எதற்காக இத்தனை எதிர்க்கட்சிகள் பாஜகவை எதிர்க்கிறார்கள்?
1. மத்தியில் உள்ள எந்த அமைச்சரும் தன்னுடைய உதவியாளராகவோ அல்லது வேறு வேலைக்கோ தன் சொந்தங்களை வைத்துக்கொள்ள கூடாது என்று பிரதமர் உத்தவிட்டதற்காகவா?
2. வெளிநாட்டில் பதுக்கப்பட்டிருக்கும் கருப்புப்பணத்தை பற்றி விசாரிப்பதற்கு
SIT அமைக்க உச்சநீதிமன்றம் பல வருடங்களாக சொல்லியும் கேட்காமல் கிடப்பில் போட்ட காங்கிரஸ் போல இல்லாமல் உடனடியாக SIT அமைத்ததற்காகவா?
3. போர் நடந்துகொண்டிருக்கும் வேளையில் ஏமனில் இருந்தும் சுதானில் இருந்தும் இந்தியர்களையும் பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டினரையும் காப்பாற்றி அழைத்து வந்ததற்காகவா?
4. ராணுவ வீரர்களின் பல்லாண்டு கனவான ஒன் ரேங்க் ஒன் பென்சன் திட்டத்தை அமல்படுத்தியதினாலா?
5. பொறுக்கிஸ்தானின் தீவிரவாதம் என்ற உண்மை முகத்தை எல்லா நாட்டினருக்கும் காண்பித்துக்கொடுத்தற்காகவா?
6. இந்திய மியான்மரின் எல்லையை தாண்டியும், இந்திய பொறுக்கிஸ்தான் எல்லையை தாண்டியும் தாக்குதல் நடத்தியதற்காகவா?
8. நேரடியாக பல உலக நாடுகளுக்கு பயணம் சென்று உலக நாடுகளின் பார்வையில் இந்தியாவின் மதிப்பை உயர்த்தியதோடு மட்டுமில்லாமல் இந்தியாவின் அந்நிய செலாவணியை உயர்த்தியதற்காகவா?
9.டிமானிடைசேஷன் என்ற பெயரில் கருப்பு பணத்திற்கெதிரான போரை நேரடியாக துவக்கியதற்காகவா?
10.டிமானிடைசேஷனின் தொடர்ச்சியாக பினாமி சொத்துக்களை முடக்க சட்டம் கொண்டுவந்ததற்காகவா?
11.வெளிநாட்டில் இருந்து பணம் வாங்கிக்கொண்டு இங்கு அவர்களுக்கு ஆதரவாக இந்திய பொருளாதாரத்தை நீர்த்துப்போக பல போராட்டங்களை தூண்டி பல்வேறு வளர்ச்சி பணிகளை தடை செய்துகொண்டிருந்த NGO க்களை ஒடுக்கியதற்காகவா?
12.வெளிநாட்டில் இருந்து பணம் வாங்கிக்கொண்டு இங்கு மதம் மாற்றிக்கொண்டிருந்த மிஷினரிகளை ஒடுக்கியதற்காகவா?
13.ஆதார் இணைப்பின் மூலம் 1,50,000 போலி கல்லூரி விரிவுரையாளர்கள் (அதாவது இல்லாத விரிவுரையாளரை இருப்பது போல் காண்பித்தது) கண்டுபிடிக்கப்பட்டு பல கோடி ரூபாய்கள் மிச்சப்படுத்தப்பட்டதற்காகவா?
14.பல கோடி ஏழை எளிய மக்களுக்கு வங்கி கணக்கு ஆரம்பித்து அவர்களுக்கு வழங்கப்படும் மானியத்தை நேரடியாக வங்கியில் செலுத்தி முழு மானியமும் நேரடியாக அவர்களுக்கு செண்று அடையுமாறு செய்து அதிலும் பல கோடி ரூபாய்களை மிச்சப்படுத்தியதற்காகவா?
15.கடந்த ஆட்சியில் ஆட்சியாளர்களின் சிபாரிசின் பெயரில் வங்கிகள் பலருக்கு பல்லாயிரம் கோடிகள் கடனாக கொடுத்ததை அவர்கள் ஏமாற்றியதால் வங்கிகள் வராகடனில் தத்தளித்துக்கொண்டிருக்கும் சூழலில் அந்த கடன்களுக்கான அவர்களின் சொத்தை கையகப்படுத்தும் சட்டத்தை இயற்றியதற்காகவா?
