பெட்ரோல் விலை உயர்வு என்பது தற்போது எதிர்க்கட்சிகளால் பெரிதும் கிளப்பப்படும் பிரச்சினையாகி உள்ளது. அமெரிக்கா அனேக நாடுகளின் குடுமியை தனது கையில் வைத்துக்கொள்ள தனது பெரும் ஆயுதமாக வைத்திருப்பது பெட்ரோலிய சந்தையும் ஆயுத சந்தையையும் தான். இவை இரண்டிற்கும் எல்லா நாடுகளும் அமெரிக்காவை சார்ந்தும் அதன் அனுமதியுடனும் தான் பெற முடியும் என்ற நிலையை உருவாக்கி வைத்திருப்பதால் தான் அது வல்லரசு நாடாக இன்னும் நீடிக்கிறது. அதன் கட்டளைகளுக்கு கீழ்படியாத நாடுகள் எல்லாம் பொருளாதார தடையாலும் உள்நாட்டு புரட்சி என்ற போராட்டங்களாலும் சிதைக்கப்பட்டு அடிபணிய வைக்கப்படுகின்றன என்ற வரலாற்றை நாமே கண் முன் கண்டுகொண்டு தான் இருக்கிறோம். அமெரிக்காவைப் பொறுத்தவரை மற்ற நாடுகளின் வளர்ச்சி என்பது கசப்பான விசயம் தான்.
தற்போது இந்தியாவின் வளர்ச்சி அமெரிக்காவின் கண்ணை உறுத்த ஆரம்பித்துவிட்டது. முதலில் இந்திய பொருட்களுக்கு வரியை கூட்டி சீண்டிப்பார்த்தது. பதிலுக்கு மோடி அரசு அமெரிக்கப் பொருட்களுக்கு வரியை கூட்டி பதிலடி கொடுக்கவும் கொஞ்சம் நிமிர்ந்து கவனிக்க ஆரம்பித்தது.
பெட்ரோலிய பொருட்களின் தட்டுப்பாட்டை உருவாக்க ஈரானிடமிருந்து பெட்ரோலை வாங்காதே... வாங்கினால் பொருளாதார தடை விதிப்போம் என மிரட்டியது. முன்பு பொக்ரான் அணுகுண்டு சோதனைக்காக வாஜ்பாய் அரசு காலத்தில் பொருளாதார தடை விதிக்கப்பட்டது. மீண்டும் விதித்தால்... அது இந்தியாவின் வளர்ச்சியை பாதிக்கலாம். ஆனால்... அதற்கெல்லாம் நாட்டையே அடமானம் வைக்கும் நிலைக்கு இந்தியாவை மோடி கொண்டு செல்வார் என்ற அமெரிக்காவின் கணக்கு தவறாகிவிட்டது.
நிலையை புரிந்து கொண்ட மோடி அரசு... உடனடியாக ரஷ்யாவோடு ஒரு அணு ஆயுத ஒப்பந்தத்தை போட்டுக்கொண்டது. ஒருவேளை பெட்ரோலிய சந்தையில் தனது ஆதிக்கம் குறைந்தால் அடுத்ததாக அமெரிக்கா கையிலெடுப்பது ஆயுத தாக்குதல் தான். அதாவது ஆயுதத்தை காட்டி பணிய வைக்க முயலும் தந்திரம். இப்போது அதற்கும் ஆப்பாகி விட்டது. இதை இந்தியா விரும்பாவிட்டாலும்... இந்த நிலைக்கு தள்ளுவது அமெரிக்கா தான். எதுவாயினும் இனி அமெரிக்காவோடு சுமூகமான உறவைப் பேணுவது கடினம் தான். ஈராக் டாலரில் கச்சா எண்ணெய்யை விற்க ஒப்புக்காததால் தான் அதன் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்தது. அதனால் இந்திய ரூபாய் மதிப்பிலேயே இனி ஈரானுடன் வர்த்தகம் நடைபெறும் என்ற செய்தி அமெரிக்காவிற்கு பேரிடியாய் இறங்கியிருக்கும்.
அமெரிக்காவைப் பொறுத்தவரை இந்தியா என்பது மாபெரும் சந்தை. அந்த சந்தையை குண்டு போட்டு அழிக்க நினைக்காது. மாறாக தனக்கான அரசை நிறுவி... மீண்டும் அந்த சந்தையை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர நினைக்கும்.
நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்கள் தான் இருக்கிறது.இந்த 5 மாதங்களும் மோடியையும் பாஜகவையும் தோற்கடிக்க மறைமுக வேலைகளை இந்நேரம் தொடங்கியிருக்கும்.
எனது கணிப்பு சரியென்றால்... வரப்போகும் 5 மாதமும் பிரிவினைவாத, தேசிய எதிர்ப்பு போராட்டங்கள் பெருவாரியாக தலையெடுக்கும். அதன் முதல் போராட்டம் பெட்ரோலிய சந்தையை சீர்குலைக்கும் போராட்டமாக தான் இருக்கும். இந்த முறை அமெரிக்காவின் தலையீட்டோடு மிகப்பெரிய அளவில் இதை நடத்த முயலும். பெரும் உயிர்ச்சேதங்களை விளைவித்து இந்த அரசிற்கெதிராக மக்களின் எண்ணத்தை திருப்ப முயலும். அதன் மூலம் ஆட்சி மாற்றத்தை கொண்டு வந்து தன்னை மீண்டும் வல்லரசாய் நிலைநிறுத்திக்கொள்ள முயலும்.
எப்படிப் பார்த்தாலும்... அரசிற்கெதிரான ஆயுத தாங்கி தாக்குதல் நடத்தக் கூட பிரிவினைவாதிகளை தூண்டும்.
எவ்வாறு ரஷ்யாவிற்கு எதிராக பின்லேடனை உருவாக்கி தனக்கு தலைவலியை கொடுத்த போது தானே பின்லேடனை அழித்ததோ... அதே போல நம்நாட்டிற்குள்ளும் அது போன்ற பலிகடாக்கள் வளர்த்தெடுக்கப்படுவார்கள். ஒரு நேரத்தில் அவர்களே அமெரிக்காவின் தோட்டாவிற்கு பலியாவார்கள் என்பது புரியாமல் அவர்களும் இந்தியாவிற்கு எதிராக மதம் இனம் போன்ற காரணங்களால் உசுப்பிவிடப்பட்டு உதிர்ந்து போவார்கள்.
இதில் அப்பாவி மக்கள் தான் கவனமுடன் இருக்க வேண்டும். பிரிவினைவாதிகளின் தூண்டுதல்களுக்கு இந்த நேரத்தில் பலியாகிவிடாதீர்கள். அது உங்களை நீங்களே மரணகுழியில் தள்ளும் முயற்சி. நீங்கள் மோடிக்கு ஆதரவாக இருக்கிறீர்களோ இல்லையோ... தற்போது இந்தியாவிற்கு ஆதரவாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் எதிர்காலத்தில் நிச்சயம் அழித்தொழிக்கப்படுவீர்கள்.. இந்தியாவால் அல்ல... அமெரிக்காவால்...
No comments:
Post a Comment