1) முஸ்லீம்கள் தேச அளவில் மைனாரிட்டியாக இருக்கலாம்; ஆனால் தேசத்தில் ஒரு குறிப்பிட்ட மாநிலத்தில் / பகுதியில்
அவர்கள் அடரந்து குவிந்து 90% இருந்தால், படிப்படியாக இதர தேசிய இனத்தவர் அங்கு குடியேற்றப்பட்டு அப்படி அடர்த்தியாக 90% குவிந்திருந்த முஸ்லிம் ஜனத்தொகை, Dilute செய்யப்பட்டு, மாநில ஜனத்தொகையில் முஸ்லிம்கள் 45% என்ற அளவு குறைக்கப்பட வேண்டும்!
2) தேசத்தின் மொழி எதுவோ அதுதான் பள்ளியில் பயிற்றுவிக்கப் படும்- அந்தப் பிரதேச முஸ்லிம்களின் தாய்மொழி எதுவாகவோ இருக்கட்டும். FOSTERING A MORE HOMOGENISED CULTURE என்ற அடிப்படையில் "They are all one ethnic group called...."- என்று தேசத்தின் பெயர் இணைக்கப்படும்!
3) முஸ்லிம்கள் பள்ளியில் எதையோ கற்கட்டும் - ஆனால் தனியாக 'புத்தாக்க கல்வி'- (Re Education Camp) முகாம்களுக்கு வலுக்கட்டாயமாக அவர்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள். அங்கு அவர்கள் விசாரிக்கப்படுவார்கள்.
4) 'மதத் தீவிரவாத'- போதனைகள் ஏதாவது அவர்களுக்கு முன்பு புகட்டப்பட்டு உள்ளதா? என்பது ஆராயப்படும்! அந்த முஸ்லீம்கள் பள்ளிக்கூட நாள்களிலேயே ஏதேனும் இஸ்லாமிய தீவிரவாத போதனைக்கு ஆளாகி உள்ளார்களா என்பது குறித்து விசாரிக்கப்படுவர். அப்படி விசாரிப்புக்கு ஆளாகி, 'திருந்தாமல், சரியான கல்வியைப் பெறத் தவறுபவர்கள்'- கடுமையாகத் தாக்கவும் தண்டிக்கவும் படுவார்கள்!
5) 'மூன்று தீமைகள்'- ' Three evils'- "இனம் சார்ந்த பிரிவினைவாதம்; மதத் தீவிரவாதம்; வன்முறை பயங்கரவாதம்"- இவை ஏதாவதற்கு சிறுவயதிலேயே அந்த முஸ்லிம் குழந்தைகள் ஆளானார்களா என்பது குறித்து விசாரிக்கப்படுவார்கள்.
6) பள்ளிகளில் அந்த முஸ்லீம் மாணவர்கள் -"எனது ஆசிரியர்களே எனது பெற்றோர்"- "எனது தேசமே எனது குடும்பம்"- "எல்லா மாணவர்களும் என் சகோதர சகோதரிகள்"- என்று தினமும் கூற வேண்டும்!
7) படிக்கிற இடத்துக்கு ஆண்கள் தாடி, பெண்கள் முக மறைப்பு இதெல்லாம் போட்டு வரக் கூடாது. ஒவ்வொரு வகுப்பறையிலும் "என் மத நம்பிக்கையை விட தேசமே முக்கியம்"- என்ற வாசகம் கொண்ட பேனர் சுவற்றில் பதிக்கப்படும்!
8) தாடி வைக்க அனுமதியில்லை; முஸ்லீம் பெண்களுக்கு முகத்தை மூடி 'பர்கா' போடவோ, தலை முக்காடு போடவோ அனுமதியில்லை! பொது இடங்களில் மண்டி போட்டு தொழுகைன்னு உட்காரக் கூடாது. மசூதியைச் சுற்றி மினார் கோபுரம் கூடாது. இதில் ஏதாவது மீறப்பட்டால் 'புத்தாக்க முகாமுக்கு'- 'Re Education Camp'- க்கு அனுப்பிவைக்கப்படுவார்கள்!
அட... இதெல்லாம் ஏதோ BJP / RSS காரன் திட்டம் இல்லீங்க!
சாட்சாத் கம்யூனிஸ்ட் சீனாவில் நடைமுறையில் உள்ள விஷயங்கள்!!!
(ஆதாரம்: 'THE HINDU' நடுப்பக்கக் கட்டுரை - 'At the heart of the Silk Road' 23 05 2018)
காம்ரேட்ஸ்... செக்கூலர்ஸ்.... முற்போக்கூஸ்.... ஸ்டார்ட் மியூசிக்!!
Thanks: Murali Seetharaman
No comments:
Post a Comment