Monday, 12 November 2018

மோடிஜியின்_ராஜதந்திரங்கள்

#மோடிஜியின்_ராஜதந்திரங்கள்

கடந்த 4 ஆண்டுகளாக மோடி அப்படி என்ன சாதித்துவிட்டார் எனக் கேட்பவர்களுக்கு.. அவரது துல்லிய திட்டங்கள் இரகசிய ஆபரேஷன்களை விளக்கிச் சொல்லவே இந்தப்பதிவு! இதைப் படித்ததும் எப்பேர்பட்ட இரும்பு மனிதர் இந்தியாவை ஆட்சி செய்கிறார் என்ற சிலிர்ப்பு உங்கள் உடலில் ஓடும் என்பது திண்ணம். வாருங்கள் ஒவ்வொன்றாக தெரிந்து கொள்வோம்.
முதலில் காங்கிரஸ் ஆட்சியில் வங்கிக் கடன் பெற்ற மல்லையா, நீரவ் மோடி போன்ற செல்வந்தர்களைப் பற்றி பார்ப்போம்.. இவர்கள் எல்லாம் தப்பி வெளிநாட்டில் வசிக்கிறார்கள் என்பது நம்முடைய எண்ணம்.. ஆனால் இவர்கள் அனைவரும் நாடு கடத்தப்பட்டுளார்கள் என்பதே உண்மை! அவர்கள் அனைவரும் மோடி அவர்கள் அமைத்த ஒரு அணியின் வசம் உள்ளார்கள்!
ஆம் மோடி அவர்கள் அமைத்த சர்வதேச பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் அணி அது.. இதில் இந்திய அதிகாரிகள் இருந்தால் அது எதிர்க்கட்சிகளிடம் ரகசியத்தை சொல்லிவிடும் அபாயம் இருப்பதால் முழுக்க முழுக்க வெளிநாட்டு அதிகாரிகள் மட்டுமே உள்ள குழு அது! ஆஸ்திரியா, ஹங்கேரி, ஸ்வீடன், டென்மார்க் நாட்டவர்கள் இதில் உள்ளார்கள்.. இந்த அணிக்கு டெபிட் இந்திரஜித் என்று பெயர்.
அயர்லாந்தின் டப்ளின் நகரை தலைமையிடமாக கொண்டு பணியாற்றுகிறார்கள்.. மக்கள் கிண்டல் செய்வதை எல்லாம் புறந்தள்ளிவிட்டு இவர்களிடம் ஆலோசிக்கத்தான் அடிக்கடி வெளிநாடு போகிறார் நம் பிரதமர் என்பதே பலருக்கும் தெரியாத சேதி!!இந்த தொழிலதிபர்களிடம் இருந்து பல உண்மைகளை கறந்த இந்திரஜித் டீம் தெளிவானதொரு அறிக்கையை கடந்த 2016ஆம் வருடம் மே மாதம் மோடியிடம் சமர்ப்பிக்கிறார்கள்..
அதில் கறுப்புப்பணம் பதுக்கி வைக்கும் வழி முறைகள் மட்டும் 258 இருந்தது அதை வேரறுக்க முடிவு செய்தது தான் மோடியின் டீமானிடிடைசேஷன் திட்டம்.. இவர்கள் பதுக்கிய பணம் முழுவதும் பாழாக எல்லாரும் அலற ஆரம்பித்தனர் பிறகு நேர்மையாக தொழில் செய்ய ஜி.எஸ்.டியும் விதிக்கப்பட இவர்கள் தில்லுமுல்லுகள் வெளிவர இவர்கள் தொழில் முடங்கியது! இடையில் சிப் வைத்த நோட்டு என்னும் தகவல் பரவியது.. அதிர்ந்தார் மோடி!
ஏனெனில் அது 100%சதவீதம் உண்மையே.. அல்காரிதப்படி 50 இலட்ச ரூபாய்க்கு மேல் புதிய ரூபாய் தாள்களாக பதுக்கினால் நிச்சயம் அதில் 5 சிப் வைத்த நோட்டாவது இருக்கும் இந்த முறைப்படியே நாடு முழுவதும் வங்கிகளுக்கு பணம் அனுப்பப்பட்டது.. இது எப்படி கசிந்தது என புரியாமல் வியந்தார்.. அது சீனா செய்த சதி என்பதை கண்டறிந்தார்..
