Monday, 12 November 2018

ஹெச் ஏ எல் நிறுவனத்திற்கு எல்லா விமானங்களையும் தயாரிக்கும் திறமை இருக்குதுன்னா ஏன் பிரான்சிடம் போய் விமானம் வாங்க வேண்டிய நிலை வந்தது?

ஹெச் ஏ எல் நிறுவனத்திற்கு எல்லா விமானங்களையும் தயாரிக்கும் திறமை இருக்குதுன்னா ஏன் பிரான்சிடம் போய் விமானம் வாங்க வேண்டிய நிலை வந்தது? பதில் சொல்லுங்க டோமர்ஸ்.

பிரான்ஸே வேண்டாம் நாங்களே எல்லா விமானத்தையும் தயாரித்து தள்ளுகிறோம் என தயாரித்து தள்ளியிருக்கவேண்டியது தானே?

எதுக்கு பிரான்ஸீடம் போய் கையேந்த வேண்டிய நிலைமை வந்தது?

756 விமானம் அல்லது 42 ஸ்குவாரடன் இருக்கவேன்டிய இடத்திலே 558 விமானம் அல்லது 31 ஸ்குவாரடன் தான் இருக்கே அதனால் தேவையான 198 விமானங்களை தயாரித்து தந்துவிடுகிறோம் என தயாரித்து இருக்கவேண்டியது தானே?

இதுல 120 மிக் 21 வகை விமானங்களும் 92 ஜாகுவார் வகை விமானங்களும் அரதப்பழசு. ஜாகுவார் உற்பத்தி 1981 இல் நிறுத்தபட்டுவிட்டது. நாம 50 வருச பழைய விமானத்தை வைச்சு ஓட்டிட்டு இருக்கோம்.

1974 இல் வாங்கிய மிக்-21 ரக விமானங்கள் 244 ஐ தான் இன்னமும் பட்டி பார்த்து டிங்கரிங்க பண்ணி ஓட்டிட்டு இருக்கோம்.

2002 இல் வாங்கிய சுகோய் எஸ்யூ-30 ரக போர்விமானங்கள் 233 நம்பித்தான் நம்மோட ஒட்டு மொத்த பாதுகாப்பே இருக்கு.

கவனிங்க இதுவும் வாஜ்பாய் ஆட்சிக்காலத்திலே வாங்கியது தான். அதுக்கப்புறம் கான்கிரஸ் களவாணிகள் வாங்குறோம் வாங்குறோம் என ஏமாத்திட்டதுக.

இப்போதைக்கு நமக்கு ஐநூறுக்கும் மேற்பட்ட விமானங்கள் தேவை. அதுவும் உடனடியாக. அதுவும் நவீன ரக விமானங்கள். உடனடியாகன்னாலே நாலு வருசம் ஆகும். அதுக்குள்ளே இன்னும் 100 விமானம் பழசாயிடும்.

நிலமை இப்படி மோசமாக இருக்கும் போது வந்து

அதான் ஹெச் சி எல் தயாரிக்குதுன்னு சொல்லுதே கொடுக்கவேன்டியது தானேன்னு. ஹெச் சி எல் தயாரிச்ச லட்சணம் தான் இப்படி சிரிப்பா சிரிக்குதே. அப்புறம் என்ன?

நாட்டின் பாதுகாப்பை இந்த களவாணிகள் எப்படி கூறு போட்டிருக்கு என நினைச்சா ரத்தக்கண்ணீரே வந்திரும்.

இதுல வந்து வெளக்கம் வெங்காயம் கேக்குதுக.

https://en.wikipedia.org/wiki/List_of_active_Indian_military_aircraft இங்கன போய் எல்லா வெவரத்தையும் ஆதாரத்தையும் சேதாரமில்லாம பாத்துக்கோங்க.

Raja sankar

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...