"குமரி நாடார்கள் சாதியக்கொடுமையால் பாதிக்கப்பட்டார்கள். எனவே நாடார்கள் ஒன்றிணைவோம்" !
இப்படி ஒரு குரூப் கொஞ்ச நாளாக கிளம்பியிருக்கு.
அதாவது "நாடார் பிஷப், குமாரதாஸ், ஜாண்ஜாக்கப், சீமான், ராதாகிருஷ்ணநாடாா், தினதந்தி, வைகுண்டராஜன், மோகன்சிலாசர், பால்தினகரன், வசந்தகுமாா் குமார் வாழ்க" .
இந்த கோஷம் சாதிபற்றில் வந்த கோஷம் என நினைத்தால் அது முட்டாள் தனம். இந்து ஒற்றுமைக்கு விடப்பட்டிருக்கும் பிரம்மாஸ்திரம் என்பதே நிசர்சனமான உண்மை.
குமரி நாடார்கள் சாதியக்கொடுமையால் பாதிக்கப்பட்டார்கள் என்பது உண்மை தான். இது நாடார்களுக்கு மட்டும் பொருந்தாது. நாடார்களை விட மோசமாக பாதிக்கப்பட்ட பல சாதிகள் உண்டு. அந்த சாதிகள் பட்ட கொடுமைகள் சபையில் ஓங்கி ஒலிக்காதிருக்க காரணம், அந்த பிரிவினர்கள் எண்ணிக்கையில் சிறுபான்மையினராக இருப்பர், அல்லது அந்த சாதி ஒட்டு மொத்தமாக கிருத்தவத்தை தழுவியிருக்கும். உதாரணத்திற்கு மீனவர்கள்! நாடார்கள் பட்ட துயரங்கள் ஏன் முன்னிலை படுத்தப்படுகிறது எனில், மிஷனரிகளால் நாடார்களை இன்னும் முழுமையாக மதமாற்றம் செய்ய முடியவில்லை என்பதும், அவர்களது எண்ணிக்கையும்.
அதற்கு வசதியாக கிருத்தவத்தின் CSI என்னும் பிரிவை முழுக்க முழுக்க மதம் மாறிய நாடார்கள் மட்டும் இருக்கும் வகையில் பிற சாதியினர் அந்த CSI பிரிவிலிருந்து வெளியேறும் வகையில் திட்டமிட்டு செயல்வடிவம் கொடுக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் நாடர் சமுதாய மதமாற்றம் இன்னும் எளிமைப்படுத்தப்படும். அதாவது அந்த கிறித்தவ பிரிவில் எந்த சர்ச்சிலும் "ஒரே சாதி பங்கு மக்கள், பங்கு தந்தை, பிஷப்"!
அந்த அஜெண்டா நிறைவேறும் வரை, "நாடார்கள் ஒன்றிணைவோம்" என்னும் கோஷம் மிஷனரிகள் மூலம் எழுப்பப்பட்டு கொண்டே தான் இருக்கும்.
இப்போது இதை கையில் எடுத்து பிரச்சனையாக்குவது யாரெனில் , 99% கிருத்தவ மதம் மாறிய நாடார்கள்தான். காரணம் குமரியில் இந்துத்துவம் அசைக்க முடியா சக்தியாகவும், கிருத்தவ மதமாற்றத்தின் வேகம் சமீப காலங்களில் குறையவும், காரணம் மதம் மாறாத இந்து நாடார்கள், இந்துத்துவ குடைக்குள் நுளைந்ததே! பா.ஜ.க-வை வீழ்த்த மிஷனரிகள் எடுத்திருக்கும் கடைசி ஆயுதம் இது.
கொஞ்சம் சிக்கலான விசயம் தான் இது. காரணம் மத அரசியலை விட ஜாதி அரசியலுக்கு வீரியம் அதிகம்!
இந்தியாவில் ஒவ்வொரு சாதியும் ஒவ்வொரு காலகட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு எந்த சாதியும் விதிவிலக்கல்ல. அன்றைய கேரளாவில் கிருத்தவர்களால் மதமாற்றத்திற்கு ஹரிஜன மக்களும், தாழ்த்தபட்டதாக கூறப்பட்ட மக்களும் இலக்கு எனில், மலபாரில் ஹைதர் அலி , திப்புவின் படைகள் மதம் மாற்ற இலக்கு வைத்து வேட்டையாடியது, நம்பூதிரிகளையும், பிராமணர்களையும்!
திருவிதாங்கூர் சம்ஸ்தானத்தில் அதிகபட்ச தண்டனை யாருக்கு தெரியுமா? பிராமணனுக்கு தான்!
காராணம் பிராமணனுக்கு கொடுத்திருக்கும் சலுகைகள், அந்த காலகட்டத்தில் பிற சாதியினருக்கு இல்லை. அதனால் தண்டனைகளும் பிற சாதியினரை விட கடுமையானதாக தான் இருந்தது.
