Old but time to remember..
Courtesy : Maridhas M
ரபேல் போர் விமானம்(rafale jet ) வாங்குவதில் பிஜேபி விதிமுறைகளை மீறி நடந்து கொண்டது என்று ராகுல் குற்றசாட்டு; இந்தியாவுக்கு தொழில்நுட்ப பரிமாற்றம் இல்லை என்று மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி சரமாரி கேள்வி. இதற்கு மாரிதாஸ் பதில் என்னவோ? {ஜெய முருகன்}
2007ஆம் ஆண்டுக்கு முன்பிருந்தே நமது IAF(Indian Air Force) தேவைகளில் முக்கியமான தேவைகளில் ஒன்று Multi-Role Combat Aircraft தேவை இருக்கிறது. இது அதி முக்கியமான தேவைகளில் ஒன்று இந்திய விமானபடையை பொறுத்தவரை.
அது ஏன்?
உலகத்தின் மிகப்பெரிய ராணுவபலம் கொண்ட நாடுகளில் 4வது இடத்தில் இருக்கும் நம்மிடம் போதுமான அளவில் ஏவுகணை தொழில் துட்பங்கள் உண்டு. அத்துடன் அணுஆயுத பலமும் கொண்ட நாடு. பிரச்சனை நம்மிடம் aerospace industry அது சார்ந்த தொழில் நுட்பம் பெரிய முன்னேற்றம் கிடையாது. அதற்கான ஆராய்ச்சிகளை எடுத்து நடத்த HAL(Hindustan Aeronautics Limited) உண்டு.
இன்றைய நிலையில் நமது நாட்டிற்கு 1962களில் சீனாவுடன் ஏற்பட்ட யுத்தம் போல் ஒன்று வரும் என்றால் - அதனை எதிர்கொள்ள பெரும் படையும் உண்டு ஏவுகணைகளும் உண்டு. ஆனால் அதனை சரியாக பயன்படுத்த போர் விமானங்கள் அதிகம் நம்மிடம் கிடையாது. இந்தவகை Multi-Role Combat Aircraft இரவில் கூட ஏவுகணைகளை எடுத்து சென்று தாக்கும் வல்லமை கொண்டவை.
எனவே 2010-2012ல் நாம் Indian MRCA competition நடத்தினோம், உலக அளவில் போர் விமானங்கள் செய்யும் தலை சிறந்த அனைத்து நிறுவனங்களும் கலந்து கொண்டன. அந்த போட்டியில் வெற்றியை வைத்து தகுதியான போர் விமானத்தை வாங்குவது என்பது நமது ராணுவத்தின் திட்டம். அதில் Dassault Rafale (பிரான்ஸ்), Eurofighter Typhoon, Boeing-Martin F-16(அமேரிக்கா), RAC-MiG(ரஷ்யா), Saab(சுவீடன்) போன்ற போர் விமானங்கள் கலந்து கொண்டன- அதில் வெற்றியடைந்தது Rafale, எனவே விமானத்தை வாங்குவது என்று முடிவானது.
{மீண்டும் கூறுகிறேன் 2007களில் உருவான தேவைக்கு இறுதியாக முடிவு 2012ல் தான் ஒரு தெளிவு கிடக்க, இதுவும் கிடப்பில் போடபட்டது. அன்றைய காங்கிரஸ் அரசின் மீது எழுந்த தொடர் ஊழல் பிரச்சனைகளால் (2G,நிலக்கரி, காமன்வெல்த்) திமுக போன்ற கட்சிகள் ஊழல் பிரச்சனையை சமாளிப்பதே நம்ம அன்றைய மன்மோகன் அரசுக்கு முழு நேர வேலை ஆகி விட இந்த திட்டத்தை சரியாக எடுத்து செயல்படுத்த முடியாமல் கிடப்பில் வீழ்ந்தது. }
2012 காங்கிரஸ் அரசு ஆட்சி முடியும் காலத்தில் அவசரகதியில் திட்டம் அனுமதி அளித்தபோது 126விமானங்கள் வாங்குவது - அதில் 34 பறக்கும் நிலையில் வாங்குவது என்று தெரிவித்தார்கள். அந்த 34விமானம் வாங்கும் மொத்த விலை வெளியானது. அதன் விவரம் இந்த லிங்க் சென்று பார்க்கவும்.
https://www.dassault-aviation.com/wp-content/blogs.dir/2/files/2013/05/EN_30062012_Avis_financier.pdf
அதன்படி விலை நிர்ணயம் மீண்டும் குழப்பம் உருவாக்கி கிடப்பில் வீழ்ந்தது. ஒரு தொடர் பேச்சுவார்த்தை முடிவு எடுப்பதில் தாமதம் சிக்கல் என்று நீண்டுகொண்டே இருந்த இந்த விஷயத்தை - ரூ.64,000 கோடி என விலை நிர்ணயிக்கப்பட்டிருந்த இந்த ஒப்பந்தம் இன்று ரூ.59,000 கோடிக்கு குறைக்கபட்டு , Make in india திட்டத்தின் கீழ் 108விமானங்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கவும் முடிவாகியுள்ளது - அதற்கு உதவவும் dassault-aviation நிறுவனம் சம்மதம் தெரிவித்துள்ளது.
