Thursday 8 November 2018

தெரிந்த பெயர் - பலருக்கு தெரியாத விவரங்கள் : Raja Hariharan H. ராஜா. த

🚩🚩
தெரிந்த பெயர் - பலருக்கு தெரியாத விவரங்கள் : Raja Hariharan H. ராஜா.

தஞ்சாவூருக்கு அருகில் ஒரு சிறிய கிராமத்தில் (மெலட்டூர்) 1957 செப்டம்பர் 29 (இந்த 60 வயது இளைஞன்) இல் பிறந்தார்.
இவரது தந்தை ஹரிஹரன் சமஸ்கிருத மேதை.

காரைக்குடியின் அழகப்பா ஆரம்பப் பள்ளியில்  ஆரம்ப கல்வி பயின்றார்.

பின்னர் மதுரை காமராஜ் பல்கலைக் கழகத்திலிருந்து பட்டம் பெற்றார்.

அவர் அரசியலில் நுழைவதற்கு முன்பு ஒரு வழக்கறிஞர் மற்றும் பட்டய கணக்காளர் ( Chartered Accountant) போன்றவற்றில் தேர்ச்சி பெற்றார்.

அவர் தன்னை ஒரு விவசாயி என்றும் கூட பெருமிதத்தோடு அறிமுகப் படுத்திக் கொள்வார்.

1989 இல் பா.ஜ.க வில் இணைவதற்கு முன்பு தமிழ் நாட்டில் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங் (ஆர்எஸ்எஸ்) அமைப்பில்  மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த ஒரு சிலரில் முதன்மையானவர்.

கட்சி பொறுப்புகளை 1991 ல்  தொடங்கி மாவட்ட அமைப்பாளர், மாநில செயலாளர், மாநில பொதுச் செயலாளர், பின்னர் தேசிய செயலாளர் என்று அடுத்தடுத்து பாஜக வில் பல பொறுப்புகளை சிறப்பாக  நிர்வகித்துள்ளார்.

2001-2006 ஆண்டுகளில் காரைக்குடி தொகுதியில் இருந்து தமிழ்நாடு சட்டமன்றத்துக்கு  தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்திய ரயில்வேயின் பயணிகள் வசதிக் குழுவின்  தலைவராக  எச்.ராஜா  பயணிகளின் குறைகளை போக்குவதற்காக பயணிகள் தூய்மை, சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய பெரும் முயற்சிகள் மேற்கொண்டார்.

தமிழ், தெலுங்கு, குஜராத்தி, ஒரியா போன்ற பிராந்திய மொழிகளில் பயணிகள் ரயில் டிக்கெட் அச்சடிக்கப்படுவதற்கு  இந்த குழுவின்
முயற்சி முக்கிய காரணம்.

தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் தேச ஒற்றுமையை குலைக்கும்   அரசியல்வாதிகளுக்கு  எதிரான  தேசபக்தி எழுச்சிக்கு தமிழ்நாட்டில் ஒரு முக்கிய தலைவராக  எச்.ராஜா தனி முத்திரை பதித்துள்ளார்.

பல முறை அரசியல் எதிரிகளை பற்றிய அவரது தைரியமான மற்றும் ஆவேச உணர்ச்சி விமர்சனங்கள் அவரை  சட்டத்தின் தவறான பக்கத்தில் இறக்கிய தருணங்களும் உண்டு.

ஈ.வி.ரமசாமி நாயக்கர் போன்ற இந்து மத எதிர்ப்பாளர்களையும், தேச விரோத கருத்துக்கள், விஷ வித்துக்கள் விதைக்கும்  முஸ்லிம்களையும், கிறிஸ்தவர்களையும் அவர்கள் சார்ந்த  இயக்கங்களையும் தாக்கி இவரகூறிய கருத்துக்களுக்காக  அவர் மீது   வழக்கு பதிவு செய்யப்பட்ட காலங்களும் உண்டு.

ஆனால் இவை எவற்றுக்கும் அஞ்சாமல் இவர் தன் அரசியல் பாதையில் பயணிக்கிறார்.

இவரது சமீபத்திய ஆலயமீட்பு இயக்கம் இந்துத்வத்தை தமிழ்நாட்டில் மீண்டும் உயிர் கொடுத்து உத்வேகத்துடன் எழுச்சியடய எடுக்கப்பட்டுள்ள முக்கிய முயற்சி.

இவர் தன் அரசியல் அத்தியாயத்தில் தேச நலனுக்காக, இந்து மக்கள் எழுச்சிக்காக பல பொன்னேடுகள் பதிக்க  வாழ்த்துக்களுடன்

நட்புடன் mg 🚩🚩

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...