Thursday, 8 November 2018

பெட்ரோல் டீசல் விலை உயர்வு குறித்து கவலைப்படாமல் கை கட்டி வாய் பொத்தி நிற்க இங்கு நடப்பது ஒன்றும் கையாலாகாத காங்கிரஸ் அரசு இல்லை!.

பெட்ரோல் டீசல் விலை உயர்வு குறித்து கவலைப்படாமல் கை கட்டி வாய் பொத்தி நிற்க இங்கு நடப்பது ஒன்றும் கையாலாகாத காங்கிரஸ் அரசு இல்லை!.

இது ஓய்வறியா தேச பக்தனின் ஆட்சி...பொறுமையாகப் படியுங்கள்!

ஐய்யகோ பெட்ரோல் டீசல் விலை ஏறிடுச்சே... மத்திய அரசு வேடிக்கைப் பார்க்கிறதா..? முந்தைய ஆட்சியில் அவ்வளவு இருந்தது இந்த ஆட்சியில் இவ்வளவு இருக்கு என்று ஒரு சராசரி கையாலாகாத ஆட்சியை நடத்துபவன் தான் இப்படியெல்லாம் புலம்புவான். ஆனா இப்போது நாடு ஒரு தலை சிறந்த தேச பக்தனின் கைகளில்..!

இந்த நவம்பர் 4ம் தேதியேடு ஈரான் நாட்டினிடம் இருந்து எந்த நாடும் கச்சா எண்ணெயோ, வேறு எந்த வர்த்தகமோ, செய்யக் கூடாது என்று அமெரிக்கா கெடு நிர்ணையித்து உள்ளது.

இந்த கெடுவை ஒரு பொருட்டாவே மதிக்கவில்லை நமது பிரதமர் மோதிஜி. துணிந்து ஈரானுடன் எரிசக்தித் துறையில் பயணிக்க ரஷ்யா மற்றும் சீனாவுடன் பயணிக்க தயாராகிவிட்டது. ஈரானுடனான ஒப்பந்தத்தை நீட்டிக்கவும் முடிவெடித்துள்ளது.

அமெரிக்காவின் குள்ளநரித்தனம்:

இந்தக் கெடுவை மீறி இந்தியா, ரஷ்யா, சீனா செயல்பட்டால் அமெரிக்க துறைமுகம் அனைத்திலும் இந்த நாடுகளுக்கு அனுமதி இல்லை என்று தீர்மானம் நிறைவேற்றியது.

இந்த நாடுகளிலிருந்து வரும் கடல்வழி இறக்குமதிக்கு அமெரிக்கா அனுமதி தராது என்று மிரட்டியது. அமெரிக்காவின் இந்த கெடுபிடிக்கு பதிலடியாக ஈரானின் கடல் எல்லைக்குப் பாத்தியப்பட்ட Strait of Hormuz கடல் பகுதியை மூடப் போவதாக ஈரான் அதிரடியாக அறிவித்துள்ளது!.

இந்த கடல் பகுதியை அடைத்துவிட்டால் என்ன என்று கேட்கிறீர்களா?

இந்தியா, ஶ்ரீலங்கா கடல் பகுதியில் அமைந்துள்ள சேது சமுத்திர கடல் பகுதிக்கு ஒப்பானது இந்த கடல் பகுதி. மிகவும் குறுகியக் கடல் பகுதியாகும். இந்த வழியில்தான் அரபு நாடுகளில் இருந்து உலக நாடுகளுக்கு கச்சா எண்ணெய் கடல் போக்குவரத்தாக கொண்டு செல்லப்படுகிறது.

ஒட்டு மொத்த கடல்வழி 8. எண்ணெய் போக்குவரத்தில் 20% இந்த வழியாகத்தான் நடந்தாக வேண்டும். அதுவும் அமெரிக்காவிற்கு செல்லும் எண்ணெய் போக்குவரத்து இந்த வழியாகத் தான் சென்றாக வேண்டும். ஆக அமெரிக்காவால் அரபு நாடுகளில் இருந்து எந்த இறக்குமதியும் செய்ய இயலாது. அவ்வளவு பெரிய அமெரிக்கா தம்மாத்துண்டு இடுக்கில் மாட்டிக் கொண்டது.

மீண்டும் அமெரிக்கா சவடால்:

ஈரானின் இந்த அறிவிப்பைக் கேட்டதும் அமெரிக்கா ஈரான் Strait of Hormoz கடல் பகுதியை அடைத்தால் ஈரான் மீது அமெரிக்க கடற்படை போர் தொடுக்கும் என்று அறிவித்தது.

அமெரிக்காவின் இந்த சவடாலை இந்தியாவும் இரஷ்யாவும் தவிடு பொடியாக்கும் விதத்தில் நாங்கள் ஈரான் பக்கம் இருக்கிறோம் என்று கூட்டாக அறிவித்தன. ரஷ்யா அதிபரின் சமீபத்திய இந்திய வருகையும் இது குறித்தே.

அமெரிக்காவின் குடியரசு தின வருகை மறுப்பும் இந்த காரணத்தால்தான். அமெரிக்கா ஈரானை எதிர்த்தால் நாங்கள் அமெரிக்காவை இராணுவ பலம் கொண்டு எதிர்க்க நேரிடும் என்று அமெரிக்காவை எச்சரித்துக் கொண்டிருக்கிறது.

இதனால் இந்தியாவிற்கு என்ன இலாபம்..?

