#பாலசுப்பிரமணியன்பிகே
பட்டேல் சிலைக்கு ஒரு ஓ போடுங்க.. !
ஜெய்ப்பூர் சிட்டி பேலஸ், உதய்பூர் சிட்டி பேலசுக்கு லாம் ஒரு நபருக்கு 300 ரூபாய், 350 ரூபாய் னு டிக்கெட் வசூல் செய்வதை போல் எல்லாம் ரோட்டில் பலர் பார்ப்பதை போல் வைக்கும் சிலைக்கு வசூல் செய்ய முடியுமா னு.
சரி... 350 ரூபாய் கொடுத்து பார்க்கற அளவு அந்த சிலைல அப்படி என்ன இருக்கு அதோட உசரத்தை தவிர அப்படி னு பார்த்தால் அது வெறும் 597 அடி உசர சிலை மட்டும் இல்லையாம் .
அந்த சிலைக்கு கீழே உள்ள நுழையறதுக்கு னு ஒரு எண்ட்ரன்ஸ் இருக்காமாம்
அது உள்ளாற நுழைஞ்சி போனால் ,
சும்மா 600 அடி உசரத்துக்கு நம்ப லிப்ட் ல போவோமாம் அப்படி போயி அந்த உசரத்துல நின்னுண்டு சர்தார் சரோவர் அணைகட்டு மாதிரி பல இயற்கையான காட்சிகளை நம்ப கண்டு களிப்போமாம்
அது மட்டும் இல்லையாம் அந்த சிலை உள்ளார
அணைத்து மாநில மக்களுக்குமான விருந்தினர் விடுதிகள், 250 படுக்கை அறை கொண்ட தங்கும் அறைகள்
அப்புறம் பழங்குடி இனமக்களின் அருங்காட்சியகம், அவர்களின் உற்பத்தி சந்தை, மலர் கண்காட்சியகம்.
இதை தவிர மிக பெரிய கம்யூனிட்டி ஹால்.
3D projector னு இம்புட்டு விஷயம் அந்த ஒரு சிலையின் உள்ளே இருக்காமாம்.
அட நல்லா தான இருக்கு.
வெறுமன 597 அடி உசர சிலை பண்ண 3 ஆயிரம் கோடி னு சொல்லி இந்த மீம் கிரியேட்டர்ஸ் தான் நம்பளை குழப்பி விட்டாங்க னா பல செய்தி தொலைக்காட்சிகளும் தப்பான தகவல்களை சொல்லி அங்கே இல்லாத தமிழ் எழுத்தை இருப்பதாக சொல்லி ரொம்ப confuse.... பண்ணி விட்டாங்களே.
ஒரு நபருக்கு 350 ரூபாய் இதற்கு ஒர்த் தான்.
மேலும் இதன் மூலம் பழங்குடி இனமக்களுக்கு நல்ல வாழ்வாதாரத்தை, வருமானத்தை ஏற்படுத்தி இருக்கும் குஜராத் அரசை பாராட்டாமல் இருக்க முடியாது.
ஷாஜகான் தாஜ் மகாலை கட்டிய பொழுது ஷாஜகானின் மகன் அவுரங்கசீப் என்ன? செய்தான்.
மக்கள் பணத்தை வீணடித்து அதில் தாஜ் மகாலா னு சொல்லி பெத்த அப்பனையே தாஜ் மகால் அருகே உள்ள சிறைச்சாலையில் அவுரங்கசீப் சிறை வைத்தான்.
சிறையில் இருந்த படியே நீ தினமும் தாஜ் மகாலில் இருக்கும் உன் பொண்டாட்டியை பார் னு நக்கலா அவுரங்கசீப் சொன்னான்.
ஆனால் தாஜ் மகால் கட்டப்பட்டது வீண் செலவா என்றால் அதான் இல்லை.
ஒரு நாளைக்கு சராசரியாக 40 ஆயிரம் பார்வையாளர்கள் தாஜ் மகாலை பார்க்கிறார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் 70 கோடி ரூபாய் வருமானத்தை அந்த தாஜ் மகால் மட்டும் நமக்கு தந்து கொண்டிருக்கிறது.
