Thursday, 13 December 2018

இந்தியா முழுக்க கருப்பு பண முதலைகளா இருக்கே... அவர்களிடம் இருந்து கருப்புப் பணத்தை மீட்பது எப்போது?

இந்தியா முழுக்க கருப்பு பண முதலைகளா இருக்கே... அவர்களிடம் இருந்து கருப்புப் பணத்தை மீட்பது எப்போது?

ஸ்விஸ் மற்றும் இன்னபிற நாடுகளில் இருந்து கருப்புப் பணத்தை எப்படி மீட்பது?

தீவிரவாதிகளுக்கு நிதி செல்வதை தடுப்பது எப்படி?

வரி கட்டாதவர்களை வரி கட்ட வைப்பது எப்படி?

கும்பல் கும்பலாக மதம் மாற்றம் செய்து இன் நாட்டு பிரஜைகளை நாட்டுக்கெதிரா நக்ஸல்களாகவும் மாவோக்களாகவும் மார்க்கத் தீவிரவாதிகளாகவும் திருப்பி விடுகிறார்களே அதைத் தடுப்பது எப்படி?

எல்லையில் தீவிரவாதிகள் அட்டகாசம் பொருக்க முடியலையே அதை ஒழிப்பது எப்படி?

டாலருக்கு நிகராக இந்திய ரூபாய் மதிப்பு சரிந்து கொண்டே வருகிறதே அதை நிரந்திரமாக சீர் செய்ய முடியுமா?

பெட்ரோல் டீசல் விலை நாள் ஒரு வண்ணமாக ஏறி வருகிறதே.... தேர்தல் காலங்களில் மட்டுமே சரிவடைகிறதே இதற்கு நிரந்தரத் தீர்வே கிடையாதா?

மருத்துவம் படிக்கனும்னா 50 இலட்சத்திலிருந்து ஒரு கோடி வரை செலவு செய்ய வேண்டியது இருக்கிறதே இந்த அக்கிரமம் என்று ஓயும்?

மாநிலத்துக்கு மாநிலம் அத்தியாவசியப் பொருட்களுக்கு இவ்வளவு விலை வித்தியாசமா?

ஊடுருவல்களை தடுக்க முடியாதா?

அமெரிக்க ஏகாதிபத்தியத்தில் இருந்து தப்பவே முடியாதா?

அரேபிய மிரட்டல்களில் இருந்து விடிவே கிடையாதா?

விவசாயத்தில் இடைத் தரகர்களின் அட்டூளியங்கள் என்று ஓயுமோ?

வங்கிக் கடன்கள் அனைத்தும் செல்வந்தர்களுக்கு மட்டும் தானா?

படித்த இளைஞர்கள் வேலைக்கு சென்று பிறரிடத்தில் மட்டும் தான் வேலை செய்யனுமா? சுயமா தொழில் தொடங்க வாய்ப்பே இல்லையா?

இலங்கைக் கடற்படை கொத்துக் கொத்தாக தமிழர்களை சுட்டுக் கொல்றானே இதுக்கு விடிவே இல்லையா?

காவிரி பிரச்சினைக்குத் தீர்வே இல்லையா?

சீனாவின் அத்துமீரல்களைத் தடுக்க வழியே இல்லையா?

கந்துவட்டி கொடுமைக்குத் தீர்வே இல்லையா?

இந்தியா உலக வங்கியில் இருந்து கடன் பெறுவதைத் தடுக்கவே முடியாதா?

வாங்கியக் கடனை திருப்பி அடைக்கவே முடியாதா?

ஊழல் இல்லாத இந்தியாவைக் காணவே முடியாதா?

பற்றாக்குறை அற்ற பட்ஜெட் போடவே முடியாதா?

திருக்குறளை இந்தியா முழுவதும் கொண்டு சேர்க்க முடியாதா?

கடன் மோசடி செய்து ஓடிய செல்வந்தர்களை தண்டிக்கவே முடியாதா?

பணமில்லாப் பரிவர்த்தனை இந்தியாவில் சாத்தியமேப்படாதா?

தமிழகத்தில் உலகத் தரம் வாய்ந்த அரசாங்க மருத்துவமனை அமைய வாய்ப்பே இல்லையா?

இந்தியாவில் அன்னிய சக்திகளை ஒடுக்கும் இந்து இயக்கங்கள் எழுச்சி பெறவே செய்யாதா?

இந்துக்களிடையே ஒற்றுமை வரவே செய்யாதா?

இந்திய வங்கிகளை நெறிப்படுத்துவது என்பது காணல்நீரா?

இப்படி பல விடை காண முடியாத கேள்விகளை 60ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியில் கேட்டு கேட்டு மக்கள் அழுத்தே போய் விட்டனர். காங்கிரஸ் அரசியல்வாதிகளும் இந்தக் கேள்விகளணைத்தையும் ஒரு காதில் பெற்று மறு காது வழியாக விட்டு விட்டு மக்கள் பணத்தைச் சுறுட்டுவதில் மட்டுமே அக்கரை செலுத்தினர். லட்சம் கோடி அளவிற்கு ஊழலும் செய்து தேசத்தை அசிங்கப்படுத்தினர். இந்தியத் திருநாட்டை ஒரு குடும்பத்துக்கு மட்டுமே சொந்தமாக்கினர்....

ஆனால் இந்த அத்தனைக் கேள்விகளுக்கும் மோடித் தலைமையிலான பாஜக அரசு 4 1/2 வருடத்தில் பதில் தந்தது.... அந்த பதில்களை நிலைநாட்ட ஓடி ஓடி உழைத்தது. அந்த பதில் பல நேரங்களில் கசப்பு மருந்தாகச் செயல்பட்டது. ஆனால் பெரும்பாலான மக்கள் அந்தக் கசப்பிற்கு பின்னால் மறைந்திருக்கும் நிரந்திரமான நிவாரனத்தை உணரவில்லை. எந்தக் கேள்விகளுக்கும் பதில் தெரியாத முட்டாள்களுக்கு வாய்ப்பளித்துவிட்டனர். தவறு மக்கள் மீதல்ல. அரசின் பதில்களை படித்தவர்களாகிய நாம் மக்களிடம் சரிவரக் கொண்டு போய் சேர்க்காதது தான். இனியாவது நமது கடமையை உணர்ந்து பொறுப்பாக செயல்பட்டு இந்தியப் பிரஜைகளை காக்க உறுதி கொள்வோமாக......

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...