2,000 மாடுகள்..!!
500 எருமைகள்...!!!
1000 புறாக்கள்....!!!!
கோவை, வெள்ளிங்கிரி மலை யில்..,
இயற்கை எழில் சூழ்ந்த
இடத்தில் ஒரு
பிரமாண்டமான பசுமடம்..!!!
``நீங்கள் சாலையில் போகும்போது ஒரு
பசுவோ,
காளையோ,
எருமையோ.,
விபத்தில் அடிபட்டுக்கிடந்தால்...
நீங்கள் பத்திரமாக சேர்க்க வேண்டிய...
இடம்..
கோவை..
வெள்ளிங்கிரி
கோ சாலை..!!!
தான் ஆசை ஆசையாக வளர்த்த மாட்டைப் பராமரிக்க வழியில்லாமல்.,
அடிமாட்டுக்கு விற்க முயலும் ஒரு விவசாயியைக் கண்டால்...
கோயிலில் நேர்ந்துவிடப்பட்ட காளைகளைப் பார்த்துக்கொள்ள ஆளில்லாமல்
அவை பசியில் துன்பப்பட்டால்...
எங்களுக்குத் தகவல் தெரிவியுங்கள்.
நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்’’
என்கிறார்கள் இவர்கள்..!!!
நூறல்ல, இருநூறல்ல... 2,000 மாடுகளை கோசாலையில் வைத்துப் பராமரித்து வருகிறார்கள் இந்த அமைப்பினர்.
கோவை - வெள்ளிங்கிரி மலை சாலையில் இருக்கிறது இந்தக் கோசாலை.
முகப்பு, சாதாரண தோற்றத்தில் அமைந்திருக்கிறது.
வாயிலைக் கடந்து உள்ளே நுழைந்ததும் வலது பக்கம் அலுவலகம்.
அதைக் கடந்தால் 40,50 ஏக்கரில் பிரமாண்டமான கோசாலை.
சுற்றியிருக்கும் நான்கு திசைகளிலும்,
பெரிய பெரிய மலைகள் முளைத்திருக்க நடுவில்,
மிகவும் பசுமையான
சூழலில்,
கிட்ட தட்ட
4,000 வாயில்லா ஜீவன்களை வாழவைத்துக்கொண்டிருக்கிறது இந்த வெள்ளிங்கிரி கோ சாலை
கோவை போன்ற பரபரப்பான மாநகரத்தில்,
ஒரே இடத்தில் மொத்தமாக 2,000 மாடுகளைப் பார்ப்பதே கண்கொள்ளாக் காட்சியாக இருக்கிறது;
குதூகலமான உணர்வு பிறக்கிறது.
பல செட்களில்வைத்து இந்த மாடுகள் பராமரிக்கப்படுகின்றன.
அவற்றில், 500 பசுமாடுகள், 1200 காளைகள், 200 கன்றுக்குட்டிகள்.
பசுக்களில், 120 கறவை மாடுகள்.
இவற்றுக்குத் தேவையான தீவனம், தண்ணீர் ஆகியவை ஷெட்டுக்குள்ளேயே இருக்கின்றன.
கதவைத் திறந்து ஷெட்டுக்குள் நுழைந்தால், ஏ.சி அறைக்குள் நுழைந்த உணர்வு ஏற்படுகிறது.
கூலிங் ஷீட்டுகளால் மேற்கூரை வேயப்பட்டிருக்கிறது.
உள்ளே நுழைந்ததுமே, மாடுகள் சீராக எழுந்து நின்று நம்மீது பார்வையைத் திருப்புகின்றன.
அந்த வளாகத்துக்குள்ளேயே ஒரு கால்நடை
மருத்துவர்கள் இருக்கின்றார்கள்.
அங்கே, உடல்நிலை சரியில்லாத மாடுகளைப் பரிசோதிக்கிறார்கள், சிகிச்சை தருகிறார்கள்.
அடிபட்ட நிலையில் கொண்டுவந்து விடப்பட்டும் மாடுகளுக்கு இங்கே சிகிச்சையளித்துவிட்ட பிறகுதான் கோசாலைக்குக் கொண்டு செல்கிறார்கள்.
மாடுகளைப் 150 பரமாரிப்பதற்காக ஊழியர்கள் இருக்கிறார்கள்.
பணியாற்றிவரும் பணியாளர்கள்..
கோசாலை செயல்படும் விதம் குறித்து விரிவாகப் பேசினர்...
``ஜல்லி கட்டு தடை செய்ய பட்ட வருஷம்..,
ஜல்லிக்கட்டு மாடுகள் அடி மாடுகளாக கேரள மாநிலத்திற்கு அனுப்ப படுவதை கண்ட..,
கோ சாலை உரிமையாளர்
சிவ கணேஷ் அவர்கள்..,
ஜல்லிக்கட்டு மாடுகளைக்
விலை கொடுத்து வாங்கி
250 மாடுகளுடன் இந்தக் கோசாலை தொடங்கப்பட்டது.
விலங்கு நல வாரியத்தில் அனுமதிபெற்ற, அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட கோசாலை இது.
பசுவதை கூடாது, பசுக்களைக் காப்பாற்ற வேண்டும் என்பதுதான் இது ஆரம்பிக்கப்பட்டதற்கான முக்கிய நோக்கம்.
பல வருடங்களைத் தாண்டி மிகச் சிறப்பாகச் செயல்பட்டுவருகிறது.
கிட்டத்தட்ட, 2,000-க்கும் அதிகமான மாடுகளை இங்கே பராமரித்துவருகிறோம்.
மாடுகளுக்குக் காலையில் பசுந்தழை, வைக்கோல், தண்ணீர் கொடுப்போம்.