பிராமணன் மீது குற்றச்சாட்டு எழுந்தால் அவன் கொதிக்கும் எண்ணெயில் கையை விட்டு நிரூபிக்க வேண்டும் என ஒரு முட்டாள் தனமான சட்டம் இருந்தது. அது வேறு எந்த சாதிக்கும் கிடையாது. இந்த நடைமுறைக்கு பயந்து சுசீந்திரம் கோயில் கோபுரத்தின் மீதிருந்து அந்த கோயில் பூசாரி தற்கொலை செய்த பின்னர் தான், அந்த சட்டம் பிற்காலத்தில் நீக்கப்பட்டது.
ஒரு காலத்தில் நாடார், சாணார் என இருந்த சமூகம் இப்போது நாடார் என்னும் ஒரே குடையின் கீழ் வந்துள்ளனர். முன்பு நாடார் வீட்டுக்குள் ஒரு முக்குவனோ(மீனவன்), பறையரோ , பரவரோ நுழைய முடியுமா?
ஆனால் இந்துத்துவத்தின் வீச்சில் இப்போது இது மாறியுள்ளது. காரணம் இந்துக்கள் என்னும் ஒரே புள்ளியில் இணைந்துள்ளோம். சமீபத்தில் எனக்கு நெருங்கிய குடும்ப நண்பர் மகளுக்கு, எனது நண்பர் மகனுடய ஜாதகம் கேட்டேன். ஆனால் குடுக்கமாட்டேன்னுட்டாங்க. காரணம் பெண் வீட்டார் சிவகாசி, மாப்பிள்ளை வீட்டார் குமரி!. ரெண்டு பேருமே வசதி, படிப்பு, எல்லாம் இருந்தும், அவர்கள் மறுக்க காரணம் "அவங்க வேற, நாங்க வேற"ன்னு பதில் வருது.
தட்சனின் மரபுவழியில் வந்து, தனது முப்பாட்டனான தட்சனையும்(சுடலைமாடன்), அவனது மகள் சக்தியையும்(பத்ரகாளி) வணங்கும், குமரியின் ஒரு இந்து நாடார், ஒரு கிருத்தவ நாடாரோடு சம்பந்தம் வைத்து மதம் மாறி, தனது முப்பாட்டன் சுடலையாண்டியையும், பத்ரகாளியையும் "சாத்தான்" என கூற தயங்குவதில்லை. ஆனால் அதே பத்ரகாளியை வணங்கும் ஒரு விருதுநகர் இந்து நாடார், ஒரு அதே பத்ரகாளியை வணங்கும் குமரியின் இந்து நாடாரோடு திருமண உறவு கொள்ள எதற்கு தயக்கம்? முதலில் இதை மாற்றுவோம்.
முன்பெல்லாம் குமரியில் வேறு சாதியில் கல்யாணம் பண்ணுனால் ஊரைவிட்டு ஒதுக்கி வெச்சுடுவாங்க. ஆனால் சமீப காலமாக , எந்த சாதியாக இருந்தாலும், இந்துவாக இருந்தால் அந்த ஊரில் ஏற்றுக்கொள்ள பல ஊர்களில் தீர்மானம் போட்டிருக்காங்க. அப்படி தீர்மானம் போடப்பட
்ட ஊர் பெயர்களை கூட என்னால் சொல்ல முடியும். வேறு மதத்தில் இருந்து காதல் திருமணமானால் கூட இந்துவாக அந்த ஊர் கோயிலுக்கு போய் வழிபட தயார் எனில், அந்த மணமக்களை ஏற்றுக்கொண்டு ஊர் வரியில் சேர்த்துக்கொள்கிறார்கள். 30 வருடங்களுக்கு முன் ஒரு பிராமண பெண்ணை திருமணம் செய்ததற்கே ஊரை விட்டு நீக்கிய கொடுமையை நான் பார்த்தது உண்டு. ஆனால் இப்போது இவ்வளவு மாற்றம். இது இன்னும் மாறும் . தயவு செஞ்சு கிருத்தவ நாடார் கும்பல் சதிக்கு பலியாக வேண்டாம்.
"நாங்கள் நாடார்கள்" என கர்வமாக இருங்கள். ஆனால் ஏசுவை ஏற்றுக்கொண்டு நாடார் என சொல்லாதீர்கள். முடிந்தால் "நாடார் என்னும் வார்த்தை இந்துக்களுக்கே உரியது" , அதை மதம் மாறியவர்கள் பயன்படுத்தக்கூடாது என வழக்கு போட்டு, அந்த வார்த்தையை கிருத்தவ புல்லுரிவிகளிடமிருந்து மீட்டெடுங்கள்.
என் நோக்கம் கிருத்தவ மிஷனரி கூட்டத்திற்கு பலியாகிடாதீங்க என்னும் ஆதங்கம் தான் ||
No comments:
Post a Comment