https://youtu.be/KeIBwPZe6gI
*இந்தியா முஸ்லிம் நாடாகி விடாமல் தடுக்க வேண்டும் என்று பிரதமருக்கு கோரிக்கை வைத்த மேகாலயா உயர்நீதிமன்ற நீதியரசர் சுதீப் ரஞ்சன் சென் அவர்களது கருத்து செவி சாய்க்கப்பட வேண்டிய நல்ல கருத்து!இது விவாதிக்க கூடிய,அல்லது ஐயப்பட வேண்டிய கருத்து இல்லை! இந்திய தொன்மை வேர்கள் பாதுகாக்க பட வேண்டும் என்ற உள்ளார்ந்த ஆதங்கத்தின் வெளிப்பாடு!*
*இந்தியாவுக்கு பன்முகத்தன்மை என்பதெல்லாம் இடையில் புகுத்தப்பட்ட வரை கோடுகள்தான்.அது தன்மை இல்லாமல் திணறுகிறது என்பதே உண்மை*
*இஸ்லாமிய நாடுகளுடன் நட்புறவு கொள்வது தவறு இல்லை! ஆனால் நமது பாரம்பரிய இந்திய தொன்மைகளை மேன்மை செய்வதும்,போற்றுவதும் தலையாய கடமை! நீதிபதியின் கருத்து மிக ஆழமானது! பல அரசியல் கட்சிகளின் பொறுப்பின்மை,அந்நிய மத சக்திகளுக்கு தூபம் போடுவது இவைகளை எல்லாம் கருத்தில் கொண்டு எதிர்கால இந்தியாவின் சூழல் தவறாகிவிட கூடாது என்பதை உணர்ந்து,உலகில் தீவிரவாதம்,பயங்கரவாதம் எங்கே தலைதூக்கி இருக்கிறது என்று தெளிவாக புரிந்து கவலையை வெளிப்படுத்தி இருக்கிறார்! உலகின் பெரிய நாடுகள்,சிறிய நாடுகள் எல்லாம் அவர்களது தொன்மையை பாதுகாப்பு செய்ய மத அடிப்படையில் கவனம் செலுத்தும்போது இந்தியா மட்டும் புதிதாக பன்முகத் தன்மை கொண்டதாக விளங்குவது "நெல்லுக்குப் பதில் புல்லுக்கு இறைத்த நீர் ஆகிவிடும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை! நாடு என்பது மொழி,பண்பாடு,கலாச்சாரம், தொன்மைகள் மூலம்தான் அமைய வேண்டும்! அது மட்டுமே சிறந்தது!*
*""நீதியரசர் சுதீப் ரஞ்சன் சென் அவர்களது பாதங்களுக்கு"" சிரம் தாழ்ந்த வணக்கம் 🙏*
*A.M.K.மணிவண்ணன்*
No comments:
Post a Comment