வல்லபாய் பட்டேலுக்கு ஏன் சிலை வைக்க வேண்டும் ????
வல்லபாய் பட்டேல் மட்டும் இல்லையென்றால் இன்று ஹைதராபாத்திற்கு விசா எடுத்து தான் செல்ல வேண்டிய நிலைமை இருந்திருக்கும்.....
ஹைதராபாத் மாகாணம் என்பது இன்றைய
தெலுங்கானா,
ஆந்திராவின் சில பகுதிகள்,
கர்நாடகா மாநிலத்தில் உள்ள இன்றைய ஹைதராபாத்-கர்நாடக பகுதி,
மகாராஷ்டிராவின் மராத்வாடா பகுதி ஆகியவற்றை உள்ளடக்கியது...
80% மேல் ஹிந்துக்களின் மக்கள் தொகை கொண்டது ஹைதராபாத் சமஸ்தானம் ......
இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்த பிறகு ஹைதராபாத் மகாணத்தை ஆண்ட நிசாம் இந்த பகுதியை இந்தியாவுடன் இணைக்க மறுத்து மக்களின் விருபத்திற்கு மாறாக தனி நாடாக இருக்க போகிறோம் என்றார்.....
தனி நாடு என்று சொல்லி பாகிஸ்தானுடன் செல்ல தான் அவரின் உத்தேசமாக இருந்தது......
ஆனால் சில மாதங்கள் பொறுத்த அன்றைய துணை பிரதமர் வல்லபாய் பட்டேல் பிரதமர் நேரு ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று இருந்த சமயத்தில் ராணுவத்தை அனுப்பி ஹைதராபாத் மகாணத்தை கைப்பற்றி இந்தியாவுடன் இணைத்தார்.....
இதற்கிடைய காஷ்மீர் போன்று சில ஒப்பந்தங்களை போட்டு
ஹைதராபாத்தை தனி நாடாக இருக்க நேரு சம்மதித்தார்....
ஆனால் நேரு இல்லாத போது ராணுவத்தை வைத்து ஹைதராபாத்தை வெற்றிகரமாக இந்தியாவுடன் இணைந்தார் பட்டேல்...
அது மட்டுமல்லாமல் குஜராத் பகுதியில் உள்ள ஜூனாகட் சமஸ்தானம் , கேரளா கன்னியாகுமரியை உள்ளடக்கிய திருவிதாங்கூர் சமஸ்தானம் உட்பட 500 க்கு மேற்பட்ட சிறு மகாணங்களை இந்தியாவுடன் இணைந்தவர் பட்டேல்........
நேருவிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பு காஷ்மீரை வெற்றிகரமாக இணைப்பது.... ஆனால் அந்த பிரச்சினை இன்று வரை தீர்ந்தபாடில்லை... காஷ்மீர் பிரச்சினையை ஐநா வரை எடுத்து சென்று ஆரம்பித்திலேயே பிரச்சினையை உண்டாக்கியவர் நேரு.
ஆனால் வெறும் நான்கே நாட்களில் ராணுவத்தை வைத்து வெற்றிகரமாக இணைந்தவர் வல்லபாய் பட்டேல்.
இப்படி இந்தியாவை வெற்றிகரமாக இணைத்த வல்லபாய் பட்டேலுக்கு ஆயிரம் அடியில் சிலை வைத்தாலும் தவறில்லை.
நேருவிற்கு பதில் பட்டேல் பிரதமர் ஆகியிருந்தால் இந்தியாவின் தலையெழுத்து ஆரம்பித்திலேயே மாறியிருக்கும்...
வங்காள பிரிவினை மற்றும் பாகிஸ்தான் பிரிவினையின் போது ஆயிரக்கணக்கான ஹிந்துக்கள் கொலை செய்யப்பட்டனர்.
அது போல் நடக்க விடாமல் முகாலய மன்னனிடம் இருந்து சமஸ்தானத்தை எடுத்து இந்தியாவுடன் இணைத்து மக்களை காப்பாற்றினார் பட்டேல்.....
அப்படி இணைத்திருக்கவில்லை என்றால் காஷ்மீர் போன்று இருந்திருக்கும் ஹைதராபாத் சமஸ்தானம்.....
B. Suresh
General Secretary
Kisan Morcha
No comments:
Post a Comment