மதிய நேரத்தில் கோதுமைத் தவிடு, எள்ளுப் புண்ணாக்கு, கடலைப் புண்ணாக்கு, துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு கலந்த மாட்டுத் தீவனம், பச்சைப்புல் கொடுப்போம்.
காலையில் இரண்டு மணி நேரம் ஷெட்டுக்குள்ளேயே மாடுகளைத் திறந்துவிடுவோம்.
நன்கொடையாளர்கள் பலர் தினமும் இங்கே வருவார்கள்.
அவர்கள் குடும்பத்தினரின் பிறந்தநாள், திருமணநாள், இறந்துபோன பெரியவர்களின் நினைவுநாள் போன்ற முக்கிய தினங்களை முன்னிட்டு இங்கிருக்கும் பசுக்களுக்குத் தேவையான உணவை நன்கொடையாகத் தர முன் வரு வார்கள்.
மற்ற நாள்களைவிட, அமாவாசை, பௌர்ணமி நாள்களில் மக்கள் இங்கே வருவார்கள்.
மாட்டுப் பொங்கல் அன்று இந்த இடமே திருவிழாபோல காட்சியளிக்கும்.
கோவை மக்கள் மட்டுமல்ல... மற்ற பகுதி மக்களும் இங்கே வருவார்கள்.
எங்கள் வளாகத்துக்குள்ளேயே, 24 மணி நேரமும் செயல்படும் குழு இருக்கிறது.
கோசாலையிலிருக்கும் மாடுகளுக்கு மட்டுமல்ல...
வெளியிலிருந்து கொண்டுவரப்படும் கால்நடைகளுக்கும் இங்கே சிகிச்சையளிக்கிறோம்.
கவர்னர், உயர் நீதிமன்ற நீதிபதிகள், அமைச்சர்கள் உள்ளிட்ட ஏராளமான நல்ல உள்ளங்கள்..,
எங்கள்
கோ சாலையின் சேவை அறிந்து உதவிகள் செய்ய முன் வந்துள்ளனர்.
மாடுகளைப் பராமரிக்க முடியாதவர்கள் அவற்றை இங்கே கொண்டு வந்து விட்டுச் செல்லலாம்.
பலர் பொருளாதாரச் சூழல் காரணமாக அவற்றை அடிமாடுகளாக விற்பார்கள்.
அவர்களுக்குத் தேவையான உதவிகளை பெற்றுக் கொடுத்து, மாடுகளைக் வாங்கிக் கொண்டுவந்து பராமரித்துவருகிறோம்.
தூரத்திலிருந்து மாடுகளைக் கொண்டுவரச் சிரமப்படுபவர்களுக்கும்,
எங்கே இருந்தாலும், மாடுகளை இங்கே கொண்டுவருவதற்கான ஏற்பாடுகளைச் செய்து தருவோம்.
மதுரை, விருதுநகர்,
திருப்பதி, திருவள்ளூர், பெரியபாளையம், தென்காசி, செங்கோட்டை... எனத் தமிழ்நாட்டின் பல பகுதிகளைச் சேர்ந்த மாடுகள் இங்கே கொண்டு வரப்பட்டிருக்கின்றன.
இந்து அறநிலையத்துறையின் சார்பாகவும் பல மாடுகள் இங்கே விடப்பட்டிருக்கின்றன.
நேர்ந்துவிடப்படும் மாடுகளைக் கோயில்களில் சரியாகப் பராமரிக்க முடியாமல் இங்கே கொண்டு வந்துவிடுவதும் உண்டு.
பல கோயில்களிலிருந்து வருடத்துக்கு நூற்றுக்கும் மேற்பட்ட மாடுகளை கொண்டு வந்துவிடுகிறார்கள்.
இந்து, கிறிஸ்டியன், முஸ்லிம், சீக்கியர், சிந்தி... என அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களும் கோசாலைக்கு வருகிறார்கள்.
அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு, வருடத்துக்கு ஒருமுறை மாடுகளை எப்படிப் பராமரிப்பது என்று கற்றுக்கொடுக்கும் பிராக்டிக்கல் வகுப்புகள் இங்கே நடக்கும்.
பசு, ஜாதி மதம் பார்த்து பால் தருவதில்லை. நமக்காக உழைத்த பசுவையும், காளையையும் கடைசிக் காலத்தில் பார்த்துக்கொள்ளவேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை’’ என்கின்றனர் அவர்கள்.
இங்கு வேலை செய்யும் யாரும் சம்பளத்தை மட்டும் பார்ப்பது இல்லை.
வா யில் லா ஜீவன்களை
தங்கள் உறவினர் களை போல எண்ணி
பராமரிக்கின்றனர்..!!!
கோவை,
கிராஸ்கட் ரோட்டில்..,
ஸ்ரீ தேவி டெக்ஸ்டைல்ஸ்
உரிமையாளர்..
திரு. சிவ கணேஷ் அவர்கள்
கூறும் போது.,
"ஜல்லிக்கட்டு தடை விதித்த போது,
அடி மாடுகளாக லாரிகளில் விற்கபட்ட
ஜல்லிகட்டு காளைகளை
பரிதாபபட்டு,
விலை கொடுத்து
மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து
வாங்கி வந்து வளர்க்க
ஆரம்பித்தேன்.
தற்போது இது எதிர்பாராத வகையில்.,
வளர்ச்சி பெற்று உள்ளது.
என்று தன்னடக்கமாக
முடித்து கொண்டார்".
இவற்றின்
செலவுகள்..
பாராமரிப்புகள்..
என எண்ணும் போது
ஆச்சர்யத்தால்...
மனம்...
அந்த மனிதர் இருக்கும் திசை நோக்கி
கரம் கூப்பி வணங்குகிறது...!!!!!
No comments:
Post a Comment