{இது வெறும் விமானம் மட்டும் அல்ல அந்த விமானம் ஓடுதளம் , பராமரிப்பு , வீரர்களுக்கு பயிற்சிகள் என்று ஆயிரம் விஷயம் அதனை சுற்றி உள்ளது.}
{இன்னொரு முக்கியமான விவரம் புரிந்து கொள்ளுங்கள்:
மோடி புல்லட் ரயில் திட்டத்திற்கு தொடர் பேச்சுவார்த்தை மூலம் 0.1 interest மூலம் கடன் பெற்றார். ஆனால் மன்மோகன் காலத்தில் அது 2012ல் 1.40interest டெல்லி மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு இதே ஜப்பான் நிறுவனம் வழங்கியது நியாபகத்தில் கொள்ளவும். ஆட்சி திறமை என்பது யார் வந்தாலும் இதே திட்டங்கள் தான் - ஆனால் அதனை எந்த விதம் யார் சிறப்பாக வேகமாக ஊழல் இல்லாமல் செய்கிறார்கள் என்பது தான் முக்கியம். }
இப்படி திட்டத்தை குறைந்த செலவில் , குறைந்த வட்டியில் என்று முந்தய காங்கிரஸ் அரசை விட திறமையுடன் - வேகமாக செயலபடுத்தும் போது என்ன இப்போ குறையை கண்டுபிடித்து விட்டனர் இதில்???? ஒரு தெளிவான அறிக்கை வேண்டாமல்லவா முதலில்????
குஜராத் தேர்தல் வருது எதையாது அதுவரை கிளப்பி விட்டு கொண்டே இருப்போம் என்று காங்கிரஸ் செயல்பட. இது தான் சாக்கு என்று கம்யூனிஸ்ட் அறிவாளிகள் - பேச ; அதை இந்த சீனாவின் அடிமை தி இந்து, NDTV ஊடகங்கள் எதோ பெரிய கண்டுபிடிப்பு போல் வெளியிட ஒரே கூச்சல்.
---------------------------------------
அப்போ சீதாராம் யெச்சூரி குற்றசாட்டுக்கு என்ன பதில்???? அவர் சொன்னது போல் இந்தியாவுக்கு தொழில்நுட்ப பரிமாற்றம் இல்லையே????
"no transfer of technology clause in the deal " ஆம்.. யாருயா இல்லைன்னு சொன்னா. சீதாராம் யெச்சூரி, NDTV மற்றும் தி இந்து கூட்டத்துக்கு என் கேள்வி - எந்த நிறுவனம் தனது தொழில் நுட்பத்தை அப்படியே உங்களுக்கு கொடுக்கும்??? உங்கள் பெரியண்ணன் சீனா கொடுப்பானா! ரஷ்யா????
அர்த்தம் என்னவென்றால் - அந்த விமானம் எப்படி தயாரிப்பது என்ற தொழில் நுட்பத்தை அந்த நிறுவனம் நமக்கு கொடுக்காது என்று குற்றம் சாட்டுகிறார். இதே குற்றசாட்டை தான் புல்லட் ரயில் விவகாரத்திலும் இந்த அறிவாளி கம்யூனிஸ்ட் கூறினார்.
தயவு கூர்ந்து அரசியல் தாண்டி நிர்வாக விவரமாக இதை புரிந்து கொள்ளுங்கள் :
சிம்பிளா சொன்னால்,
நிங்கள் ஒரு புதியவகை கம்யூட்டர் கண்டுபிடிக்க , அதை மற்ற நாடுகளில் நிறுவனங்கள் விரும்ப - 80% அதன் screen monitor , keyboard , cable எல்லாம் சொல்லி கொடுப்பீர். ஆனால் அதன் micro processor தொழில் நுட்ப விவரங்களை பகீர மாட்டீர். அது பல ஆயிரம் கோடி ஆராச்சிக்கு செலவு செய்து கண்டுபிடித்த தொழில் நுட்பம். அது தான் உங்கள் நிறுவனத்தின் சொத்து. அதை யாரிடமும் பகீர கூடாது. அதை பகிர்ந்து கொள்ள கூறுவதும் வடிகட்டிய முட்டாள்தனமான பேச்சு. சரிதானே????
இது புரிகிறதா????
இதே தான் இந்த Rafale விமான உற்பத்தி செய்வதில் 70%நமது உள் நாட்டு நிறுவனமான HAL பங்கேற்கும். ஆனால் முக்கியமான அதன் தொழில் நுட்பம் மட்டும் அந்த நிறுவனமே மேற்கொள்ளும். இது மிக மிக நியாயமான கோரிக்கை தான்.