தாஜ் மகால் எண்ட்ரன்ஸ் டிக்கெட் 50 ரூபாய் ஆனால் இந்த பட்டேல் சிலை எண்ட்ரன்ஸ் டிக்கெட் 350 ரூபாய்.
350 ரூபாய்க்கான காரணம். 600 அடி உசரத்தில் இருந்தபடி மொத்த ஊரையும் பார்க்கும் அந்த ஏரியல் வியூ அப்புறம் உள்ளே இருக்கும் மியூசியம், 3D மூவி, பொருட்காட்சி, கண் காட்சி னு இவ்ளோ விஷயங்கள் இருக்கு.
அதனால் இந்த 350 ரூபாய் ஒர்த் தான். தாஜ் மகாலுக்கு ஒரு நாளைக்கு 40 ஆயிரம் பேர் வராங்க.
அதே 40 ஆயிரம் பேர் இதற்கும் வருகிறார்கள் னு வெச்சிப்போம். அப்படி ஒரு நாளைக்கு 40 ஆயிரம் நபர்கள் தலைக்கு 350 கொடுத்து இந்த பட்டேல் சிலையை பார்த்தார்கள் என்றால் ஒருநாள் வருமானம் மட்டுமே ஒரு கோடியே 40 லக்ஷம் வெறும் டிக்கெட் கலெக்ஷனில் மட்டும்.
அப்ப ஒரு ஆண்டுக்கு 529 கோடி 5 ஆண்டுக்கு 2645 கோடி. ஆக வெறும் டிக்கெட் வசூலில் மட்டும் 5 ஆண்டுகளில் 2645 கோடி அதை தவிர்த்து இந்த சிலை அருங்காட்சியகம் உள்ளே உள்ள பொருட்காட்சியில் பலர் பல்வேறு பொருட்களை வாங்குதல் இந்த சிலை அருங்காட்சியகத்தை சுற்றி இருக்கும் பகுதிகள் வியாபார கேந்திரமாக மாறுதல் இப்படி பல நல்ல விஷயங்கள் இந்த இரும்பு மனிதர் சிலைக்குள் இருக்கு.
இனிமேல் நாம் டிவியில் வரும் செய்திகளை கூட தீர விசாரித்த பின்பே நம்ப வேண்டும்.
இந்த பட்டேல் சிலை Made In China னு வாட்ஸ் அப் விஞ்ஞானிகள் மட்டும் கம்பு சுத்தல நான் பெரிதும் மதிக்கும் சில, பல பிரபல ஆங்கில பத்திரிகைகள், தொலைக்காட்சிகளிலும் இந்த பொய்யான செய்தி வந்தது.
உண்மையில் இந்த பட்டேல் சிலையை செய்தவர்
பத்மஸ்ரீ விருது வாங்கிய ராம் வாஞ்சி சுதர் என்கிற விஸ்வகர்மா.
ஒரு இந்தியர் செய்த சிலையை சைனா காரங்க பண்ண சிலை னு வாய் கூசாமல் பல தொலைக்காட்சிகள், பத்திரிகைகள் சொன்ன பொய்யை நம்பி பதிவு போட்டேன்.
ஆனால் இதுபோல் பொய்யான செய்திகளை வெளியிட்ட பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் லாம் மன்னிப்பு கேட்டாச்சா?
குறைந்த பக்ஷம் இவ்வாறு பொய்யான செய்திகளை வெளியிட்ட ஊடகங்களை மத்திய அரசால் மன்னிப்பு கேட்க வைக்க தான் முடியுமா?
இரும்பு மனிதர் பட்டேலுக்கு Songadh டில் உருவாக்கிய சிலை மூலம் அந்த மண்ணை பெரிய வியாபார கேந்திரமாக, வளம் கொளிக்கும் பூமியாக மாற்றி இருக்கும் குஜராத் அரசிற்கு என் வாழ்த்துக்கள். 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் உழைப்பு, 14 கும் மேற்பட்ட என்ஜினீயர்சின் மூளையை கொண்டு உருவான உலகிலேயே பெரிய சிலையான
பட்டேல் சிலைக்கு ஓ போடுங்க...
No comments:
Post a Comment