நாம் அனைத்தையும் டாலர்களில் தான் வர்த்தகம் செய்கிறோம். முக்கியமாக அதிகமாக இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் முழுக்க முழுக்க டாலர்களில் தான் இறக்குமதி செய்யப்படுகிறது.
இதனால் தான் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நாளுக்கு நாள் சரிந்து வருகிறது. சரிந்து வரும் இந்திய ரூபாய் மதிப்பை மீட்க நாம் அமெரிக்க டாலர்களில் உள்ள பரிவர்த்தனையை நிறுத்த வேண்டும். என இந்தியாவில் மோடி முடிவெடுத்தார்.

ஈரானுடனான முக்கியமான ஒப்பந்தம் என்ன..?
அமெரிக்க டாலரின் மதிப்பைக் குறைக்கவே ஈரானுடனான வர்த்தகத்தை ஊக்குவித்தது இந்தியா. இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் மொத்த கச்சா எண்ணெயில் ஈரானின் பங்கு 85% ஆகும்.

இந்த பரிவர்த்தனை அனைத்தையும் இந்திய ரூபாயில் நிகழும் வண்ணம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதுதான் அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு தேச பக்தன் மோடியால் கொடுக்கப்பட்ட முதல் சம்பட்டியடி..!

இதன் மூலம் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நன்கு ஏற்றத்தை காண்கிறது. ஏன் எனில் நமது பெருமளவிலான சர்வதேச பரிவர்த்தனை இந்திய ரூபாயில் நிகழவிருக்கிறது. அமெரிக்க டாலர் சரிந்தால் பெட்ரோல் டீசல் விலை சரியும். கச்சா எண்ணெய் சந்தையை நமது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முடியும்.

இந்தியா, ரஷ்யா, ஈரான் நாடுகளின் இந்த வரலாற்று சிறப்பு மிக்க நகர்வின் மூலம் அமெரிக்கா தனது ஏகாபத்தியத்தை இழக்கப் போவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

தனி மரமாய் அமெரிக்கா:

முன்பைப் போல அமெரிக்காவிற்கு ஏதாவது ஒன்று என்றால் இங்கிலாந்து மற்றும் ஜெர்மனியால் இந்த விசயத்தில் ஒன்றும் செய்துவிட முடியாது!.

ஏன் எனில் அந்த நாடுகளுக்கு கச்சா எண்ணெய் அத்தியாவசியமாகும். ஈரான் Strait of Hormuz கடல் வழியை அடைத்துவிட்டால் இந்த நாடுகளும் அதிகம் பாதிக்கும்!.

மோதிஜியின் ஈரான் மற்றும் ரஷ்ய பயணங்கள்:

20/05/2016 முதல் 23/05/2016 மோதிஜியின் ஈரானின் பயணம் உட்கட்டமைப்பு, எரிசக்தி ஒப்பந்தம் நீட்டிப்பு, மற்றும் இருதரப்புப் வர்த்தக பரிவர்த்தனை குறித்த ஒப்பந்தம் ஏற்படுத்துதல் போன்றவைக்காகத்தான். எரிசக்தித் துறை ஒப்பந்தத்தை பற்றி தீர்க்கமான நடவடிக்கை எடுக்கவே மோதிஜி அவர்கள் 5க்கும் மேற்பட்ட முறை ரஷ்ய பயணத்தை மேற்கொண்டார்!.

இதன் விளைவாகவே அமெரிக்காவிற்கு ஈரானைக் கொண்டு இந்த செக்கை வைத்துள்ளது இந்தியா. இதில் மோதிஜி பெரும் வெற்றியை பெற்றுவிட்டார்.

டாலர் மதிப்பைக் குறைக்க இந்தியா உள்நாட்டு கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிட்டது.இங்குள்ள உள்நாட்டு கூமுட்டைகளை தூண்டிவிட்டு அதை தடுக்க நினைத்தது அன்னிய சயனைடுகள். அது புரியாமல் இங்கிருக்கும் மக்களே புதிய திட்டம் எதையும் ஏற்க மறுப்பு தெரிவித்தன.

காரணமாக இயற்கை வளத்தை காரணம் காட்டின. சுதேசியை, மேக் இன் இந்தியா போன்ற சுதேசித் திட்டத்தை ஏற்படுத்தியது இந்தியா. அதையும் கூமுட்டைப் போராளிகள் மூலமாக நக்கலடித்தது அன்னிய சக்திகள்..!

மோதிஜியின் அயல்நாட்டுப் பயணங்களையும் சகட்டு மேனிக்கு நக்கல் அடித்து விமர்சனம் செய்தார்கள். பண விரயம் பண விரயம் என்று கொக்கரித்தார்கள். இது போன்று ஆயிரம் ஆயிரம் தடைகளை உருவாக்கினர்கள்.

தேசத் தலைமகனான மோதிஜிக்கு தேச நலனே முக்கியம். அதனால் தான் எந்த வகையிலாவது அமெரிக்காவின் டாலருக்கு நிகரான இந்திய மதிப்பை உயிர்த்தியே தீருவேன் என்று சபதம் ஏற்று ரஷ்யா மற்றும் ஈரானுடன் இந்த வரலாற்று சிறப்பு மிக்க முடிவை எடுத்து அதில் வெற்றியும் கண்டு இருக்கிறார். எத்தனை தடைகள் வந்தாலும் தேசிய நலன் ஒன்றே குறிக்கோள் என்று அல்லும் பகலும் பாரத பிதாமகன் மோதிஜி அவர்கள் உழைத்துக் கொண்டிருக்கிறார்.

அமெரிக்காவின் டாலர் நம் கண்முன்னால் சரிந்து விழும் காலத்தை கண்குளிரப் பார்க்கப் போகிறோம். பெட்ரோல் டீசல் விலையும் அபாரமாக குறைகிறது. அதையும் நாம் காண்கிறோம்.!

மக்களும் அமெரிக்க மோகத்திலிருந்து விடுபடப் போகிறார்கள்..!

Varadharajan Ramanathan - Legally Yours

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...