"Cashless" - வந்தா?
நாங்க எப்படி ஊழல் செஞ்சு கத்தை கத்தையா குடோன்ல பதுக்க முடியும்? பதுகினாதான எங்களுக்கு ஓட்டுப் போட மக்களுக்கு பிச்சை போட முடியும்?, சரக்கு, பிரியாணி வாங்கித்தர முடியும்? அரசியல்வியாதிகள்!- கேள்வி?
"Cashless" வந்தா?
நாங்க எப்படி NO - 2 Bill போட்டு அடிக்கற காசையெல்லாம் பதுக்கி வைக்க முடியும்?- மணல் குவாரி கொள்ளையர்கள்(சேகர் ரெட்டிகள், ஆறுமுகசாமிகள்) கேள்வி?
"Cashless" வந்தா?
நாங்க எப்படி வரிகட்டாம ஏமாத்த முடியும்?- பெரும் நகைக்கடை, ஜவுளிக்கடை, ஷாப்பிங் மால் வியாபாரிகள் கேள்வி?(90% க.பணம்தான்)
"Cashless" வந்தா?
நாங்க எப்படி சினிமா எடுக்க முடியும்?, கருப்புல சம்பளம் குடுங்க முடியும்? பிளாக்ல டிக்கெட் விக்க முடியும்?- சினிமா நடிகர்கள் , தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் கேள்வி?
"Cashless" வந்தா?
நாங்க எப்படி பிக்பாக்கெட் அடிக்க முடியும், வழிப்பறிபண்ண முடியும்?- பிக்பாக்பாக்கெட் கேடிகள், ராபரி ரெளடிகள் -கேள்வி?
"Cashless'' வந்தா?
நாங்க எப்படி ஆள் கடத்தி காசு கேட்க முடியும் அக்கவுண்ட்லயா போடச்சொல்ல முடியும்?-ஆள் கடத்தி பணம் பறிக்கும் கும்பல் கேள்வி?
கடைசியாக -
"Cashless" வந்தா?
எங்களுக்கு அதப்பத்தி விபரம் தெரியாதே? பழக்கமில்லையே? Card Swipe பண்ணத் தெரியாதே?
ஏழை மக்கள், கிராமங்களில் வாழும் மக்கள் கேள்வி?
அதெல்லாம் கூட நாம் விரைவில் கற்றுக் கொள்ள முடியும், ஒருவருக்கொருவர் கற்றுக் கொடுக்க முடியும் - ஒன்றிரண்டு முறை பழகினால் போதும் பழக்கமாகிவிடும் - இதற்கு நாம் பயந்தால் - மேலே இருக்கும் திருடர்கள் திருடிக்கொண்டே தான் இருப்பார்கள் - வரி கட்ட மாட்டார்கள், ஊழல் செய்வார்கள் -
அதற்காகவேனும் மக்களே!
"Cashless" வேணும் -
#நவம்பர்8_கருப்புப்பண_ஒழிப்புநாள்
தேசப்பணியில் என்றும் -
ந.முத்துராமலிங்கம் -
No comments:
Post a Comment