Thursday, 8 November 2018

சபரிமலைக்கு பெண்கள் போகலாமா?'*... *

அனைவருக்கும் வணக்கம்.'
*சபரிமலைக்கு பெண்கள் போகலாமா?'*...

*பொதுவாக இன்று எல்லோரும் மாற்றங்கள் வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் ஆனால் நிறைய ஏமாற்றமே சந்திக்கின்றனர் ஏன்?*....
ஒருசில உருவம் உருமாறினால் ஏமாற்றமே....

ஓர் கண்ணோட்டம்....

அன்புடன் *NTN சுந்தரமூர்த்தி கந்தன்குடில் நடேசன்*....

என்பதைப் பற்றி பல சர்ச்சைகள் ஓடிக் கொண்டிருக்கிறது.
போகலாம் என்றோ போகக்கூடாது என்றோ நான் எழுத போவதில்லை.காரணம் அதைப்பற்றி நிறைய பேர்கள்..அறிவியல் பூர்வமாகவும்,ஆன்மீக ரீதியாகவும்,நடைமுறையில் நடப்பதைப் பற்றியும் பேசி விட்டார்கள்.
சரி,விசயத்திற்கு வருவோம்."ஆண்கள் பெண்களென்று வேறுபாடு பாக்காதீர்கள்.மற்ற ஆலயங்களுக்கு பெண்களை அனுமதிக்கிற மாதிரி சபரிமலையிலும் அனுமதிக்க வேண்டும்" என்று சிலர் கூறுகிறார்கள்
உண்மையாக,பரிசுத்தமாக ஐயப்பனை நினைத்து விரதமிருக்கும் பல ஆண்களைப் பற்றி சொல்கிறேன்.தன் கழுத்தில் மாலை அணிந்தவுடன் தன் மனதில் ஐயப்பன் இருக்கிறார் என்று,முழுமனதுடன் ஐயப்பன் என் உடலில் இருக்கிறார் என்று ,தன் மனைவியிடம் இருந்து தள்ளி படுத்து,சைவமாக சாப்பிட்டு ,அதிகாலையில் எழுந்து குளிர்ந்த நீரில் குளித்து ஐயப்பனுக்கு நெய்வேத்தியம் செய்து வழிபாடு செய்து,தெய்வ பாடல்களையும்,பக்தி படங்களை மட்டுமே பார்ப்பார்கள்.காரணம் திரைப்படங்களின் மூலமாக கூட தன்னுடைய சிந்தனை சிதரக்கூடாது என்பதால்தான்.அவர்களுடைய  மனைவியும், தன் கணவன் அணிந்திருக்கும் ஐயப்ப சுவாமியின் மாலைக்கு மதிப்பு கொடுத்து ,சாமி என்று அழைப்பார்கள்.உறவுகளின் பேரில் சிந்தனை சிதறக்கூடாது என்பதால் அனைவரையும் சாமி என்றுதான் அழைப்பார்கள்.சிலர் வேலைக்கு செல்வதால் வேறு வழியில்லாமல்,ஐயப்பனிடம்  தன் பிழையை மன்னிக்குமாறு கேட்டு.. காலணிகளை அணிந்து செல்வார்கள்.மதுபழக்கம்,புகைப்பழக்கம் உடையவர்களாக இருந்தால்,அதையும் விரதத்தில் தன்னை கட்டுப்படுத்திக்கொண்டு,அத்தவறுகளையும் செய்யாமல் இருப்பார்கள்.இந்த விரதத்தில் இருப்பவர்கள் யாரையும் குறைக் கூறக்கூடாது.யாருக்கும் தீங்கு நினைக்கக் கூடாது.மிக மிக கடினம் இந்த ஐயப்ப விரதம்.

இந்த விரதத்தை கடைப்பிடித்து,ஆர்வமாக சபரிமலைக்கு செல்லும்போதும்..தன் உறவுகளிடம் இருந்து விடைப்பெறும்போதும் ஐயப்பனை மட்டுமே நம்பி அவரை பிராத்தனை செய்துக்கொண்டு மலைக்கு செல்கிறார்கள்.இங்கே அவர்களது உறவுகள் மலைக்கு சென்றவர் நல்ல படியாக வீட்டிற்கு திரும்பி  வர வேண்டும்  என்று ஐயப்பனின் விளக்கு அணையாமல் அவரிடம் பிராத்தனை செய்துக் கொண்டிருப்பார்கள்.பல மிருகங்கள் வாழும் ,கற்கள் முற்கள் நிறைந்த அந்தக்  காட்டு பகுதியில் ,..ஐயப்பனின் பாடல்களையும் அவரது நாமத்தையும் சொல்லிக்கொண்டே தங்களது தலைக்கு மேலே இருக்கும் இருமுடியை தாங்கி தங்களது நேர்த்தி கடனை செலுத்த போவார்கள்.

காலகாலமாக இப்படிதான் செய்து கொண்டிருக்கிறார்கள்.ஆண்கள் மட்டும்,விரதம்,இருமுடி, காட்டு பயணம் இப்படியே ஒரே மாதிரி போய் கொண்டிருந்த வரை அனைத்தும் நல்லதாகவே தான் போய் கொண்டிருந்தது.இப்பொழுது  பெண்களும் போகலாமே ..?என்று புது சர்ச்சை உருவாகி உள்ளது.

