Monday, 12 November 2018

996 நிறுவனங்களில் 20323 பாகிஸ்தானியர்கள் வைத்திருந்த 3000 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை விற்க

நம்நாடு பிரிக்கப்பட்ட போது 996 நிறுவனங்களில் 20323 பாகிஸ்தானியர்கள் வைத்திருந்த 3000 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை விற்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. 1965,1971 போர்களுக்குப் பிறகு இவை பறிமுதல் செய்யப்பட்டு 'எதிரிச் சொத்துக்களின் பாதுகாப்பாளர் 'என்ற அதிகார அமைப்பின் வசம் இருந்தது.ஆனால் இப்போது அவைகளை விற்று அந்தப் பணத்தை வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் சமுதாய நலத் திட்டங்களுக்கு உபயோகப்படுத்த முடிவு செய்யப் பட்டுள்ளது.1968ல் கொண்டு வரப்பட்ட '    எதிரி  நாட்டினர் சொத்துச் சட்டம் ' வந்ததிலிருந்து இந்தப் பங்குகள் யாருக்கும் உபயோகமின்றிக் கிடந்தன. மோடி அவர்கள் தலைமையிலான  அரசு 2017ல் ஒரு சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்து இப்பங்குகளை விற்றுப் பணமாக்க வழிவகை செய்தது.பாகிஸ்தான் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து இப்பங்குகளுக்கு உரிமை கோரி வந்துள்ளது குறிப்பிடத் தக்கது.

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...