16.மறைமுக வரிகளால் உற்பத்தியாளர்களும், வர்த்தகர்களும் கடந்த ஆட்சியில் பட்ட அவஸ்த்தையில் இருந்து மீட்டெடுக்கவும், அப்படிப்பட்ட வரிகளால் வரி ஏய்ப்பும், ஊழலும் பெருகியதால், எல்லா வரிகளையும் உள்ளடக்கி GST யை கொண்டுவந்து வரி வசூலை அதிகமாகி, ஊழல் நடக்காமல் பார்த்துக்கொண்டதற்காகவா?
17.நாட்டையும் வீட்டையும் சுத்தமாக வைத்திருங்கள் என்று சொல்லியதோடு மட்டுமில்லாமல் ஸ்வச் பாரத் என்று ஆரம்பித்து நதிகளில் இருந்து ஆரம்பித்து நாட்டை சுத்தப்படுத்த நிதி ஒதுக்கியதற்காகவா?
18.நாட்டின் ஏழை எளியவரில் இருந்து எல்லா தரப்பினரையும் காப்பீடு திட்டத்தில் கொண்டு வந்து விபத்து மற்றும் உயிரிழப்பு நேரங்களில் சம்பந்தபட்டவரும், அவரின் குடும்பத்தாரும் பயன் பெரும் வகையில் செய்ததற்காகவா?
19.முன்பு இருந்த பயிர் காப்பீடு திட்டங்களை போல் இல்லாமல் குறு விவசாயிகளுக்கும் பயன் தரும் வகையில் புதிய பயிர் காப்பீடு திட்டம் கொண்டுவந்ததாலா?
20.விவசாயிகள் அவர்கள் விளைவித்த விவசாய பொருட்களின் விற்கும் விலையை கிட்டத்தட்ட 50% உயர்த்தியதினாலா?
21.விவசாயிகள் எப்படி குறைந்த செலவில் அதிக மகசூல் பார்க்கலாம் என்று அறிய பல்வேறு ஆலோசனை நிலையங்களை இந்தியா முழுவதும் ஏற்படுத்தி கொடுத்ததினாலா?
22.நாட்டின் அந்நிய செலாவணி இப்படி அதிகமாக்கி, பெட்ரோல் டீசல் விலை அதிகமானாலும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயராமல் அதே நேரத்தில் பண வீக்கத்தையும் கட்டுக்குள் வைத்துள்ளதாலா?
23.முத்ரா கடன் என்ற திட்டத்தை அறிமுகபடுத்தி பல்லாயிர சிறுதொழில் முதலாளிகளை உருவாக்கி அதன் மூலம் பல லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி கொடுத்ததாலா?
24.பெண்களுக்காக அவர்கள் நல் வாழ்விற்கும் முன்னேற்றத்திற்கு மட்டும் கிட்டத்தட்ட 150 திட்டங்கள் கொண்டுவந்ததற்காகவா?
25.எதிர்க்கட்சிகளின் பொய் பிரச்சாரத்தை தாண்டி எல்லோரும் இந்தியன் என்ற குறிக்கோளில் எல்லா பிரிவினரும் பயன் பெரும் வகையில் திட்டங்களும் சட்டங்களும் கொண்டுவருவதினாலா?
26.மக்களுக்கு தேவைப்படும் அத்தியாவசிய மற்றும் உயிர்காக்கும் மருந்துகளை மத்திய அரசின் நேரடி கண்காணிப்பில் மருந்து விற்பனை மையம் என்று ஏற்படுத்தி அதில் கிட்டத்தட்ட 80% வரையிலும் மருந்துகள் விலை குறைத்து கொடுப்பதினாலா?
27.இந்தியா முழுவதும் சென்ற ஆட்சியில் முடியாது என்று ஒதுக்கிய பல்வேறு இடங்களுக்கும் மின்சார வசதி ஏற்படுத்தி கொடுத்ததினாலா?
28.சென்ற ஆட்சியின் நிர்வாக சீர்கேட்டாலும், ஊழலினாலும், அதிகார தலையீட்டினாலும் கடனில் மூழ்கி இருந்த எல்லா மாநில மின்சார துறையினையும் அந்த கடனில் இருந்து மீட்டு கொண்டு வந்து, சீர்கெட்ட நிர்வாகத்தை சரியாக்கியதினாலா?
29.ஒரு நாட்டின் வளர்ச்சி அதிகரிக்கவும் சீராக இருக்கவும் அதன் உள் கட்டமைப்பு அவசியம் என்பதை உணர்ந்து, உலக தரம் வாய்ந்த பல்வேறு பசுமை சாலை திட்டங்களை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றி கொண்டிருப்பதாலா?
