3.6 லட்சம் கோடி பணத்தை கொடுக்க சொல்லி Reserve வங்கியை நிர்பந்திக்கிறது மத்திய அரசு - பப்பு ராகுல்
நான் முன்பே சொல்லியிருக்கிறேன், ராகுலை ஒரு கோமாளியாக எண்ணி புறக்கணிப்பது தவறு, ஏனென்றால் இவன் மோடி ஆட்சியை கவுக்க எந்த பொய்யய்யும் பரப்ப, எவ்வளவு கீழ்த்தரமாக போகவும் தயாராகிய வில்லன்.. கோமாளித்தனம் கலந்த வில்லன் என்று
மத்திய அரசு நாட்டின் Fiscal policy , அதாவது ஒரு நாட்டின் நிதி கொள்கைக்கும், Reserve வங்கி Monetary policy , அதாவது பணவியல் கொள்கைக்கும் பொறுப்பாகும்.. இது இரண்டும் ஒன்றோடு ஒன்று இணக்கமாக போனால்தான் நாட்டின் பொருளாதார நிலைமையை சமாளிக்க முடியும்.. ஒரு நாட்டில் பொருளாதார வளர்ச்சிக்கு முழு பொறுப்பு அந்த நாட்டின் அரசை சேர்ந்ததுதான்.. நாளை பொருளாதாரம் வலுவிழந்தால் அதற்க்கு மக்கள் கைநீட்டுவது அந்த அரசைதான், Reserve வங்கியை அல்ல.. ஆகையால், ஒரு அரசு அதன் கொள்கைப்படி ஒரு குறிப்பிட்ட வளர்ச்சி இலக்கை அடையவேண்டும் என முடிவெடுத்தால், அதற்க்கு தேவையான முதலீட்டை செய்யவேண்டும், அல்லது நாட்டில் முதலீட்டு நீர்மை நிலையை (Capital Liquidity) உருவாக்க வேண்டும் .. அதற்க்கு Reserve bank தான் வைத்திருக்கும் கட்டாய ரொக்க இருப்பை குறைத்துக்கொண்டு, அதன் கட்டுப்பாட்டில் உள்ள வங்கிகள் , மக்களுக்கு மேலும் அதிக கடனை வழங்கி, புதிய தொழில், வர்த்தகத்தை அதிகரித்தல் போன்ற விஷயத்திற்கு உதவ வேண்டும்.. அப்படி செய்யும் பட்சத்தில் பொருளாதாரம் வளர்ச்சியடையும்.. ஆனால் இதை செய்வதனால் நாட்டின் பணவீக்கம் சற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது என்பதனால் Reserve வங்கி தயங்குகிறது.. இவ்வளவுதான் சமாச்சாரம்.. ஏதோ மோடி தன் சொந்த செலவுக்கு இவ்வளவு பணத்தை கேட்பது போல இந்த கோமாளி வில்லன் ராகுல் மக்களை குழப்பிக்கொண்டிருக்கிறான்..
இது போன்ற மோதல்கள் எல்லா அரசிலும் நடப்பதுதான்.. பல முறை மன்மோகன் அரசு ரகுராம் ராஜன் Reserve வங்கி கவர்னராக இருந்தபொழுது, கடன் வட்டி விகிதத்தை குறைக்க சொல்லி, ரகுராம் ராஜன் அதை மறுத்திருக்கிறார்.. ஆகையால் Reserve வங்கி அரசின் கொள்கை முடிவுகளுக்கு உதவுவது அவசியம்.. அதுவும் இப்பொழுது உள்ள கவர்னர் உர்ஜித் படேல் யாரோடைய தூண்டுதலுளிலோ
இப்படி செய்கிறாரோ என்கிற சந்தேகம் வலுக்கிறது.. ஏனென்றால் இந்த
சமயத்தில் பொருளாதாரம் வேகம் பிடித்தால், 2019 தேர்தலில் மோடிக்கு சாதகமாக அமையும் என்கிற பயமாக இருக்கக்கூடும்..
ஆனால் இன்று மன்மோஹன் சிங்கே கூறிவிட்டார், Reserve வங்கி அரசுக்கு கட்டுப்பட்டு நடப்பதுதான் சரியாக இருக்கும் என்று .. ஆகையால் இந்த வில்ல கோமாளியை வெறுமனே புறக்கணிக்காமல், நன்கு காரி உமிழ்ந்து அனுப்பவேண்டும்..
ஜெயஸ்ரீ ராஜன்
No comments:
Post a Comment