Thursday, 8 November 2018

பிரதமர் மோடி பங்கேற்ற பா.ஜ. பொதுக்கூட்டம் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது.

போபால்: ம.பி.யில் ., பிரதமர் மோடி பங்கேற்ற பா.ஜ. பொதுக்கூட்டம் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது.

மத்திய பிரதேச மாநிலத்திற்கு இந்தாண்டு இறுதியில் சட்டசபைதேர்தல் நடக்க உள்ளது. மீண்டும் ஆட்சியை பிடிக்க பா.ஜ. வியூகம் வகுத்து வருகிறது. இந்நிலையில் நேற்று தலைநகர் போபால் ஜம்போரீ நகரில் பிரதமர் மோடி தலைமையில் மெகா பொது கூட்டம் நடந்தது. இதில் பா.ஜ. தேசிய தலைவர் அமித்ஷா , ம.பி. முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த மெகா கூட்டத்திற்கு லண்டனை தலைமையிடமாக கொண்ட உலக சாதனை புத்தக அமைப்பைச் சேர்ந்த 15 பேர் கொண்ட குழுவினர் ஆய்வு செய்ய வந்தனர். அவர்கள் நடத்திய ஆய்வில் கூட்டத்தில் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர் எனவும், 45 எல்.இ.டி. திரைகள், ஹெலிகாப்டர்கள் இறங்கும் 5 தளங்கள், ஒரு லட்சம் சதுர அடியில் அமைந்த கண்காட்சி அரங்கம், 26 ஹெக்டேர் நிலபரப்பில் அமைந்த வாகனங்கள் நிறுத்துமிடம் மற்றும் 1,580 கழிவறைகள் அமைக்கப்பட்டு இருந்தன எனவும் கூறப்பட்டது.

இதையடுத்து உலக சாதனை புத்தகத்தில் இந்த மெகா பொது கூட்டம் இடம் பிடித்தாக அறிவித்து அதற்கான சான்றிதழை முதல்அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் மற்றும் அக்கட்சியின் மாநில தலைவர் ராகேஷ் சிங் ஆகியோரிடம் வழங்கியதாகவும், தககவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...