ஓர் அயோக்கியத்தனம்
காங்கிரஸ் ஆட்சியின் போது,
கமல்நாத் என்னும் மத்தியப் பிரதேஷ்காரர், நகர்ப்புற வளர்ச்சி அமைச்சராக இருந்தார்.
இவர் சோனியாவுக்கும், ராகுலுக்கும், மிகவும் வேண்டப்பட்ட மூத்த அரசியல்வாதி.
15-6-2004 ல், இஷ்ரத் ஜஹான் ரஸா என்னும் மும்பையைச் சேர்ந்த, 19 வயதுப் பெண்ணும்,
ஜவீத் குலாம் ஷேக், அம்ஜத் அலி ராணா, ஸீஷன் ஜோஹர் என்னும் மூன்று ஆண்களும்,
குஜராத்தின் அப்போதைய முதல்வர் நரேந்திர மோடியைக் கொலை செய்யப்போன லஸ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் என்று அஹமதாபாத்தில் சுட்டுக் கொல்லப் பட்டனர்.
காங்கிரஸ், இக்கொலைகளைத் திட்டமிட்டு, முதலமைச்சரின் தூண்டுதலின் பேரில், போலீஸ், செய்துள்ளதாகவும்,
இறந்தவர்கள் அப்பாவிகள் (!) எனவும் சொல்லி, மத வெறியைத் தூண்டி விட்டு, பெரும் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இவ்வழக்கு, உச்ச நீதி மன்றம் வரை போய், மோடிஜிக்கும், இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று உறுதி செய்யப் பட்டது.
மோடிஜியை, இந்த வழக்கில் சேர்த்து விட, மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ், ஒற்றைக் காலில் நின்றது நினைவிருக்கலாம்.
அப்போது ஒரு நாள்.....
மத்திய , நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர், கமல்நாத், உள்துறைச் செயலாளர், இணை செயலாளர், “அண்டர் செகரட்டரி” யாக இருந்த,
ஆர் வி எஸ் மணி ஆகியோரைக் கூப்பிட்டனுப்பி, இஷ்ரத் ஜஹான் வழக்கில், மோடிஜியை எப்படியாவது ஒரு குற்றவாளியாக நுழைத்து விடச் சொல்லியிருக்கிறார்.
அந்தக் கோப்பு அப்போது, ஆர் வி எஸ் மணி கையில் இருந்திருக்கிறது. உண்மையான அரசு ஊழியரான, ஆர் வி எஸ் மணி, கமல்நாத்திடம், “அதற்கு எவ்வித ஆதாரமும் கோப்பில் இல்லாத போது, தான் அவ்வாறு செய்ய முடியாது” என மறுத்துள்ளார்.
கமல்நாத்துக்குக் கோபம் பொங்கி வழிந்திருத்திருக்கிறது. அவர், மணியிடம், “ராகுல் காந்தி, இவ்வழக்கில் மோடியை குற்றவாளியாக்கப் பிரியப் படுகிறார்” என்று சொல்லியுள்ளார்.
அப்போதும் மணி மசிந்து கொடுக்க வில்லை. கோபத்தில் கொந்தளித்த கமல்நாத், “ராகுல் காந்தியின் மூத்திரத்தைக் குடிக்க, கியூவில் ஆட்கள் காத்திருக்கும்போது, உனக்கென்ன இவ்வளவு திமிர்?” என்று சத்தம் போட்டுள்ளார்.
மணியும், “உங்களுக்குத் தேவையாக இருந்தால், நீங்கள் குடித்து அதன் ருசியை அனுபவியுங்கள்; எனக்குத் தேவையில்லை” எனத் திருப்பி விட்டுள்ளார்.
கமல்நாத்துக்குச் சாதகமாகப் பேசி “ஜால்ரா” அடித்த, இணைச் செயலாளர், இவரைக் கடிந்து கொண்டுள்ளார். ஆர் வி எஸ் மணி நம்மூர்க்காரர். துணிச்சலாக, நீதியின் பின் நின்றிருக்கிறார். யாருக்கும் பயப்படாமல், தன் கடமையைச் செய்துள்ளார்.
இப்போது, ஆர் வி எஸ் மணி, இவை எல்லாவற்றையும் “புட்டுப் புட்டு” வைக்கிறார். ஒரு கொலைக் கேஸில், தன் அரசியல் லாபத்துக்காக எப்படி அரசின் கோப்புகளில் “கோல்மால்” செய்து, அடுத்த கட்சியின் முதல்வரை- இன்றைய நம் உயிருக்குயிரான பிரதமரை- சிக்க வைக்க ராகுல் காந்தி செயல்பட்டார் என்று பாருங்கள்.
அவர் மூத்திரத்தை எப்படி மூத்த காங்கிரஸ் அமைச்சர்கள் ரசித்துக் குடித்துக் கொண்டிருந்தனர் என்றும் பாருங்கள்.
இன்னுமா நாம் ராகுலை அரசியலில் வைத்திருப்பது? விரட்டி அடிக்க வேண்டாமா!
சத்தியம் எப்படியும் வெல்லும். ஜெய் ஹிந்த்.
No comments:
Post a Comment