Monday, 12 November 2018

ஒரு இளைஞன் , அவன் பெயர் கடைசியில்…!!

ஒர் உண்மைக் கதை

ஒரு இளைஞன் ,
அவன் பெயர் கடைசியில்…!!

அந்தக் காலத்தில்
சென்னையிலேயே
அதிக மருத்துவ வசதிகள்
கிடையாது.
மற்ற ஊர்களைப் பற்றி
சொல்லவே வேண்டாம்

ஒரு சிறுவன்,
அவனது காலில் புண்
ஏற்பட்டது
சின்னப்புண் தானே என்று
அந்தப் பையனும் கண்டு
கொள்ளவில்லை

நாள் பட்ட அந்தக் காயம்
உள்ளூர புரையோடிப்
போனதால் அவனுக்கு உள்ளே
குத்து வலி ஏற்பட்டது

அவனது பெற்றோர்
டாக்டரிடம் காண்பித்தனர்,
பையனைச் சோதித்த டாக்டர்
உள்ளே செப்டிக் ஆகி விட்டது
உடனே காலை எடுக்க வேண்டும் , இல்லையேல்
உயிருக்கே ஆபத்தாகி விடும்
என எச்சரித்தனர்

காலை எடுப்பதற்கு நீங்கள்
எந்த மருத்துவ மனைக்குப்
போனாலும் குறைந்தது 5000
ரூபாய் ஆகும் என்றார்

அதிர்ந்து போனான் பையன்.
ஒரு காலை வெட்டி எடுக்க
ஒரு மருத்துவருக்கு
5000 ரூபாய் கொடுக்க
வேண்டுமென்றால்,
அந்த  காலைக் கொடுத்த
கடவுளுக்கு நம்மால் அதற்குப்
பிறகு என்ன தரமுடியும்

இந்தக் கால் தேயும் வரை
அவன் ஆலயத்தை சுற்றுவோம்

இவ்வாறு நினைத்தவன்
தன் சொந்த ஊரிலுள்ள ,
முருகன் கோயிலுக்கு
சென்றான்......
108 மற்றும் 1008 என்ற
கணக்கெல்லாம் இல்லை.
காலை மாலை என தினமும்
கணக்கு வழக்கின்றி கோயிலை சுற்றிக் கொண்டே
இருந்தான்.

சில மாதங்களில் யாராலும்
நம்ப முடியாத அற்புதமாக,
தானே ஆற ஆரம்பித்த புண்
இருந்த இடம் தெரியாமல்
ஓடி மறைந்தது

இனி என் வாழ் நாள் முழுதும்
முருகன் புகழ் பாடுவதிலேயே
கழியும்.  அதுவே என்தொழில்.
அதுவே என்மூச்சு என்று ஊர்ஊராக பிரசங்கம் செய்யத் தொடங்கினான் அந்தப் பையன்.

அந்தப் பையன் தன் உடல்
தளரும் வரை ஓர் அரை
நூற்றாண்டிற்கு மேல்
நின்றபடியே முருகன் புகழ்
பாடிய  “திரு முருக
கிருபானந்த வாரியார்”
என அழைக்கப்பட்ட
“வாரியார் ஸ்வாமிகள்”
🙏🏻🙏🏻

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...