திரிபுராவில் வேறூன்ற வைக்கும் வெற்றி-
திரிபராவில் கிராம பஞ்சாயத்துபஞ்சாயத்து சமிதி மற்றும் ஜில்லா பரிஷத் போன்ற உள்ளாட்சி அமைப்பு களுக்கான இடைத்தேர்தல் கடந்த 30
ம் தேதி நடைபெற்றது. சும்மா இல்லைங்க..,3384
பதவிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்று உள்ளது
ஒரு இடம் 2 இடம் என்றால் யாராவது இறந்து
இருப்பார்கள்.அதனால் இடைத்தேர்தல் வருகிறது
என்று தினைக்கலாம்.ஆனால் 3384 பதவிகளுக்கு
இடைத்தேர்தல் என்றால் என்ன நடைபெற்று இருக்கும் என்று யோசித்து பாருங்கள்..
இந்த வருடம் மார்ச்சு மாதம் திரிபுராவில் பிஜேபி
ஆட்சிக்கு வந்தவுடன் பயந்து போன இடதுசாரிகள்
எதற்கு வம்பு என்று நிறைய உள்ளாட்சி பதவிகளை உதறி விட்டார்கள்.அதனால் தான் இவ்வளவு பதவி களுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.
இதில் சிறப்பு என்னவென்றால் தேர்தல் நடைபெறு வதற்கு முன்பே 3247 பதவிகளுக்கு போட்டியின்றி
பிஜேபி வேட்பாளர்கள் தேர்வாகிவிட்டார்கள் என் றால் திரிபுராவில் பிஜேபியின் சக்தியை அறிந்து
கொள்ளலாம்.
எஞ்சிய 137 பதவிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பிஜேபி 118 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
பிஜேபி யோடு கூட்டணி ஆட்சியில் இருந்து
கொண்டே தனித்துப்போட்டியிட்ட ஐபிஎப்டி 9
இடங்களிலும் 25 வருடங்களாக தொடர்ந்து ஆட்சி
யில் இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெறும் 6 இடங்களிலும் காங்கிரஸ் கட்சி 4 இடங்களிலும்
வெற்றி பெற்றுள்ளது.
ஆக உள்ளாட்சி இடைத்தேர்தல் நடைபெற்ற 3384
பதவிகளில் 3365 இடங்களை பிஜேபி கைப்பற்றி
யுள்ளது. இது கிட்டத்தட்ட 100 சதவீத வெற்றி என்றே கூறலாம். ஓரு கட்சியோட எழுச்சியை அதன் சட்ட
மன்ற பாராளுமன்ற தேர்தல் வெற்றிகள் தான்
அடையாளம் காட்டினாலும் உள்ளாட்சி அமைப்பு களில்அந்த கட்சி பெறும் வெற்றி் தான்அந்த கட்சி யின் வாழ்க்கையை தீர்மானிக்கும்.
ஏனெனில் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் தேர்வாகி
வரும் பிரதிநிதிகள் தான் மக்களிடையே நேரடியாக
தொடர்பில் இருப்பவர்கள். இவர்களின் சிறப்பான
செயல்பாடுகள் தான் அந்த கட்சியின் அரசியல்
வாழ்க்கையை தீர்மானிக்கிறது.கடந்த 25 வருடமாக
மார்க்சிஸ்ட் டுகள் திரிபுராவில் கோலோச்ச முக்கிய
காரணம் அனைத்து உள்ளாட்சி அமைப்பு களும்
அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது தான்.
எப்படி மார்க்சிஸ்ட் டுகள் திரிபுராவில் நிலை
கொண்டார்களோ அதே வழியில் ஆனால் அவர்க ளை காட்டிலும் மிக நேர்த்தியாக பிஜேபி திரிபுரா வில் தன்னுடைய அரசியல் கட்டமைப்பை அமைத்து வருகிறது.இதே நிலை தொடருமேயானால் மாணிக்
சர்க்காருக்கு பிறகு இடது சாரிகளை வழிநடத்த அடுத்த தலைவர் இல்லாத காரணத்தால் பிஜேபி யும் இடதுசாரிகள் மாதிரி ஒரு நீண்ட கால ஆட்சியை திரிபுராவில் அளிக்கும்.வாய்ப்புகள் உள்ளது
..
.
No comments:
Post a Comment