*திரு.ராகுல் காந்தி அவர்கள் காங்கிரஸ் தலைவர் ஆன பிறகு மக்கள் மத்தியில் காங்கிரசுக்கு பெரிய ஆதரவு அலைகள் தொடங்கி விடுவதைப் போல மாய தோற்றங்களை உருவாக்க முயன்று அதில் வழக்கம் போல வீழ்ச்சியை சந்திந்து பொறுமை இழந்து தவித்து வருகிறது! திரு.ராகுல் காங்கிரஸ் தலைமை ஏற்ற பிறகு நாட்டு மக்கள் மத்தியில் எடுத்த கருத்துக் கணிப்புகள் மிகையாக கூட ஒன்றும் சொல்வதற்கு இல்லை என்ற நிலையில் வீழ்ந்து கிடக்கிறது! இதில் ஆச்சரியம், அதிருப்தி என்பது எல்லாம் ஒன்றும் இல்லை! காங்கிரஸ் என்பது வழக்கம் போல வழி,வழி அடிமைகளை வைத்து கட்சி என்ற பெயரில் நடத்தப்படும் ராகுல் காந்தி அவர்களது பாரம்பரிய சொந்த நிறுவனம் அதன் நிர்வாகியாக அவரது முன்னோர் இருந்து வந்தனர் தற்போது அவரது கைகளுக்கு வந்து உள்ளது! அவ்வளவுதான் இதற்காக மக்கள் மாற வேண்டும் என நினைப்பது தவறு!*
*திரு.ராகுல் காந்தி அவர்கள் காங் தலைமை ஏற்ற பிறகு தான் சொல்வது உண்மை என மக்கள் நம்ப வேண்டும் என்கிற ரீதியில் காய்களை நகர்த்த திட்டமிட்டு பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டு மக்களிடம் எடுபடாமல் திணறி வருகிறார்! ஆட்சி,அதிகாரத்தை சுதந்திர காலம் முதல் மிக அதிகப்பட்சமாக ருசி பார்த்து மட்டும் பழக்கப்பட்ட காங்கிரஸ் ஆட்சி, அதிகாரம் இல்லாமல் எதை தின்றால் பித்தம் தெளியும்' என்ற நிலையில் உள்ளது! 2014 ல் பாஜகவிற்கு மக்கள் கொடுத்த பெரும்பான்மை ஆதரவு வரும் 2019 பாராளுமன்ற தேர்தலில் தொடரும் என்ற உள்நாட்டு, வெளிநாட்டு ஊடகங்களின் கருத்து கணிப்பு கிட்டத்தட்ட காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை பீதி அடைய வைத்து உள்ளது! இந்த கருத்து கணிப்பு காங்கிரஸ் கட்சியினரை சோர்வடைய செய்யும் என்பதால் அதை திசை திருப்ப தற்போது மத்திய அரசு மீது ரஃபேல் ஊழல் என்று வடித்து கட்டிய பொய்க் குற்றச்சாட்டுக்களை திரு.ராகுல் காந்தி கூறி வருகிறார்! ரஃபேல் ஜெட் போர் விமானம் வாங்குவதற்கு பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்துடன் இந்தியா ஒப்பந்தம் செய்து உள்ளது. இதில் இந்தியாவில் ரிலையன்ஸ் நிறுவனத்திடம் உதிரிபாக தயாரிப்பு செய்ய ஒப்பந்தம் செய்து கொள்ள பிரான்ஸ் நிறுவனத்தை மத்திய அரசு நிர்பந்தித்ததாக சொன்ன குற்றச்சாட்டு பொய் என்று பிரான்ஸ் நிறுவனம் விளக்கமும் தந்து உள்ளனர்!*
*இந்தியாவில் ரிலையன்ஸ் மட்டுமே டசால்ட் நிறுவனத்திற்கு கூட்டாளி கிடையாது. ரிலையன்ஸ் போன்று சுமார் 72 நிறுவனங்களுடன் இதுவரையில் டசால்ட் ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது. இவைகள் ஒவ்வொரு நிறுவனமும் ஒவ்வொரு தயாரிப்புகளை டசால்ட் நிறுவனத்திற்கு அளிக்கும். இந்த 72 நிறுவனங்களில் ஒன்று தான் ரிலையன்ஸ் நிறுவனம். ரிலையன்ஸ் தவிர, L & T, Mahindra Group, Kalyani Group, Godrej & Boyce, Tata group இன்னும் பிற நிறுவனகளுடன் ஈடு செய்யும் முதலீட்டிற்கு டசால்ட் நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதில் குறிப்பாக தமிழகத்தில் கோவையை சேர்ந்த 3 நிறுவனங்கள் சுமார் 5 ஆயிரம் கோடி ரூபாய் வரையான உபகரணங்களை தயாரித்து வழங்க போகின்றன. அவை லட்சுமி மில்ஸ் நிறுவனம், ரூட்ஸ் நிறுவனம் மற்றும் கோவை எல் அண்ட் டீ(L & T) ஆகியவை. இவைகள் டசால்ட் நிறுவனத்திற்கு மட்டுமே தயாரிப்புகளை தர வேண்டும் என்று அவசியம் இல்லை. டசால்ட் நிறுவனத்திற்கு தயாரிக்கும் பொருட்களோடு சேர்த்து அவற்றின் சொந்த தயாரிப்புகளையும் மேற்கொள்ள முடியும்.இதோடு சேர்த்து இன்னும் 10 நிறுவனங்களுக்கு மேல் ஒப்பந்தம் பேச டசால்ட் முயற்சித்து வருகிறது. ஜெட் விமான தயாரிப்பு என்பது மிக மிக சவாலானது. ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட விமான உதிரி பாகங்கள், மிகச்சரியான முறையில், நூற்றுக்கும் மேற்ப்பட்ட வெவ்வேறு கம்பெனிகளில் இருந்து பெறப்பட்டு கட்டமைக்கப்படும். இதற்கு உலகம் முழுவதும் உதிரி பாகங்கள் சப்பளை செய்ய நிறுவனங்கள் இருக்கும் போதிலும், ரபேல் ஒப்பந்தத்தின் படி, 50 சதவிகித முதலீடு இந்தியாவில் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதால், டசால்ட் நிறுவனம், இந்திய நிறுவனங்களில் இருந்தே உதிரி பாகங்களை பெற வேண்டும். இதனால், இந்தியாவில் முதலீடு அதிகரிக்கும். புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும், நாட்டின் பெருளாதாரம் மேம்படும் என்பது குறிப்பிடத்தக்கது!(ஒப்பந்த தகவல் தமிழ் கதிர்)*
*காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகளும், ஊடகங்களில் ரஃபேல் விசயம் என்னவென்றே தெரியாமல் கருத்து பதிவு செய்வோரும் ஆணித்தரமாக ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்! பிரதமர் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி சிறப்பு என்பதே ஊழல் இல்லாத சிறந்த நிர்வாகம் என்பதே! இதைத்தான் வருங்காலத்தில் மக்களும் பிரதிபலிக்க இருக்கிறார்கள்!*
*A.M.K.மணிவண்ணன்*
No comments:
Post a Comment