அதே நேரம் முழுவதும் மற்ற நாட்டில் உற்பத்தி ஆவது உள்நாட்டு உற்பத்தியை அதன் திறனை வீழ்த்தும் என்பதால் - தொழில் நுட்பம் தவிர்ந்த அனைத்து பாகங்களும் இந்தியாவில் நமது make in india திட்டத்தின் கீழ் நம் நாட்டு நிறுவனங்கள் செய்யும் என்று இரு நாட்டுக்கும் பயனுள்ள வகையில் ஒப்பதந்தம் முட்க்கபட்டுள்ளது.
10வருடம் இழுத்து அடிச்சது - ஒரு திட்டத்தை ஒழுங்கா நேரத்துக்கு முடிக்க வக்கு இல்லாத காங்கிரஸ் இந்த ஒப்பந்தத்தை பேச தகுதி கிடையாது. அடுத்து கம்யூனிஸ்ட் தயவு கூர்ந்து வாயை மூடுங்க.. தொழில் நுட்பம் சீனா கொடுப்பானா என்று கொஞ்சம் கேட்டு சொல்லுங்க பின்ன வாயை திறக்கவும்.
---------------------------------------------
அனைவரும் இதை கொஞ்சம் யோசிக்கவும்:
நமது இந்தியா தனது பிரமோஸ் ஏவுகணையை(BrahMos) வியட்நாம் நாட்டிற்கு விற்பதாக பேச்சு வார்த்தை நடக்கிறது. அதற்காக பிரமோஸ் ஏவுகணையை (BrahMos) தொழில் நுட்பத்தை அந்த நாட்டுக்கு கொடுத்து விடுவீரா என்ன????
நமது ஆராய்ச்சியாளர்கள் பல நாள் உழைப்பில் உருவாக்கிய பிரித்வி( Prithvi),ஆகாஸ்( Akash), அக்னி( Agni) என்று பல ஏவுகணைகள் இருக்கு அதன் தொழில் நுட்பத்தையும் கொடுத்துருங்க நாடு விளங்கிரும். ISRO பல நாடுகளின் செயற்கைகோளை விண்ணுக்கு அனுப்புகிறது அந்த தொழில் நுட்பத்தை கொடுத்துவிடுவோமா????
இன்னும் ஒரு படிமேல் வாங்க - உங்கள் ONGCநிறுவனம் கடந்த 10வருடம் மேலாக ஏறக்குறைய 17 நாடுகளில் அவர்களுக்கு எரிவாயு ,எண்ணெய் எடுத்து கொடுக்கும் வேலையை செய்து கொடுக்கிறது. பிரசில் , கொலம்பியா , லிபியா , மியான்மர் , சூடான் , வியட் நாம் போன்ற நாடுகளுக்கு ஏன் எந்த தொழில் நுட்பத்தை பகிர்ந்து கொள்ளவில்லை????
அது தான் விசயம். எந்த நாடும் தனது நாட்டின் தொழில் நுட்ப கண்டுபிடிப்பை முழுமையாக அடுத்த நாடுகளுக்கு கொடுக்காது. அப்படி எதிர்ப்பார்ப்பது முட்டாள்தனம்.
ஆம் no transfer of technology clause in the deal தான். இது இன்று நேற்று அல்ல , இந்திய சீனா அல்ல ; அனைத்து நிறுவனமும் நாடும் செய்யும் மிக மிக அடிப்படையான விசயமே இதை விவாதம் ஆக்குவது திட்டமிட்ட குழப்பும் வேலை.
------------------------------------------------
திட்டம் என்ன ? அதன் தேவை என்ன ? அது எப்படி செயல்படுத்தபடுகிறது? அதை முந்தய அரசு எப்படி கையாண்டது ??? இந்த எந்த அறிவும் இல்லாத சதா மோடி மோடி மோடி என்று வெறுப்பு பிரச்சராம் செய்யும் கூட்டம் ஒன்று இங்கே இருக்கு. அது இந்த திமுக , கம்யூனிஸ்ட் ,விசி , சில மதம் மாற்றும் அமைப்புகள்.
இவனுகளுக்கு இது எதோ புதிதாக எதையோ கண்டுபிடிச்சது போல மோடி ஊழல் என்று ஆரம்பித்தவிட்டார்கள். ஏதாது மோடிக்கு எதிரா கிடைகாதாணு அலையுறாங்க பாவம் என்ன பண்ணுவாங்க.
12வருட ஆட்சியில் கொள்ளை அடிச்சு தன் குடும்பத்தை கோடிஸ்வரர்களாக ஆக்க தெரியாத இந்த பிழைக்க தெரியாத மோடி - இப்போ இந்த ரபேல் விமான ஒப்பந்தத்தில் ஊழல் செய்து சொத்து சேர்க்க போறார். சத்துயமா இதைஎல்லாமா நம்புகிறீர்??? இப்படி நம்புவதால் தான் திமுக இன்னும் இங்கே ஆட்சியை பிடிக்க முடிகிறது.
NDTV - தி இந்து- விகடன் - கம்யூனிஸ்ட் கூட்டணி ஒன்று போதும் நாட்டை நாசம் செய்ய.
-மாரிதாஸ்
No comments:
Post a Comment