Tuesday, 16 October 2018

பிஜேபியின் வெற்றிக்கு துணை நிற்கும் மைக்ரோ பாலிடிக்ஸ்-

பிஜேபியின் வெற்றிக்கு துணை நிற்கும் மைக்ரோ
பாலிடிக்ஸ்-

நேற்று ஒரு நண்பர் திமுக பிஜேபி கூட்டணி
வருமா என்று கேட்டு இருந்தார். அதற்கு நோ
சான்ஸ் என்று தான் கூறி இருந்தேன். ஏனெனில்
தமிழகத்தில் கெஸட் ரோலில் கூட வர முடியாத
பிஜேபி யை திமுக திட்டமிட்டு மெயின் வில்லனாக
தமிழக மக்களிடையே கொண்டு சேர்த்து வருகிறது.

அதாவது ஒரு சினிமாவை  தடை செய்ய வேண்டும்
என்று எதிர்ப்புகள் வரும் பொழுது பாதி பேருக்கு
மேல் அதில் என்ன தான் இருக்கிறது என்று போய்
பார்ப்போமே என்று இயல்பாகவே ஒரு ஆர்வத்தை
தூண்டும்.. அதாவது ஒரு நெகட்டிவ் விமர்சனம்
தான் ஒரு படத்தை மக்களிடையே விரைவாக கொண்டு சேர்க்கிறது. இந்த நிலையில் அந்த படம்
சுமாராக இருந்து விட்டாலே போதும் அந்த படம்
பட்டைய கிளப்பி விடும்..

அரசியலில் கூட இதை பார்க்க முடியும்.. இன்றைக்கு
மோடி பிரதமராக இருக்கிறார் என்றால் அதற்கு
முக்கியமான காரணம் .அவர் மீது எதிர்க்கட்சிகள்
முன் வைத்த குஜராத் கலவரம் என்கிற நெகட்டிவ்
இமேஜ்  தான். இந்த நெகட்டிவ் இமேஜ் தான் மோடியை இந்தியா முழுவதும் கொண்டு சேர்த்தது.

2014 பாராளுமன்ற தேர்தலில் தொடர் ஊழல் களி னால் காங்கிரஸ் மீது கோபத்தில் இருந்த  மக்களு க்கு அந்த நேரத்தில் நெகட்டிவ் இமேஜ் மூலமாக
இந்தியா முழுவதும் அறிமுகமாகி இருந்த மோடி
தான் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான  மாற்று என்கிற அடிப்படையில் மக்கள்சாய்ந்தார்கள்.இதை ஒரு எதிர்மறை ஈர்ப்பு என்றே சொல்வார்கள்

. அதாவது  நாம் சார்ந்து இருக் கும் ஒரு அமைப்பின் மீது நமக்கு வெறுப்பு வரும்
பொழுது அந்த நேரத்தில் நம்முடைய அமைப்பு க்கு
எதிரான இயக்கத்தை நோக்கி  நம்முடைய மனம்
இயல்பாகவே  செல்ல  ஆரம்பிக்கும்.

இதை anti affectionately என்று கூறுவார்கள். இந்த
எதிர் மறை ஈர்ப்பு ஒருவருக்கு அரசியலில்வர வேண்டும் என்றால் முதலில் அவரின் சிந்தனையில் நீ விரும்பும் இயக்கத்துக்கு  போட்டியாக இன்னொரு
இயக்கம் இருக்கிறது என்கிhற எண்ணத்தை அவரி ன்மனதில் விதைக்க வேண்டும். இதைத் தான் திமுகஇப்பொழுது தமிழகத்தில் செய்து வருகிறது

இது நம் கண்ணுக்கு தெரியாத மைக்ரோ அரசியல் ் இதை பிஜேபி தன்னுடைய பழைய கூட்டாளிகளான திரிணாமுல் காங்கிரஸ், தெலுங்கானா ராஷ்டிரிய
சமிதி,பிஜூ ஜனதா தளம் சிவசேனா போன்ற மா நில கட்சிகள் மூலம் ஒரு சாமர்த்தியமான அரசியல் செய்து வருகிறது..

