H.ராஜா உயர்நீதிமன்ற உத்தரவை, மீறி விநாயகர் ஊர்வலம் நடத்தியது தவறா ?
தவறு என்றால்,
உயர்நீதி மன்றம் விநாயகர் ஊர்வலத்திற்கு தடை விதித்தது சரியா ?
சரி என்றால்,
ரம்ஜான், பக்ரீத் பண்டிகையின் போது பொது இடங்களில் தொழுகை நடத்துவதற்கோ,
மிலாடி நபி',கிறிஸ்துமஸ் , குருத்தோலை ஞாயிறு, ஊர்வலத்திற்கோ, உயர்நீதிமன்றம் தடை விதிக்குமா ?
முடியாது என்றால்,
அது மதச்சார்பின்மையா ?
போலி மதச்சாபின்மையா ??
இந்துக்களை அடக்கி ஒடுக்கி, இஸ்லாமிற்கும், கிறிஸ்தவத்திற்கும், முன்னுரிமை கொடுப்பதுதான் மதச்சார்பின்மையா ?
--------------------------------------
H ராஜா மத விவகாரங்களில், தொடர்ந்து உணர்ச்சிவயப்படுபவராக இருக்கிறாரே, இது நல்லதா, கெட்டதா, என்றால் தெரியாது.
ஆனால் இன்னும்கூட, உணர்வே இல்லாமல் இந்துக்கள், வெறும் ஜந்துக்களாகவே இருப்பார்களேயானால், அது ஆபத்தாக முடியும் என்பது தெரியும்.
இன்றைய காலகட்டத்தில் விவேகானந்தரே இருந்திருந்தால் கூட அவரையும் மதவாதி என முத்திரை குத்தி சிறைக்கு அனுப்புவார்கள் இந்து துரோகிகள்.
நாற்பது ஆண்டுகால பொது வாழ்க்கையில், பெரும்பகுதியை, இந்து சமுதாயத்தை,கரையேற்ற, ஒரு போராளியாக, நெருப்பாற்றில் நீந்தி வந்திருக்கிறார், H ராஜா .
ஆளும் கட்சியின் தேசிய செயலாளர்.
பிரதமரையும், மத்திய மந்திரிகளையும், நினைத்த நேரத்தில் சந்திக்கும் செல்வாக்குப் பெற்றவர்.
UPA ஆட்சி காலத்தில் காங்கிரஸ், திமுக தலைவர்கள் சம்பாதித்ததைப் போன்று, சம்பாதிக்க நினைத்திருந்து மத்திய அரசுத் துறைகளின் டெண்டர் விவகாரங்களில் தலையிட்டாலே போதும், இன்று பல கோடிகளுக்கு அதிபதி ஆகியிருப்பார்.
ஊழலற்ற மோடி அரசின் தலை சிறந்த தர்மப் போராளி, தியாகச் சுடர்,
இந்து சமூகம் போற்றப்பட வேண்டிய உன்னதத் தலைவர், H ராஜா'ஜி.
H ராஜா'ஜி அவர்கள்
சாதுரியத்துடன் செயலாற்றி
நாதியற்ற இந்து சமூகத்தை காப்பாற்ற, குறைந்தது, நூறு ஆண்டு காலம் நீடுழி வாழ வேண்டும்.
*உண்மையான உணர்வுள்ள இந்து arun
No comments:
Post a Comment