Thursday, 13 December 2018

தேர்தல் முடிவுகள் பிஜேபிக்கு பாதகமாக அமைந்ததற்கு,  முக்கியமான காரணம்

#இன்றைய ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் பிஜேபிக்கு பாதகமாக அமைந்ததற்கு,  முக்கியமான காரணம், பிஜேபிக்கென சொந்தமாக மீடியாக்கள், ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகள் இல்லாததே  என்பதை பிஜேபி இப்போதாவது உணர வேண்டும்.  பிஜேபி அரசு கடந்த நான்கரை ஆண்டுகளாக மிகப்பெரிய அளவில் முன்னேற்றத்தை அனைத்து துறைகளிலும் கொண்டு வந்து இருக்கிறது.  ஆனால் அவை அனைத்தும் மக்களின் பார்வைக்கு அல்லது கவனத்திற்கு கொண்டு செல்லவில்லை. நல்ல திட்டங்களை மக்களுக்கு புரிய வைக்க தவறிவிட்டது.  அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க அல்லது புரியவைக்க ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகள் அவசியம் தேவை. இந்தியாவில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் சொந்தமாக TVக்கள், மற்றும் பத்திரிகைகள் உள்ளன.  பட்டி தொட்டிகளுக்கெல்லாம் உள்ள மக்களுக்கு புரிய வைக்க வேண்டும் என்றால்  TVயும், பத்திரிகைகளும் அவசியம் தேவை.  தேர்தல் நேரப் பிரச்சாரங்களும், வலைதளப் பிரச்சாரங்களும் பலன் தராது.   உலக அளவில் மோடி அரசின் செயல்பாடுகள் பாராட்டைப் பெறும் போது,  இந்திய மக்களுக்கு புரியவில்லை,என்றால் அதற்கு காரணம் மக்கள் அல்ல, பிஜேபி மக்களுக்கு புரிய வைக்கவில்லை என்பது தான் உண்மை. வாக்குவங்கியுள்ள  அசைக்கமுடியாத தொண்டர்கள் உள்ள ராஜஸ்தான் மத்தியபிரதேசத்திலே  இப்படி ஒரு முடிவு வந்திருப்பது   நமது திட்டங்களை  மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அந்த அந்த மாநிலநிர்வாகிகளிடையே தொய்வடைந்திருப்பதை இன்று கண்கூடாக கண்டோம் தொடர்ந்து ஆட்சி செய்துவருவதால்  மக்களிடம் மனமாற்றம் வந்திருக்கிறது  என்று  நம்மவர்களே சப்பைகட்டு கட்டுவதை  ஏனோ என்னால் ஏற்கமுடியவில்லை  அப்படி மாநில பாஜக அரசின்மீது அதிருப்தி இருந்திருக்குமேயானால்  இந்த அளவிற்கு இழுபறி நீடித்திருக்க வாய்ப்பே இல்லை  2011ல் தமிழகத்தில் அதிமுக பெற்ற வெற்றியைபோல காங்கிரஸ் எளிதாக வெற்றிபெற்றிருக்க முடியுமே ? காரணம் அதுவல்ல  பாஜக அரசின் மீதான நம்பகதன்மையை  அந்த மக்கள் இன்னும் இழக்கவில்லை என்பதே முடிவுகளில் காணப்படும் நிதர்சனமான உண்மை நமது திட்டங்களை அடிமட்ட சாமானியனுக்கும் புரியவைப்பதில் ஏற்பட்ட சுணக்கமே  இந்த சிறிய இடைவெளியிலான வெற்றி,தோல்வி மோடிஜி அவர்கள் அயராது உழைத்து  இந்தியாவை உலக அளவில் உயர்த்தி வரும் இந்த வேளையில்  இப்படி ஒரு இடைக்கால பின்னடைவை சந்தித்திருப்பது  ஒட்டுமொத்த இந்தியாவிலும் சற்றே அதிர்வை உண்டாக்கியுள்ளது என்பதை நாம் ஏற்றுகொண்டுதான் ஆகவேண்டும் இந்த