அதாவது தங்களின் முன்னாள் நண்பனையே
எதிரியாக்கி வளர்த்து விடும் அரசியலை செய்து
வருகிறது.. புரியலையா...மேற்கு வங்காளத்தை
எடுத்து கொள்வோம்.. 2009 ல் மம்தா பானர்ஜி
மேற்கு வங்காளத்தில் இடது சாரிகளிடம் இருந்து
ஆட்சியை பிடித்து ஆட்சிக்கு வந்தார். இதனால்
இயல்பாகவே மேற்கு வங்காளத்தில் இடதுசாரிகள்
தான் எதிர்க்கட்சிகளாக இருக்க முடியும்.

ஆனால் இப்போதைய நிலைமை என்ன தெரியுமா?
மேற்கு வங்காளத்தில் பிஜேபி தான் எதிர்க்கட்சி
யாகி விட்டது. இது எப்படி சாத்தியமானது என்று
நீங்கள் கேட்கலாம். இது தான் மைக்ரோ அரசியல்.

மம்தா பானர்ஜி ஆட்சிக்கு வந்தவுடன் திட்டமிட்டு
பிஜேபிக்கு எதிராகவே செயல் பட ஆரம்பித்தார்.
மேற்கு வங்காளத்தில் 2 வது இடத்தில் இருந்த
எதிர்க்கட்சியான இடது சாரிகளை ஓரம்கட்டி வைத்து விட்டு 4 வதுஇடத்தில் இருந்த பிஜேபியை வம்புக்கு இழுக்கும் வேலையை மட்டுமே செய்து வந்தார் .

இதனால் மேற்கு வங்காளத்தில் அடிக்கடி பிஜேபி க்கும் திரிணாமுல் காங்கிரஸ் இடையே ஒரு மோதல்
உருவாகி கொண்டே இருந்தது.. அதாவது தன்னு டைய எதிரி பிஜேபி தான் என்று மக்களிடையே
எடுத்து சென்று கொண்டு இருந்தார்.

இதனால் இனிஇடது சாரிகள் அவ்வளவு தான் என்று முடிவுக்கு வந்து விட்ட  மக்கள் படிப்படியாக
பிஜேபி பக்கம் வர ஆரம்பித்தார்கள். இதன் வெளிப்
பாடு என்ன தெரியுமா?

2011 சட்டமன்ற தேர்தலில்37 சதவீத வாக்குகளை பெற்று இரண்டாவது இடத்தை பிடித்து இருந்த இடது சாரிகள் 2016 சட்டமன்ற தேர்தலில் 26 சதவீத வாக்குகளை பெற்றுசுமார் 11 சதவீத வாக்குகளை இழந்து எதிர்க்கட்சி அந்தஸ்தினை காங்கிரஸ் கட்சியிடம் இழந்தது..

அதே நேரத்தில்  இடது சாரிகள் ஆட்சியை பறி கொடுத்த 2011 தேர்தலில் பிஜேபி வாங்கிய ஓட்டுக்கள் வெறும் 4 சதவீதம் தான். ஆனால்
2016 தேர்தலில் பிஜேபிக்கு கிடைத்தது 11 சதவீதம்
வாக்குகள்.. இது எப்படி உருவானது என்று காரணம் தேடினால் அதன் விடை எதிர் மறை ஈர்ப்பு அரசியல் என்றேதெரிய வரும்

