இது நேர்மையாக அரசியல் செய்பவர்களுக்கான நாடு அல்ல..
அதற்க்கான காலமும் அல்ல.. த்ரேதா (ராமரின் யுகம்) யுகத்தில் தர்மம் முழுமையாக இருந்ததாகவும், அது துவாபர யுகத்தில் (கண்ணனின் யுகம்) படிப்படியான அழிந்து வந்ததையும் புராணங்களில் படித்திருக்கிறோம்.. கண்ணன் தன் இறுதி காலத்தில் உத்தவருக்கு சொன்ன கீதையில், கலியுகத்தில் தர்மம் என்பதே இல்லாமல் போகும்.. படிப்படியாக மனிதர்கள் சுய ஒழுக்கம், கட்டுப்பாடு, மத நம்பிக்கைகள் என எல்லாவற்றயும் இழப்பார்கள்.. அதர்மம் தலைவிரித்தாடும்.. மனிதன் சுயநலத்தின் சொரூபமாக விளங்குவான் என சொன்னார்.. அதன்படி, இப்பொழுது இந்த நாட்டு மக்கள், நாட்டுக்கு எது நல்லது என்பதை யோசிக்க அறவே மறந்துவிட்டார்கள்.. எனக்கு என்ன? எனக்கு என்ன என்பதை மட்டுமே சிந்திக்கிறார்கள்.. ராஜஸ்தானத்திலும் சட்டீஸ்கரிலும் பாஜக தோற்றது எனக்கு வருத்தம் அளிக்கவில்லை.. அவர்களுக்கு இந்த பாடம் தேவைதான்.. ஆனால் அவர்களுக்கு மாற்றாக ஏதாவது மாநில கட்சி வெற்றிபெற்றிருந்தால் கூட நான் நிம்மதியடைந்திருப்பேன்.. ஆனால் வென்றதோ, இந்த நாட்டை அந்நிய சக்திகளோடு சேர்ந்து கூரையாடி, மதம் மாற்றி, அழிக்க நினைக்கும் காங்கிரஸ்.. இவர்கள் மீண்டும் தலைதூக்குவது நாட்டிற்கு நல்லதல்ல.. சோனியா குடும்பம் தலைமை தாங்கும் வரையாவது.. பாஜக, ஏன் மோடி என்றே சொல்கிறேன்.. அவர்களுடைய சுயத்தை இழக்கிறார்கள்.. தேர்தலுக்கு முன் இந்துத்வா, தேர்தலில் வெற்றி பெற்றால் பொருளாதாரம், வளர்ச்சி என்று போய்விடுவது.. பொருளாதாரம், வளர்ச்சி எல்லாம் முக்கியம்தான்.. ஆனால் இந்துத்வா இல்லாத பாஜக இந்த நாட்டு மக்களுக்கு தேவையில்லை.. ராமர் கோவிலாகட்டும், பாகிஸ்தான் ஆகிரமிப்பு காஷ்மீர் ஆகட்டும், பொது சிவில் சட்டம் ஆகட்டும்.. என்ன முயற்சி மேற்கொண்டது இந்த அரசு? அதேபோல 2G வழக்கில் சொதப்பல், இதுவரை சிதம்பரத்தின் மீது கூட கைவைக்கமுடியவில்லை..சு சாமி என்கிற தனிமனிதன் மட்டுமே சோனியா ராகுல் மீதான நேஷனல் ஹெரால்ட் வழக்கில் மாட்டிக்கொண்டிருப்பதற்கு காரணம்.. அரசு எதுவும் பெரிதாக செய்ததாக தெரியவில்லை..இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்....Nostradamus இன் கணிப்பு உண்மையாகிவிடுமோ என்கிற அச்சம்தான் ஏற்படுகிறது.. மோடியை பல ஆண்டுகளுக்கு யாராலும் வீழ்த்த முடியாது.. ஆனால் அவர்கள் அவர்களின் சுயத்தை இழந்தால், தோற்கடிக்கப்படுவார் என்பதுதான் அது.. இனியாவது விழித்துக்கொள்ளுமா பாஜக? இந்த நரிகளை வேட்டையாடும் புலியாக இருக்குமா அல்லது நெறிகளுக்கு பயந்து தங்களை தற்காத்துக்கொள்ளும் பூனையாக இருக்க போகிறதா? 2019 தேர்தலில் பாஜக தோற்பது நாட்டிற்கு நல்லதல்ல.. இதை பாஜக தலைமை உணர்ந்திருக்கிறதோ இல்லையோ..நாம் நன்கு உணர்ந்திருக்கிறோம் ஜெயஸ்ரீ ராஜன்
No comments:
Post a Comment