Tuesday, 16 October 2018

Me too *சூடிக் கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாள் துணை*

*சூடிக் கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாள் துணை*

பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான ஆணோ,பெண்ணோ தனது கருத்துக்களை தெரிவித்து மன ஆறுதல் அடைவதற்கும்,துன்புறுத்தல் செய்தவர்களை அடையாளம் காணவும் *#me too* என்கிற பதிவுகள் பிரபலமாகி வருகின்றது!தமிழகத்தில் பல நூறு ஆண்கள் அல்லது சில ஆயிரம் பெண்கள் வளமான  வாழ்க்கை  முயற்சி பயணத்தின் ஊடாக தங்களுக்கு  வற்புறுத்தல் காரணமாக ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை   மீ டூ  மூலமாக வெளிக் கொண்டு வருவார்களே ஆனால் *திராவிடம் திணறும்,பிரிவினைவாத கட்சிகள் தெறித்து ஓடும் என்பது சத்தியமான உண்மை!!*

*பாடகி திருமதி.சின்மயி ஸ்ரீபாதா, சந்தியா மேனன் தங்களது பதிவு பரிமாற்றங்கள் மூலம் உண்மைகளை புலம்ப* அது அனைவருக்கும் உரிய கேள்வியாகி உள்ளது! இதே போல  *பெண் கவிஞர் தாமரை* தனது கணவர் தியாகு செய்த லீலைகளுக்கு சுப.வீரபாண்டியன் சாட்சி என்று கூறி உள்ளார்! சுப.வீரபாண்டியனும்,தியாகுவும் தமிழ்,தமிழர் என்ற பெயரில் லெட்டர் பேடு பிரிவினை தூண்டும் கட்சி நடத்தியவர்கள்!

*தமிழகத்தில் மீ டு பக்கம் பாத்திமாக்கள் நாட்டம் கொண்டால் சுடலைகள் தப்ப முடியாது! விஜயலட்சுமிகள் வீறு கொண்டால் சீமான்கள் தப்ப முடியாது!! இவை எல்லாவற்றிற்கும் மேலாக புகார் கொடுத்தால் தமிழக காவல்துறை வழக்கு பதியாமல் இருக்க முடியாது. நீதிமான்கள் நெற்றிக்கண்களை தமிழகத்தில் பதிய வைத்து இருக்கிறார்கள்! அரசியலில் இதெல்லாம் சகஜம் என்று கடந்து போகும் தமிழக அரசியலுக்கு கடிவாளம் போட்டாகி விட்டது. அதை செய்தால் தவறு இல்லை இதை செய்தால் தவறு இல்லை என்று கடந்து விட இனி காலம் இல்லை. தமிழகத்தின் பெரும்பாலான கட்சிகளில் அசிங்கமும், அக்கிரமும்தான் முகவரியாக உள்ளது! நான் இன்னார் என்ற முகவரியோடு தேசிய சிந்தனையில் களங்கம் இல்லாமல் வழி நடத்தும் தேசிய கட்சியில் இருக்கிறேன் என்ற பூரிப்போடு நல் பயணம் தொடர்கிறது!*

Me too பயணத்தில் தமிழக பெண்கள் களம் காண வாழ்த்துக்கள்!

*A.M.K.மணிவண்ணன்*

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...