அதாவது கண்ணுக்கு தெரிந்த எதிரியான இடது
சாரிகளை ஓரம் கட்டி வைத்து விட்டு கண்ணுக்கு
தெரியாத களத்தில் இல்லாத எதிரியான ்பிஜே
பியை தொடர்ந்து வம்புக்கு இழுத்து கொண்டே
இருந்ததால்  இடது சாரிகளிடம் இருந்த மைனாரி ட்டிகள் இனி இவர்கள் அவ்வளவு தான் என்று
மம்தா பக்கம் செல்ல ஆரம்பித்தார்கள்
.
அதே நேரத்தில் இந்து உணர்வாளர்கள்  பல கட்சி
களில் இருந்தும் பிஜேபி பக்கம் வர ஆரம்பித்தார் கள்.அது மட்டுமல்லாது ஆளும் கட்சியான திரிணா முல் காங்கிரசை பிடிக்காத வங்காளிகள் எதிர் மறை  ஈர்ப்பு அரசியல் மூலம் மம்தாவுக்கு எதிரியாகி விட்ட  பிஜேபி பக்கம். வர ஆரம்பித்தார்கள்.இதில் கொள் கை  பிடிப்பு கொண்ட கம்யூனிஸ்ட் கள் கூட  அடக்கம்

உங்களுக்கு ஆச்சரியமாக  இருக்கும்..என்னடா
கம்யூனிஸ்ட் கள் எப்படி பிஜேபிக்கு செல்வார்கள் என்று நீங்கள் யோசிக்கலாம்.. ஆனால் உண்மை
பாஸ்.. மேற்கு வங்காளத்தில் இப்பொழுது நடை
பெற்று வருகிறது..

உதாரணத்திற்கு ஒரு தொகுதி தேர்தல் முடிவினை
கூறுகிறேன்.. காந்தி தக்சின் என்கிற ஒருசட்டமன்ற
தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 2011
ல் ஆட்சி மாற்றம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 86,993 ஓட்டுக்கள் பெற்றது.இடது சாரிகள் 58,296
ஓட்டுக்களை பெற்று இருந்தார்கள்.. பிஜேபி 5,004
ஓட்டுக்களை பெற்று டெபாசிட்டை இழந்து இருந்தது

அடுத்து 2016 பொது தேர்தலில்திரிணாமுல் காங்கி ரஸ் 93,353 ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்று இரு ந்தது. இரண்டாவது இடத்தில் காங்கிரஸ் கூட்டணி யோடு் போட்டியிட்ட இடதுசாரிகள்59,469ஓட்டுக்கள் பெற்று இரண்டாவது இடத்தில் இருந்தது.பிஜேபி 15,223 ஓட்டுக்களை மட்டுமே பெற்று  டெபா சிட்டை இழந்து இருந்தது..

ஆனால் 2017 ம் ஆண்டு ஏப்ரலில் இதே காந்தி தக்‌ஷின் சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்தது.. அதில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு
95,363 ஓட்டுக்களை பெற்று இருந்தார். ஆனால்
பிஜேபி இரண்டாவது இடத்திற்கு வந்து இருந்த
து.. ஓட்டுக்கள் எவ்வளவு தெரியுமா?

பிஜேபி 52,843 ஓட்டுக்கள் வாங்கி இருந்தது. அதே
நேரத்தில் இடது சாரிகள் 17,423 ஓட்டுக்களை பெற்று டெபாசிட் டை இழந்து விட்டதுஆச்சரியமாக
இருக்கிறது அல்லவா..இது எப்படிசாத்தியமாயிற்று
ஒரே ஒரு வருசத்தில் பிஜேபிக்குசுமார் 40 ஆயிரம் ஓட்டுக்கள் கிடைக்கிறது. அதேநேரத்தில் இடது சாரிகள் 40 ஆயிரம் ஓட்டுக்களைஇழக்கிறார்கள் இது எப்படி? யார் காரணம்? பிஜேபியின் மேற்கு வங்காள தலைவர் திலீப் ஜோஷியா?

