சுட்டது
.
1998-ல் பா.ஜ.க ஆட்சிக்கு வருவதற்கு முன்பு _
தொலைபேசி இணைப்பிற்க்காகப் பதிவு செய்து விட்டு வருடக்கணக்கில் காத்திருக்க வேண்டும் -
வீட்டில் எரிவாயு இணைப்பு வைத்திருப்பவர்கள் பணக்காரர்கள் -
என்றிருந்த நிலையை மாற்றி பரவலாகக் கிடைக்கச் செய்தது வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க அரசுதான் -
தினமலர் நாளிதழில் அப்போதைய பெட்ரோலியத் துறை அமைச்சர் திரு.வாழப்பாடியார் அவர்கள் தோளில் எரிவாயு சிலிண்டரை சுமந்து வந்து ஒவ்வொரு வீட்டின் கதவையும் தட்டுவது போல் கார்ட்டூன் வெளிவந்தது -
2000 மாவது ஆண்டு நான் முதன் முதலில் வாங்கிய AIRCEL POST PAID SIM-ன் விலை 3532 ரூபாய் _
அப்பொழுது BSNL -ல் Mobile கனெக்ஷன் கிடையாது -
மாதம் குறைந்தது 1500 முதல் 2000 வரையில் பில் வரும் -
அப்பொழுதுதான் Reliance குழும தலைவர் திருபாய் அம்பானி அவர்கள் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். _
அதாவது, ஒரு Post Card விலை 50 பைசா அதைவிட குறைவாகச் செலவு செய்து பொதுமக்கள் பேசும் நிலையை உருவாக்குவேன் என்று கூறினார் -
2002-ல் Reliance தன்னுடைய 500 ரூபாய் மொபைலை அறிமுகப்படுத்திய போது பெரும் புரட்சியே நடந்தது போன்று அனைவர் கைகளிலும் கைபேசிகள் முளைத்தன -
மற்ற தொலைத் தொடர்பு நிறுவனங்களும் கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் கட்டணங்களைக் குறைத்தன -
Pre-Paid சேவைகள் தொடங்கப்பட்டன -
அதற்குப் பிறகு 2004-லிருந்து 10 ஆண்டுகள் அதே இடத்தில் நின்று விட்டன-
2G, 3G என்று பிரித்து சேவை வழங்கி கொள்ளையடிக்க ஆரம்பித்தன -
நான் சில வருடங்களாகவே Pre-Paid -க்கு மாறிவிட்டேன் -
இரண்டு வருடங்களுக்கு முன்புவரை கூட Vodafone-ல் 400 MB Data 150 ரூபாய்க்கு இருந்தது -
அப்பொழுது அந்த 400 MB மூன்று நாட்களுக்கு வரும் எனக்கு திரும்பவும் ஒரு 150 ரூபாய்க்கு Racharge செய்ய வேண்டும் -
ஒரு மாதம் Data விற்கு மட்டும் 1500 செலவாகும் -
பேசுவதற்கு தனியாக Recharge செய்ய வேண்டும் -
இதில் Ratecutter என்று வேறு காசைப்பிடுங்குவார்கள் -
இவற்றையெல்லாம் மாற்றி அமைத்தது Jio - வின் வருகை -
இன்று கைபேசியில் பேசுவதென்பது, இனைய சேவையைப் பயன்படுத்துவதென்பதெல்லாம் கிட்டத்தட்ட இலவசம்தான் -
மாதம் வெறும் 150 ரூபாய்க்கு இந்தியா முழுவதும் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசலாம், குறைந்தது ஒரு GB டேட்டா இலவசம்- எல்லா நெட்வொர்க் கம்பெனிகளும் தருகின்றன-
கார்பரேட் அம்பானி மட்டும் இடையில் Jio-வைக் கொண்டு வராமல் இருந்திருந்தால் இன்னமும் பழையபடி தான் செலவு செய்து வந்திருப்போம் -
இதைக் கூட Jio தொடக்க நாள் அன்று விளம்பரத்தில் மோடி அவர்களின் படத்தை விளம்பரத்தில் போட்டதற்க்காக (அதில் மோடி அவர்களின் Digital India கனவிற்கு வலு சேர்ப்பதற்காக என்றுதான் விளம்பரம் செய்திருந்தார்) ஒரு பெரிய பிரச்சினை ஆக்கி எதிர்க்கட்சிகளும், ஊடகங்களும் எட்டு நாட்கள் வீண் விவாதம் நடத்தின -
ஆனால், இன்று நோகாமல் அனுபவித்து வருகின்றனர் -
இதே போல்தான் மோடி அரசின் எட்டு வழிச்சாலை நல்ல திட்டங்களை எதிர்ப்பவர்கள் கூட -
ஸ்டாலின் மகன் ஹம்மர் கார் வைத்திருக்கிறார் -
கமலஹாசன் ஜாக்குவார், BMW - போன்ற கார்களில் பறந்து வருகிறார் -
சீமான்டியார் கூட இசுசு கார் வைத்திருக்கிறார் -
இவர்களெல்லாம் ஏழைகளுக்காக போராடுகிறேன் பேர்வழி என்று வளர்ச்சித் திட்டங்களை எதிர்க்கிறார்கள் -
விமான நிலையத்தில் நின்று கொண்டே விமான நிலையம் தேவையா என்று பேட்டி கொடுக்கிறான் சீமான் -
இவர்களையும் நம்பி ஒரு கூட்டம் பின்னால் செல்கிறது -
பணக்காரர்களுக்கு மட்டுமே கிடைத்து வந்து வசதிகளை அத்துனை மக்களும் பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்டு வருபவர் தான் மோடி - வாஜ்பாயின் வழியில் -
இவர்களெல்லாம் இப்பொழுது கூட தங்களது விலை உயர்ந்த கார்களில் வேகமாகப் பயனித்துதான் வருகிறார்கள் -
தினம், தினம் விமானத்தை பயன்படுத்தி தான் வருகிறார்கள் -
ஆனால், எட்டு வழிச்சாலைகள் ஏகமாக வந்தால் தான் நமது ஏழை மக்கள் செல்லும் பேருந்துகள் கூட விரைவாக பாதுகாப்பாக பயணிக்க முடியும் -
அதே போலத்தான் உடான் திட்டத்தின் மூலம் விமான பயணமும் வெறும் 1500 ரூபாயில் ஒரு மணி நேரப் பயனம் என்பது இலக்கு-
இது நிறைவேற நாடு முழுவதும் 170 விமான நிலையங்களை கொண்டு வர உள்ளது மோடி அரசு -
எப்படி ஒரு காலத்தில் பணக்காரர்களின் அடையாளமாக இருந்த கேஸ் சிலிண்டர், தொலைபேசி போன்றவற்றை வாஜ்பாய் எல்லா மக்களுக்கும் கிடைக்கச் செய்தாரோ அதே போல் தான் -
இன்று மோடி அவர்களும் நினைத்து செயல்பட்டு வருகிறார் -
போராடத் தூண்டிவிடும் அத்துனைபேரும் கொள்ளையடித்து சொத்து சேர்த்து சொகுசாக வாழ்ந்து வருபவர்களே -
இதைப் பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும் -
No comments:
Post a Comment