Monday, 12 November 2018

பசுமை வழிச் சாலைகள் :

பசுமை வழிச் சாலைகள்  :

1) முக்கிய நகரங்களுக்கு இடையே
நேரான சாலைகள் மூலம் அதிகபட்சம்
200 கிமீ வரையிலான பயண தூரத்தைக் குறைப்பது என்பதுதான் பசுமைச் சாலைகளின் அடிப்படைக் கொள்கை

2) மொத்தம் 5 தடங்களில் தற்போது திட்டமிடப்பட்டு வேலைகள் துவங்கியுள்ளது.

அவை :

(a) பத்தின்டா - கண்ட்லா 
(b) பத்தின்டா - ஆஜ்மீர்
(c) ராய்ப்பூர் -விசாகபட்டினம்
(d) சென்னை - சேலம்
(e) அம்பாலா - கட்புட்லி

3) தற்போது உள்ள சாலைகளைத் தவிர்த்து நேர்கோட்டில் 8வழி விரைவுச் சாலைகள் அமைக்கப்படுகிறது.

4) பயண நேரம் குறைவதைவிட பயண தூரம் குறைக்கப்படுவதால் வாகனப் புகையின் அளவைக் கட்டுப்படுத்துவது முக்கிய அம்சம்.

5) இந்த வழித்தடம் அமைவதால் வெட்டப்படும் மரங்களால் சேமிக்கப்படும் கரியமில வாயுவைவிட வாகனங்களால் உமிழப்படும் கரியமில வாயு அதிகபட்டசமாக சேமிக்கப்படும் (Carbon credit) என்ற கணக்கீட்டில் மட்டுமே இந்தத் திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் மாசுக் கட்டுப்பாடு அமைச்சகம் ஒப்புதல் அளிக்கும்.

6) சென்னை - சேலம் தற்போது உளுந்தூர்ப்பேட்டை அல்லது கிருஷ்ணகிரி வழியாகச் (340 கிமீ) செல்வதைவிட சேலம்- திருவண்ணாமலை - காஞ்சிபுரம்    புதிய வழியில் (278 கிமீ) 60 கிமீ பயண தூரம் சேமிக்கப்படும்.

7) பயணதூரம் குறைவதால் ஏற்படும் எரிபொருள் சேமிப்பு கார்பன் சேமிப்பு
ஆகிய காரணிகள் அடிப்படையில் பசுமைச் சாலைகள் திட்டமிடப்படுகிறது.

8) சென்னை - சேலம் பசுமைச் சாலை பற்றிய
    சில புள்ளி விபரங்கள் :

மொத்த நீளம் 278 கிமீ
இதில் காடுகளின் நீளம் : 10 கிமீ ( 3.6%)
தேவைப்படும் நிலப்பரப்பு : 1900 ஹெக்டேர்கள்
காடுகளின் நிலப்பரப்பு : 49 ஹெக்டேர்கள்
வெட்டப்படும் மரங்களின் எண்ணிக்கை : 1000
கையகப்படுத்தப்படும் பகுதிகளில் புதிதாக நடப்படும் மரங்களின் எண்ணிக்கை : 3 லட்சம்
திட்டமிடல் உதவி :  ISRO & Google images

9) இந்தியா முழுவதும் சுமார் 5000 கிமீ
பசுமைச் சாலைகள் என்னும் பாரத்மாலா திட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்படுகிறது.

சமீபத்தில் வந்த ஒரு பதிவு,
ஏதோ  சேலம் சென்னை 8வழிச்சாலை
மட்டுமே இந்தியாவில் வேண்டுமென்றே திட்டமிட்டு கார்பரேட்டுகளுக்கு சாதகம்
செய்வது போலவும்;  தனிம வரிசை அட்டவணையில் (periodic table) உள்ள,
இல்லாத அனைத்து கனிமங்களையும் தமிழ்நாட்டில் இருந்து கொள்ளையடிக்க
மோடி அரசு திட்டம் தீட்டியுள்ளதாகவும்
நீட்டி முழங்கியிருந்தது.

இருபத்தைந்தாயிரம் கிமீ க்கும் மேலான அதிவிரைவு சாலைத் திட்டத்தில் வெறும்
278 கிமீ சாலையிலா இவ்வளவு ஆபத்துகள் உள்ளது? என்ற சந்தேகங்களை சரிபார்க்கவே இந்த முயற்சி.

வேகமாக மாறிவரும் உலக பொருளாதாரத்திற்கு ஈடுகொடுக்க
சாகர்மாலா மற்றும் பாரத்மாலா போன்ற கடல்வழி மற்றும் தரைவழிப் போக்குவரத்தை இணைப்பது  நீண்டகால பயன் அடிப்படையில் உட்கட்டமைப்புகளை மேம்படுத்துதல் போன்ற திட்டங்கள் மூலம் 2030ல் இந்தியா ஒரு பொருளாதார வல்லரசாகும் என்ற இலக்கின் அடிப்படையிலேயே எந்த ஒரு ஆட்சியும் திட்டமிட்டு செயல்பட்டாக வேண்டும். 

எனவே, பொய்ச்செய்திகளை நம்பாதீர்கள்.
புரளிகளையும்நம்பவேண்டாம்.

இந்தப் பதிவின் உண்மைத் தன்மைகளை,
The Economic Times ; The Indian Express ; Ministry of Road Transport and Highways,
Ministry of Environment forest and climate Change ஆகிய தளங்களில் ஆராய்ந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...