இல்லை பாஸ் மம்தா பானர்ஜி தான் காரணம்.
அவர் தன்னுடைய எதிரியை திட்டமிட்டு உரு வாக்கு
கிறார்.மேற்கு வங்காளத்தில்  இல்லாத பிஜேபி யை நுழையவிட மாட்டோம் என்று பிஜேபிக்கு எதிராக
செயல்பட்டு அதன் மூலம் திரிணாமுல் காங்கிரஸ்
கட்சியின் எதிர்ப்பாளர்களை எல்லாம் பிஜேபி பக்கம் வர வைத்து விட்டார். இதனால் மம்தாவின் எதிரி
களாக இருந்த கம்யூனிஸ்ட்கள் கூட  இப்பொழுது. பிஜேபிபக்கம் திரும்பி விட்டார்கள்..அதனால் தான்
மேற்கு வங்காளத்தில் பிஜேபி அமோக வளர்ச்சி
அடைந்து வருகிறது..

அதாவது  மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி முதல்வராக வருவதற்கு முன் 2011 வரைவெறும்
4 சதவீமாக இருந்த பிஜேபியின் வாக்கு வங்கி
மம்தா முதல்வராக வந்த பிறகு 2016 ல் 10 சதவீமாக
உயர்ந்து இப்பொழுது சுமார் 30 சதவீதத்தை எட்டி
விட்டது.

ஆக களத்திலேயே இல்லாத பிஜேபி யை திட்டமிட்டு எதிரியாக உருவாக்கி தன்னுடைய பிஜேபி எதிர்ப்பு
பிரசாரங்களால் இப்பொழுது உண்மையாகவே
பிஜேபி யை மேற்கு வங்காள அரசியல் களத்தில்
எதிர் கட்சியாக கொண்டு வந்து விட்டார்..இது தான்
எதிர் மறை ஈர்ப்பு  அரசியல். இங்கே பிஜேபிக்கும் மம்தாவுக்கும் இடையில் இருக்கும் கண்ணுக்கு தெரியாத நட்பு நமக்கு  தெரியாது
.
ஆனால் களத்தில் இருக்கும் எதிர்ப்பு மட்டுமே நம்
கண்களுக்கு தெரியும். இனி என்னாகும் தெரியுமா?
ஆளும் கட்சி என்கிற அளவில் மம்தாவுக்கு எதிராக
மக்களிடையேஉண்டாகும் எதிர்ப்புகள் பிஜேபி க்கு
ஆதரவாக திரும்பி பிஜேபியை மேற்கு வங்காள த்தில் ஆட்சிக்கு கொண்டு வந்து விடும்.

மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி செய்த வேலையை தமிழ் நாட்டில் திமுக செய்து வருகிறது
நேற்றுவரை  தமிழ் நாட்டில் பிஜேபி களத்தில் இல்ல
ஆனால் திமுக எடுத்து வைத்த பிஜேபி எதிர்ப்பு பிரசாரங்கள் இல்லாத பிஜேபி யை தமிழ் நாட்டில்
ஒரு பிரமாண்ட மான எதிரியாக மக்கள் மனதில்
கொண்டு போய் சேர்த்து விட்டது.

இதனால் என்னவாகும் தெரியுமா?வழக்கமாக திமுகவுக்கு எதிரியாக இருந்த அதிமுக வலுவிழந்து
கொண்டே வரும். ஏனெனில் இங்கு திமுகவுக்கு போட்டி பிஜேபி தான் என்கிற ஒரு தோற்றத்தை
மக்கள் மனதில் நிலை நிறுத்தி விடும். இதனால்
திமுக எதிர்ப்பாளர்கள் எல்லாம் பிஜேபி பக்கம்
நகர ஆரம்பிப்பார்கள். இதனால் தமிழ் நாட்டில்
பிஜேபி யின் வாக்கு சதவீதம் மெல்ல மெல்ல அதி கரிக்க ஆரம்பிக்கும்.

இந்த நேரத்தில் அதிமுக தேய்ந்து வருவதால்
அதன் வாக்காளர்களின் அடிப்படை சிந்தனை யான திமுக எதிர்ப்பு எந்த கட்சியில்  இருக்கிறதோ அந்த
கட்சியை நோக்கி அதிமுக ஆதரவாளர்கள் நகர
ஆரம்பிப்பார்கள். அதே மாதிரி திமுக உருவாக்கி
வரும் ரஜினி எதிர்ப்பு கூட ரஜினி ரசிகர்களை
பிஜேபி நோக்கியே கொண்டு செல்லும்.