இப்பொழுது போய் கொண்டிருக்கும் கோவிலுக்கே சில பெண்கள்  சரியாகவும் முறையாகவும்  உடுத்திக் கொண்டு போகிறார்களா?
'ஆலயத்திற்கு வருகிற மற்றவர்களின் இறை சிந்தனையை கலைக்க கூடாது.முறையாக  உடுத்திக்கொண்டு போகனும் என்று எத்தனை பெண்கள் நினைக்கிறார்கள்?கோவிலுக்கு செல்லும் பொழுது,மாராப்பு போட வேண்டும் என்று எத்தனைப் பேர் நினைத்து உள்ளார்கள்.சுடிதார் போட்டால் உங்கள் துப்புட்டாவை முன்னுக்கு முழுமையாக போட்டு மூட வேண்டும்.புடவைக் கட்டினால்  உங்களை கையெடுத்து கும்பிடுவது போல் புடவையை உடுத்தனும்.பலப்பேர் துப்புட்டாவே இல்லாமல் கோவிலுக்கு செல்கிறார்கள்.
பலர் கோவிலுக்கு செல்வதே..அழகாக மேக்கப் போட்டுக்கொண்டு தன்னுடைய உடலை காட்டுகிற உடையை உடுத்திக் கொண்டுதான் ஆலயத்திற்கே செல்கிறார்கள்.ஆலயம் என்பது பக்திக்காக மட்டும்தான்.அங்கு வேறு எதுக்கும் இடமில்லை.அப்படி இருக்க..சபரி மலைக்கு மட்டும் பெண்கள் முறையாக உடுத்தி விடுவார்களா?கடினமான விரதத்தை  கடைப்பிடித்து செல்லும் ஆண்களின் கவனத்தை திசை திருப்பலாமா?
நீங்கள் கேட்கலாம்..."ஏன் அவர்கள் எங்களைப் பார்க்க வேண்டும்?அவர்களது நேர்த்திக் கடனின் மீது அவர்கள் எண்ணம் இருக்கலாமே ?" என்று. அர்த்தமற்ற பேச்சை விட்டுவிட்டு அறிவு பூர்வமாக சிந்திப்போம்.   சில பெண்கள் எதற்காக ஆலயத்திற்கு வருகிறார்கள் என்றே தெரியவில்லை.கோவிலின் உள்ளே வராமல் தன் தோழிகளுடன் சேர்ந்து அரட்டை அடித்துக் கொண்டு ,வருகிற ஆண்களைப் பார்த்து சிரித்துக் கொண்டும் இருக்கிறார்கள்.இது நான் பலதடவை கண்ணால் பார்த்த விசயம்.ஆண் பிள்ளைகளும் இந்த தவறை செய்கிறார்கள்.  கோவிலை கோவிலாக மதித்து இருந்தால் மற்ற கோவில்களில் சரியாக நடந்து இருப்பார்களே?ஆலயத்திற்கு சென்று கைத் தொலைப்பேசியில் செல்ப்ஹி எடுப்பது,தேவையில்லாத கதைகள் பேசுவது போன்ற செயல்களை எல்லாம் தடுக்க முடியாத விசயமாக இருக்கிறது.

விரதம் எடுக்காத ஆண்கள் ,பெண்கள் அனைவரும் போகலாம் என்று அனுமதித்தால்..மற்ற கோவிலில் நடக்கும் செயல்கள் யாவும் அங்கேயும் நடக்கும்.சிலருக்கு கோவில் என்பது  சுற்றிப்பார்க்கும்  இடம்.நாளடைவில் சபரி மலையும் சுற்றுப்பிராயணம் இடமாக ஆகி விடும்.ஆண்கள்  உடல் அளவில் பலமானவர்கள்.அந்தக் காட்டு பகுதியான மலையை கடக்கும்போது அவர்களுக்கு அவ்வளவு கடினமாக இருக்காது.அப்படியே அவர்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றாலும் ஆண்களுக்குள் சமாளித்துக் கொள்வார்கள்.ஆனால் பெண்கள் அப்படி அல்ல.ஏதாவது ஆபத்து நேரிட்டால்,அவர்கள் உங்களை பார்ப்பார்களா..அல்லது தன்னுடைய நேர்த்திகடனை செலுத்துவார்களா?

எத்தனையோ விசயத்திற்கு இன்றைய ஆண்கள் பெண்களுக்கு சுதந்திரத்தையும்,முழு உரிமையும் தருகிறார்கள்.இந்தஒரு விசயத்தில் அவர்களுக்கு தொல்லைகள் தராமல் இருந்தாலே போதும்.அவர்கள் நிம்மதியாக தங்களது நேர்த்தி கடனை செலுத்த விடுங்கள்.பயம்,பக்தி இருந்த வரை எல்லாம் நன்றாகதான் போய் கொண்டிருந்தது.என்றைக்கு..பயமும் பக்தியும் இல்லாமல் போனதோ..அனைத்தும் போய்விட்டது.சில விசயம் நாத்திகம் பேசி கெடுத்தனர்.சிலர் பகுத்தறிவு பேசி சில விசயங்களை மாற்ற நினைத்தனர்.சிலர் நாகரிகம் என்ற பேரில்  அட்டூழியம் செய்கிறார்கள்.
சில விசயம் மாறாமல் இருப்பதே சிறப்பு.யோசித்துப் பார்த்தால் உண்மை விளங்கும்.

ஆண்கள் செய்யும் அனைத்தும் நாங்களும் செய்வோம் என்று திமிராக பேசும் பெண்களே..ஆண் ஆண்தான்.பெண் பெண்தான்.ஆண்கள் நம்மை மதிப்பதும் மதிக்காததும் நாம் நடந்துக் கொள்வதில்தான் இருக்கிறது.
அறிவாலும் சிந்தனையாலும் சாதித்து காட்ட நிறைய விசயங்கள் இருக்கிறது.நன்றாக போய் கொண்டிருப்பதை மாற்ற வேண்டும் என்று கெடுத்து விவாதம் செய்து அவமானத்திலும்,துயரத்திலும் விழ வேண்டாம்....
நன்றி....

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...