30.நமது நாட்டில் தொழில் தொடங்கவும், பல்வேறு முக்கியமான விஷயங்களில் இருந்துவந்த சிகப்பு நாடா முறையை முற்றிலும் அகற்றி சென்ற ஆட்சியில் டெல்லியில் கொலோசித்து வந்த லூட்டியங்களுக்கு வேலை இல்லாமல் செய்ததினாலா?
31.அதள பாதாளத்திற்கு சென்று கொண்டிருந்த இந்தியாவின் வளர்ச்சியை அதிகமாகி வளரும் நாடுகள் வரிசையில் இந்தியாவை 4வது இடத்திற்கு முன்னேற்றியதற்காகவா?
32. அரபு நாடுகளிடம் முந்தைய அரசு கடனாக வைத்திருந்த வட்டியுடன் 2 லட்சம் கோடியை அடைத்ததனாலா?
33. ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு ஐந்துலட்சம் வரை இலவச சிகிட்சை என உலகின் மிகப்பெரிய மருத்துவ காப்பீடு திட்டத்தை கொண்டு வந்ததாலா?
எதற்காக எதிர்க்கிறார்கள்.
தாங்கள் பலவழிகளில் சேர்த்துவைத்த பணத்திற்கு கணக்கு காட்ட வேண்டி வந்துவிட்டதே என்பதினாலா?
ஊழல் செய்யும் வழிகள் அடைக்கப்பட்டு கொண்டிருக்கிறதே என்ற பயத்தினாலா? பிரிவினைவாதம் இனிமேல் மக்களிடம் எடுபடாது என்று அறிந்ததினாலா?
இந்து மதத்தை அழிக்க நினைக்கும் தங்களுடைய கனவு பறி போய்விட்டதே என்ற கோவத்தினாலா? எதற்காக எதிர்க்கிறார்கள் இவர்கள்.
இப்பொழுதுள்ள எதிர்க்கட்சி தலைவர்களில் இந்தியாவை வழிநடத்தும் திறமையுள்ளவர் யார் இருக்கிறார்? ராகுலா? மம்தாவா? அகிலேஷா? சரத்பவாரா? லாலுவா? மாயவாதியா? தேவகௌடாவா? ஸ்டாலினா? சீதாராம் எச்சூரியா? எடப்பாடியா?
இவர்களில் யாரால் இந்தியாவை வழிநடத்த முடியும்?. பிரிவினை இல்லாமல் இந்தியாவின் மேல் பக்தியுடன், இந்தியர் அனைவரும் சமம் என்று யாருக்கும் எந்த அதீத சலுகையும் காட்டாமல் யாரால் இந்தியாவை வழிநடத்த முடியும்?. ஊழலுக்கு எதிரான இந்த அரசு ஆரம்பித்து இருக்கும் போரை உங்களில் யாரால் தொடர்ந்து இதே வலுவுடன் நடத்தமுடியும்?. ஓட்டிற்காக என்று இல்லாமல் பொதுமக்கள் நலனை மனதில் கொண்டு திட்டங்களை கொண்டுவரமுடியும்.?
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை எப்படியாவது தடுக்கும் நோக்கில் பல்வேறு நாடுகள் ஒன்றிணைத்து செயல்பட்டு கொண்டிருந்தாலும் அதையெல்லாம் மீறி இந்தியாவை நல்ல வளர்ச்சி பாதைக்கு கொண்டுவந்த மோடியை போல் இவர்களில் யாரால் செய்ய முடியும்.?
இந்தியாவிற்கு எதிராக அணு ஆயுதங்களை உபயோகப்படுத்தவும் தயங்காத நாடுகள் நம்மை ஏளனமாக பார்த்துக்கொண்டிருந்தது போய் பயத்துடனும் மரியாதையுடனும் பார்க்க வைத்த இந்த அரசு போல் இவர்களில் எந்த தலைவரின் தலைமையில் அமையும் அரசு செய்ய முடியும்?
இப்படி எந்த தகுதியுமே இல்லாத உங்களிடம் நாங்கள் எங்கள் நாட்டை எப்படி நிர்வகிக்க அனுமதிக்கமுடியும். உங்கள் தகுதியை வளர்த்துக்கொண்டு வாருங்கள் .. பிறகு பார்க்கலாம்.
இன்னும் இருக்கிறது!
No comments:
Post a Comment