சோம்பேறி மனிதர்களால் நான்கு பேர் கொண்ட ஒரு சிறிய குடும்பத்தையே அமைதியாக நடத்த முடியவில்லை. ஆனால் அவர்கள் உங்களுக்கு இந்த நாட்டை வழிநடத்த அறிவுரை கூற என்ன தகுதி உள்ளது.
இந்த நாட்டின் பிரதமரான ஒரே குற்றத்திற்காக இவர்கள் உங்களைப் பழிவாங்கத் துடிக்கிறார்கள். சட்டீஸ்கர் தேர்தல் முடிவுகளைச் சற்று எண்ணிப்பாருங்கள். அவர்கள் எட்டாவது பத்தாவது கூடப் படிக்காதவர்களைத் தேர்வு செய்துள்ளனர். ஆனால் அவர்கள் தங்களின் சார்பாக நிறுத்தப்பட்ட வேட்பாளரைத் தேர்வு செய்யவில்லை.
இந்தியாவில் பெரும்பாலான மக்களின் குரலாக இருப்பது என்னவென்றால் இன்று தேர்தல் வந்தால் மோடி தோல்வி அடைந்து விடுவார்.
இந்த நாட்டின் மேன்மைக்காகக் கடின உழைப்பைச் செலுத்திய பிறகும் இவ்வாறான விமர்சனங்களை என்னால் கேட்கமுடியவில்லை. இந்த நாடு வல்லரசு இலக்கை நோக்கிச் செல்லும் உண்மையை இந்த மக்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. நாடு ஒவ்வொரு துறையிலும் வளர்ச்சிப் பாதையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. ஆனால் இந்த மக்களுக்கு இவை எல்லாம் வேண்டாம். அவர்களுக்குத் தேவையானது எல்லாம் ஒரு கிலோ துவரம்பருப்பு ஒரு ரூபாய்க்கும்., இலவச வெங்காயமும் கிடைத்தால் போதும். இதை மட்டும் நீங்கள் செய்தால் உங்கள் வெற்றி மிகப் பெரியதாக இருக்கும். இந்த நாட்டு மக்கள் ஊழலுக்குப் பழக்கப்பட்டு விட்டார்கள். ஊழலைச் சகித்தும் கொள்கிறார்கள்.
நாட்டில் பொறுமையாக நடைபெறும் வளர்ச்சிப் பாதையை அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது 2019 இல் உங்களைப் பிரதமராகப் பார்க்க முடியாதோ என்று. இந்த நாட்டு மக்கள் யாரோ ஒரு பப்புவை யாராவது வழிநடத்தத் தேர்ந்தெடுப்பார்கள். இந்த நாட்டு மக்கள் உருளைக்கிழங்கும் துவரம்பருப்பும் இலவசமாகக் கொடுப்பவர்களுக்கு அடிமையாக இருக்கத் தயாராக இருக்கிறார்கள்.
இந்த நாட்டின் வரலாற்றில் இருந்து இந்த மக்களைப் பற்றிப் புரிந்து கொள்வது என்னவென்றால். யாரும் மாறுவதற்குத் தயாராக இல்லை ஆனால் அனைவருக்கும் மாற்றம் வேண்டும். எல்லா மக்களும் 3G பேக்கேஜில் ஸ்மார்ட்போன் வைத்துக்கோண்டு வாய்கிழியப் பேசுகிறார்கள். 300 ரூபாய்க்கு 3ஜி பிளான் செலவு செய்கிறார்கள். ஆனால் துவரம்பருப்பு விலை ஏறிவிட்டதாகப் புலம்புகிறார்கள். இது நம்பும்படியாகவா இருக்கிறது.
பிரதமர் அவர்களே நீங்கள் உலகின் மிக சக்திவாய்ந்த முதல் 10 நபர்களில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள். ஆனால் இதைப் பற்றியெல்லாம் இந்த நாட்டு மக்கள் கருதுவதில்லை. இது போன்ற செய்திகள் வரும்பொழுது இவர்கள் செவிடர்களாகவும் குருடர்களாகவும் மாறிவிடுகிறார்கள். இந்த வயதில் நீங்கள் ஓய்வெடுத்துக் கொண்டு வாழ்வை மகிழ்ச்சியாக அனுபவித்துக்கொண்டும் இருக்கலாம். உங்கள் கடின உழைப்பு கடமை உணர்ச்சி அற்பணிப்பு இவற்றின் மதிப்பு எல்லாம் இந்த நாட்டு மக்களுக்குத் தெரியவில்லை. இது மிகப் பெரிய ஏமாற்றமாக இருக்கிறது.
ஜெய்ஹிந்த்
#அர்னாப்_கோஸ்வாமி
குடியரசு தொலைக்காட்சியிலிருந்து.
No comments:
Post a Comment