பிறகு எஸ்.வி.சேகர் போன்றவர்களை இது பற்றி பேச வைத்து இந்த விஷயத்தை நீர்த்து போகச் செய்தார்.. நம் நாட்டில் பணத்தை பதுக்கும் பழக்கம் ஒழியாது என்பது அவருக்கு நன்கு தெரியும் ஆனால் சத்தமாக ஒரு உண்மையை புரளி போல கிளப்பிவிட்டு அதை சத்தமின்றி செயல்படுத்திக் கொண்டிருக்கிறார் மோடி.! இன்றும் 50 இலட்சங்களுக்கு மேல் ஓரிடத்தில் பணம் இருந்தால் அது நம் அரசுக்கு துல்லியமாகத் தெரியும்.!
இது அவரது ராஜதந்திரத்துக்கு ஒரு சான்று.. ஏடிஎம் மிஷின்கள் மூலமாக திருடப்படும் பணத்தை காப்பாற்றவும் தான் புதிய ரூபாய்த்தாள்கள் வடிவத்தில் மாற்றியமைக்கப்பட்டன. இப்படி பொருளாதாரத்தை காத்தவர் ஏன் டீசல் விலையை குறைக்கவில்லை எனக்கேட்கலாம்.. அவர் அதை சேமிக்கிறார் என்பதே உண்மை.. வரி செலுத்துங்கள் என்றால் ஒரே நாளில் நம் மக்கள் செலுத்திவிடுவார்களா? அதனால் தான் டீசல் விலை உயர்வு!!
கூடுதல் தொகையை “பாரத் மாத்தா” என்ற பெயரில் இரகசியமாக ஒரு வங்கியில் டெபாசிட்டாக சேர்த்து வருகிறார்!! இந்த உண்மை ஜனாதிபதி உள்ளிட்ட ஒரு சிலருக்கே தெரியும். இந்த 4 ஆண்டுகளில் அந்த டெபாசிட்டில் உள்ள தொகை எவ்வளவு தெரியுமா!! 4 இலட்சத்து 28 ஆயிரம் கோடிகள்!! யார் செய்வார் இப்படி அளப்பரிய சாதனையை!! பட்டேல் சிலை, சிவாஜி சிலை எதற்கு என அடுத்து நீங்கள் கேட்பீர்கள்!! உண்மையில் அதன் இரகசியம் தெரிந்தால் வியப்பீர்கள்!
மும்பை.. எப்போதும் தீவிரவாதிகள் தங்கள் தாக்குதலுக்கு தேர்வு செய்யும் இடம்.. கடந்தகால சம்பவங்கள் அப்படி.. கடல்வழியே தீவிரவாதிகள் ஊடுருவிய இடம்.. அதே போல குஜராத் அருகிலுள்ள பாகிஸ்தான் கடல் எல்லைப்பகுதிகள்.. குஜராத்தில் நிறுவும் படேல் சிலையும் மும்பையில் நிறுவும் சிவாஜி சிலையும் உண்மையில் இரும்புச் சிலைகள் என நீங்கள் நினைத்து இருக்கலாம்..!
ஆனால் அவை ரேடார் பொருத்தப்பட்ட சிலைகள் இவற்றை சாட்டிலைட்டுகளோடு இணைக்கும் வசதி தற்போது பறக்கவிடப்பட்ட ஜி.எஸ்.எல்.வி ராக்கெட்டுகளில் செய்யப்பட்டுவிட்டது! இந்த ரேடார்கள் துல்லியமாக செயல்படுபவை.! படேலும் சிவாஜியும் சிலையாக மட்டுமில்லை ஒரு போர்வீரர்களாகவும் இருந்து நம் நாட்டு மக்களை காப்பார்கள்.! இது அத்தனையும் நம் மோடிஜியின் சீரிய சிந்தனையில் உருவானவை.
இவரைப்போன்றவர்கள் கையில் இருந்தால் இந்தியா இன்னும் முன்னேறும்.. இப்போது உங்கள் உடல் சிலிர்க்குமே.! அதே சிலிர்ப்புடன் இந்தியாவின் நிரந்தரப் பிரதமர் பிதாமகர் மோடிஜிக்கு ஒரு ராயல் சல்யூட் வைப்போமா.! 🇮🇳🇮🇳🇮🇳💪💪💪ஜெய்ஹிந்த்🇮🇳🇮🇳🇮🇳💪💪

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...