கட்சியே ஆரம்பிக்காத ரஜினியையும் திமுக போட்டி யாளராக நினைத்து அரசியல் செய்து வருகிறது இப்படி திமுக உருவாக்கி வரும் ரஜினி எதிர்ப்பு
அரசியல் நாளடைவில் ரஜினி ரசிகர்களை திமுக
வின் எதிரியாக திமுகவாலேயே கொண்டு வரப்பட்ட
பிஜேபி பக்கம் கொண்டு சேர்க்கும்.

இதனால் வரும் தேர்தலில் திமுகவின் எதிரிகளாக
இருக்கும் அதிமுகவும் ரஜினியும் பிஜேபியோடு
இணையும் பொழுது ஒட்டுமொத்த திமுக எதிர்ப்பு
வாக்குகள் அனைத்தும் பிஜேபி பக்கம் வந்து விடும்.
இதனால் வரும் தேர்தலிலேயே தமிழக அரசியலில்  பிஜேபி ஒரு மாபெரும் மாற்றத்தை உருவாக்கும்.

ஆகவே தன்னுடைய முன்னாள் நண்பனையே இப்பொழுது எதிரியாக்கி வளர்த்து விடும்
மைக்ரோ அரசியலை திமுக செய்து வருவதால்
தமிழகத்தில் பிஜேபியின்  வளர்ச்சி அதிகரித்து
வருகிறது.. ஆனால் இதில் உள்ள சிறப்பு அம்சம்
என்ன வென்றால் கடைசியில் நாம் உருவாக்கிய
எதிரியிடமே நாமும் வீழ்ந்து விடுவோம்..

இது மகாராட்டிரா வில் சிவசேனா வுக்கு நிகழ்ந்து
விட்டது. அடுத்து திமுக பிஜூ ஜனதா தளம் திரிணாமுல் காங்கிரஸ் தெலுங்கானா ராஷ்டிரிய
சமிதி என்று வரிசையாக இந்த கட்சிகள் தங்களின்
முன்னாள் நண்பனும் இன்றைய எதிரியுமான பிஜேபி யிடம் வீழ்ந்து போகும்...

சந்திரபாபு நாயுடு இப்பொழுது தான் ஆந்திராவில்
தன்னுடைய பழைய நண்பனாக பிஜேபி யை எதிரியாக முன்னாள் நிறுத்தி பிஜேபி யை வளர்க்க
ஆரம்பித்து இருக்கிறார். இப்பொழுது தெலுங்கு
தேச எதிர்ப்பாளர்கள் பிஜேபி பக்கம் வர ஆரம்பிப் பார்கள்..வரும் பாராளுமன்ற தேர்தலில் பிஜேபி தெலுங்கு தேசத்தோடு கூட்டணிவைத்ததை காட் டிலும் அதிக ஓட்டுக்களை பெறும்
..
இந்த எதிர் மறை அரசியலை காங்கிரஸ் கட்சியால் பிஜேபிக்குஎதிராக உருவாக்க முடியவில்லை. அதாவது மோடிக்கு மாற்று என்று ராகுலை மட்டு மல்லாது யாரையும் முன்வைக்க முடியவில்லை.
அது நிகழ்ந்தால் தான் இன்றைய பிஜேபி ஆதர வாளர்கள் கூட  காங்கிரஸ் பக்கம் செல்ல வாய்ப்பு
ள்ளது.

அது இப்போதைக்கு சாத்தியமில்லை.அதனால் மோடியை அவ்வளவு சீக்கிரத்தில்  யாராலும் வீழ்த்தி விட முடியாது.. திரு.மகி. FB பதிவு.


 
.

.

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...