தோல்விமுகம்  இந்தியளவில் மோடி மீதான அதிருப்தியினால் ஏற்பட்டதாக எதிர்கட்சியினரும்  அதற்கு கொஞ்சமும் சளைக்காமல் அனைத்து ஊடங்களும் அவர்களின் மனதிலுள்ள விஷமதனத்தை விவாதங்களாக வெளிப்படுத்தி வருவதை பார்க்கும்போது  மோடியின் தீவிர ஆதரவாளனாகவும்  ஒரு தேசபக்தனாகவும் மிகவும் வருத்தமாக உள்ளது மோடி என்ற மனிதர்  இரவு பகல் பாராது  தனது உடல்நலன் பாராது தன் குடும்பநலன்  குடும்பத்தினர் நலன் பாராது  இந்த தேசத்திற்காகவும்  தான் சார்ந்திருக்கும்  கட்சிக்காவும்  ஒருநாள்கூட ஓய்வெடுக்காமல் விமானத்திலே உண்டு உறங்கி பம்பரமாக சுழன்று செய்த ஏராளமான நல்ல திட்டங்கள் சாதனைகளை  சாமானியனிடம் கொண்டு சேர்ப்பதில் இந்தியாவில் உள்ள அத்தனை மாநில நிர்வாகிகளுமே தவறிவிட்டதாக கருதுகிறேன் எதிர்கட்சியினர் நெஞ்சில் உங்களை குத்த சொல்லவில்லை கட்சியில் கூடவே இருந்துகொண்டு  மோடிஜி முதுகில் குத்தாதீர்கள் அவரின் கடினமான உழைப்பினால் இந்த தேசத்திற்கு கிடைத்த நன்மைகளைகூட  கொண்டு சேர்க்கமுடியாத நிர்வாகிகள்  இனியும் கட்சி பதவிகளில்  ஒட்டிகொண்டு இருக்க தகுதியற்றவர்களே   இன்னும் பாராளுமன்ற தேர்தலுக்கு நாள் இருக்கிறது   ஒவ்வொரு மாநில நிர்வாகிகளும் தங்கள் தவறுகளை இயலாமையை திருத்திகொண்டால் மட்டுமே  மீண்டும் மோடி என்ற மாமனிதரின் பொற்கால ஆட்சி சாத்தியமாகும் இல்லையேல் #பாரதரத்னா_வாஜ்பாய்ஜி இரண்டாம் முறை ஆட்சிபீடத்தில் அமராதவிளைவாக  நாட்டை கயவர்களிடம் பத்தாண்டுகள் கொடுத்தோமே  அந்த நிலை மீண்டும் ஏற்படும் என்பதை நிர்வாகிகள் ஒவ்வொருவரும் மனதில் வைத்து இனியாவது செயல்படுங்கள்  இல்லையேல் பதவிகளை துறந்து செயல்படுபவர்களுக்கு வழிவிடுங்கள் கட்சிக்கும் மோடிக்கும் படிக்கல்லாக இருக்கமுடியவில்லையென்றாலும் நாட்டின் வளர்ச்சிக்கு தடைகல்லாக இருக்காதீர்கள் கட்சி வளர்ச்சியடைந்த மாநிலங்களிலே  இந்த நிலை வந்திருக்கிறது என்கிறபோது    இந்த ஐந்து வருடங்களில் ஒரு செங்கலை கூட நட்டுவைக்காத தமிழக பாஜகவை நினைக்கும்போது  முடிவை உங்கள் கற்பனைதிறனிற்கே விட்டுவிடுகிறேன்  கட்சியிலும் பதவிகளிலும் இல்லாமல்  இந்த தேசத்தின் காவலர்களாக  உங்களை பார்க்கும் என்னைபோன்ற  சாமானியனின் மனக்குமுறல் இதுதான் உங்களுக்கு கொடுக்கபட்டுள்ள பதவிகளினால் கட்சிக்கும் தேசத்திற்கும் என்ன நன்மை செய்தீர்கள் என்று தங்களை தாங்களே சுயபரிசோதனை செய்யும் நேரம் இதுவே கடைசியாக ஒன்று சொல்லிகொள்கிறேன்  நிர்வாகிகளிடம்  உங்களால் முடியாவிட்டால் பதவிகளை விட்டு ஓடிவிடுங்கள் #செய்  இல்லையேல் #செத்துமடி   அதுவும் ஒரு #தேசபணிதான் என் பார்வையில் என்றும் தேசபணி  தெய்வீகபணியில் செந்தமிழ் சு.இராமகிருஷ்ணன்

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...